”பஞ்ச்”சர் பாபு- பகுதி 2
சென்ற மாதம் நான் எழுதிய சில பஞ்ச்களை தொகுத்து வெளியிட்டேன். தொடர்ந்து வெளியிட முடியவில்லை. தமிழ் இந்து நாளிதழ் வெளியிடும் பஞ்ச்சோந்தி பராக் பகுதிக்கு அனுப்பும் பஞ்ச்கள் சிலவற்றை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன். இவை நாளிதழில் வெளியாகவில்லை! உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள் நண்பர்களே!
இந்த பஞ்ச்கள் அக்டோடபர் 4ம் தேதி முதல் அக்டோபர் 11 வரை எழுதப்பட்டவை!
செய்தி: ரஜினி அரசியலுக்கு வந்தால் நிறைய மாற்றங்கள் நடக்கும்: லதா ரஜினிகாந்த் கருத்து
இந்த பஞ்ச்கள் அக்டோடபர் 4ம் தேதி முதல் அக்டோபர் 11 வரை எழுதப்பட்டவை!
செய்தி: ரஜினி அரசியலுக்கு வந்தால் நிறைய மாற்றங்கள் நடக்கும்: லதா ரஜினிகாந்த் கருத்து
பஞ்ச்: அதனாலதான் “ஏமாற்றத்தையே ”தந்துகிட்டு இருக்கிறா மேடம்!
செய்தி: மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார்: நடிகை சுஹாசினி
பஞ்ச்: நீங்க சினிமாவுக்கு வந்த விபத்தையே தாங்கிகிட்ட மக்கள் இதையும் தாங்கிப்பாங்க!
செய்தி: கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம்: அர்ஜுன்
பஞ்ச்: “ஃபைன்” நடவடிக்கைங்கிறது இதுதான்!
செய்தி: மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது: முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
பஞ்ச்: முக்கியமா “கரசேவகர்களை” விட்டுட்டீங்களே !
பஞ்ச்: என்னை சொல்லலீயேன்னு ஆளுநர் கோவிச்சுக்க போறாரு!
செய்தி: வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகாது : விஷால்
பஞ்ச்: தமிழ் ராக்கர்ஸிலேயுமான்னு மக்கள் கேக்கறாங்க அண்ணே!
செய்தி: நடராஜனை காப்பாற்ற செய்த அதிவேக ஏற்பாடுகளை ஜெயலலிதாவுக்கு ஏன் செய்யவில்லை?- தமிழிசை
பஞ்ச்: உயிர் பிழைக்க வைக்கத்தான் டாக்டர்களாலே முடியும்! உயிர் கொடுக்க முடியாதுன்னு உங்களுக்கே தெரியாதா மேடம்?
செய்தி: பள்ளிகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் -செங்கோட்டையன்
பஞ்ச்: ஸ்டூடண்ட்ஸ்களுக்கு இது தீபாவளி treet டா இருக்கும் போலிருக்கே!
செய்தி: எதிர்காலத்தில் அதிமுக எங்கே இருக்கும் என்றே தெரியாது : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
பஞ்ச்: “தாமரைக்குள்ளே மறைச்சிடுவீங்களா ஜி!
பஞ்ச்: நிகழ்காலத்திலேயே உங்களுக்கு அட்ரஸ் பி.பி யா இருக்கே ஜி!
செய்தி:
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும்: ஆளுநரிடம் விஜயகாந்த் நேரில் கோரிக்கை
பஞ்ச்: தோ பாருடா! நானும் ரவுடிதான்னு ஒருத்தன் வாலண்டியரா வந்து வண்டியிலே ஏறுரான்னு கவர்னர் மயங்கி விழுந்துட்டாராமேண்ணே!
செய்தி: நான் மக்களுக்கு விளம்பரம் இல்லாமல் நல்லது செய்கிறேன் - விஜயகாந்த் |
பஞ்ச்: அதான் “ பம்பரமா” சுத்தியும் அடிக்கடி “அபீட்” ஆகிடிறீங்களா கேப்டன்!
பஞ்ச்: முரசோட “வார்” அறுந்து போச்சுன்னா சத்தம் வராதுதான்!
செய்தி: ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம்: எடப்பாடி பேச்சு
பஞ்ச்: இரட்டை இலைக்கு காவி பூசி
பிழைத்துக்கொண்டிருப்பதாக மக்கள் பேசிக்கிறாங்களே!
செய்தி: ஏடிஎம் கார்டு முடங்கியதால் காஞ்சி கோயிலில் யாசகம் கேட்ட ரஷ்ய இளைஞர்
பஞ்ச்: வழிப்போக்கர்களுக்கு கூட நம்ம ஊர் வழிகாட்டியா அமைஞ்சிருது!
பஞ்ச்: கார்டு காட்டாத வழியை “காட்” (god) காட்டியிருக்கார் போல!
செய்தி: எடப்பாடி தொப்பி போடாத எம்ஜிஆர் -அமைச்சர் தங்கமணி
பஞ்ச்: விட்டா நீங்க எல்லோரும் சேர்ந்து அவருக்கு “தொப்பி” போட்டுருவீங்க போலிருக்கே!
செய்தி:
மூன்று தலைமுறையாக அமேதிக்கு என்னதான் செய்தீர்கள்? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி!
பஞ்ச்: சுவரெல்லாம் “காவி” அடிக்காம பார்த்துக்கிட்டாங்களாம் ஜி!
செய்தி:
டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
பஞ்ச்: நீங்க “சின்னம்மா” கட்டுப்பாட்டில் இருந்த மாதிரியா?
செய்தி: 'டெங்கு' பாதித்தோருக்கு ரூ.2 ,000 : சுகாதார அமைச்சர் தகவல்
பஞ்ச்: கொசுவையும் “பணம்” கொடுத்தே விரட்டிடுவீங்க போலிருக்கே!
பஞ்ச்: அப்புறம் நிறைய பேருக்கு “பணக்காய்ச்சல்” வந்திரும் போலிருக்கே!
செய்தி:
செய்தி: அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சிரிக்க, சிந்திக்க வைக்கின்றன!
ReplyDeleteஸூப்பர் நண்பரே அனைத்தும் இரசித்தேன்.
ReplyDeleteஅட! அருமை சுரேஷ்! எல்லாமே நல்லாருந்துச்சு! ஊடகத்தில் மிளிர்வதற்கு வாழ்த்துகள் சுரேஷ்...
ReplyDelete//செய்தி: கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம்: அர்ஜுன்
ReplyDeleteபன்ச்களை ரசித்தேன். அது யார் அர்ஜுன்? நடிகர் அர்ஜுனா?
ரசித்தேன் நம்பர் போட்டு இருந்தால் எது ரொம்ப பிடித்தது என்று சொல்ல வசதியாக இருந்திருக்கும் 3,5,6
ReplyDeleteநல்ல பஞ்ச்.நல்ல பஞ்சர்...!
ReplyDeleteஅருமை... ரசித்தேன்...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.