இன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!

தினமணி கவிதை மணி இணையதளத்தில் இன்று என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி ஆசிரியர் குழுவினர் மற்றும் தினமணி குழுமத்தினருக்கு நன்றி!


தீ தின்ற உயிர்! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 28th October 2017 03:58 PM  |   அ+அ அ-   |  
தீயின் நாக்குகளை விட
தீட்சண்யமாக்கி விட்டு சென்றிருக்கிறது
கந்துவட்டி!
கந்தை வேட்டி உடுத்தும்
ஏழைக்கு ஆசைக்காட்டி மோசம்
செய்திருக்கிறது கந்துவட்டி!
நூற்றுக்கு நூறு வட்டி
வாங்கிய பின்னும் தீரவில்லை அசல்!
அதனால் உயிராடியது ஊசல்!
ஆட்சியாளர்கள் காத்துக் கொண்டார்கள்
தங்கள் ஆட்சியை!
தடுக்கவில்லை கந்துவட்டி கும்பலின்
ஆட்சியை!
கொஞ்சம் மண்ணெண்ணெயும் ஒரு தீப்போறியும்
நாலு பேரை பற்ற வைத்து
காட்சியாக்கி தமிழகத்திற்கு
தந்திருக்கிறது பேரதிர்ச்சியை!

தீ தின்ற உயிர்கள்!
கேட்பதெல்லாம் கந்து வட்டி
அரக்கனிடமிருந்து
மீட்சியை!

மீட்டெடுக்க அரசு செய்யுமா
முயற்சியை?
தீ தின்ற உயிர்
தீயாய் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது
லட்சக்கணக்கான
தமிழர்களின் நெஞ்சை!
நெறிக்க வேண்டும்
கந்துவட்டி அரக்கனின் நெஞ்சை!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. கந்து வட்டியின் கொடுமை சொன்ன நற்கவிதை.

  ReplyDelete
 2. கோபத்தை தெரிவிக்கும் கவிதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. முதல் மூன்று வரிகளே தீ பிடித்து எரிகிறது...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் சகோதரா.

  ReplyDelete
 5. வாழ்த்துகள் சுரேஷ்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!