இன்றைய கவிதை மணியில் என் கவிதை!

இன்றைய கவிதை மணியில் என் கவிதை!

தினமணி கவிதை மணி இணையதளத்தில்   நிசப்த வெளியில் என்ற தலைப்பில் இன்று என் கவிதை வெளியாகி உள்ளது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி குழுமத்திற்கும் எழுத உற்சாகமூட்டும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்திற்கும் தமிழக வலைப்பதிவாளர்கள் குழுமத்திற்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

பதிவினை படித்து கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே! நன்றி!


நிசப்த வெளியில்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 14th October 2017 06:27 PM  |   அ+அ அ-   |  
ஓயாத சப்தங்கள்!
வாகன இரைச்சல்கள்!
ஒலிப்பெருக்கியின் அலறல்கள்!
தொலைக்காட்சியின் அழுகைகள்!
குழாயடிச் சச்சரவுகள்!
சந்தை இரைச்சல்கள்!
இவையெல்லாம் தாண்டி
ஒர் வெளி! அது நிசப்த வெளி!
நிசப்த வெளியில் அமருங்கள்!
வெளிச்சத்தத்தை வாங்காது உள் ச(சு)த்தத்தை 
எழுப்பும் உன்னத வெ(ஓ)ளி
உங்களைச்சுற்றி ஆயிரம் நடப்பினும்
காதில் வாங்காதீர்கள்!

காதினை அடைத்துவிடுங்கள்!
மனதினை திறந்து வையுங்கள்!
மனம் முழுதும் ஒளி பரவட்டும்!
ஒளிவீசி வெளிச்சம் பரவுகையில்
நிசப்த வெளியில் நிச்சலமாய்
தோன்றுவார் கடவுள்!
ஆம்! ஆயிரம் ஓசைகள்
அலைகழிக்கையில் அதையெல்லாம்
கடந்து அமைதியாக தியானிக்கையில்
நம்முள் அமர்கிறார் கடவுள்!
மனம் லேசாகும்!

அழுக்குகள் விலகும்!
அமைதி பிறக்கும்!
சத்தங்கள் ஓயாத பூமியில்
நிசப்தம் ஏது? நீ நினைத்தால்
உருவாக்கலாம் நிசப்தவெளி!
அது உன் மனதைக் கட்டுவது!
மனம் கட்டுண்டால் உண்டாகும்
நிசப்தவெளி!
நிசப்தவெளியில் பயணித்தால்
நிச்சயம் கிடைக்கும் மகிழ்ச்சி!

Comments

  1. வாழ்த்துக்கள் அருமை...

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சுரேஷ் கவிதை மணியில் தங்களின் இந்த அழகான கவிதை வெளியானமைக்கு..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2