இன்றைய கவிதை மணியில் என் கவிதை!
தினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் கவிதை!
தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி குழுமம்! உற்சாகமூட்டும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், தமிழகவலைப்பதிவாளர் குழுமம், மற்றும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! கவிதையை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்! நன்றி!

வானவேடிக்கை!: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 23rd October 2017 03:12 PM | அ+அ அ- |
சீறி உயரே பறக்கும் வெடிகள் சிறு மத்தாப்புக்களாய் சிதறி கண்ணைக் கவரும்! உயரே உயரே எழுந்து வெடித்துப் பூக்கையில் கந்தக மணமும் கவனத்தில் ஈர்க்கும்! சிந்தனைச் சிதறல்களை நிறுத்தி வைத்து பட்டாசு சிதறல்களை பார்க்கையில் பறவை போல பறக்கிறது மனசு! தாத்தாப் பாட்டிகளைக் கூட சிறுவயதிற்கு அழைத்துச்செல்கிறது உயரே கிளம்பி ஒளிரும் வெடிகள்! வான் தூவும் வண்ண பூச்சிதறல்கள் பொறுக்கத்தான் முடிவதில்லை! காதைப் பிளக்கும் வெடிச்சத்தம் கண்ணைக் கவரும் ஒ(வெ)ளிச்சத்தில் கரைந்து சந்தோஷப் பூக்களை பூக்கிறது! கந்தக வெடிகள் காற்றில் மாசு எழுப்பினாலும் தொழிலாளர்களின் உழைப்பு முன் தூசாகிறது! வானில் ஓர் வர்ண ஜாலம்! ஒளிரும் பூக்கள்! மிளிரும் அழகு! புவியே ரசிக்கும் புதுப்புது ஜாலம்! வாணம் வானம் சென்று காட்டும் வண்ணமிகு கோலம் கோஷம்! அவனியே ரசிக்கும் அழகு வேடிக்கை!
Comments
Post a Comment