Posts

Showing posts from October, 2017

இன்றைய இந்து எக்ஸ்ட்ரா பஞ்ச்சில் எனது பஞ்ச்

Image
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் எக்ஸ்ட்ரா பஞ்ச் பகுதியில் வெளியான எனது கருத்து. முதல் தகவல் தந்த டாக்டர் லக்‌ஷ்மணன் சாருக்கும் தெளிவான படம் அனுப்பிய சிவகுமார் நடராஜன் சாருக்கும் வாழ்த்துக்களை பரிமாறிய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழும நண்பர்களுக்கும் இந்து பத்திரிக்கை குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! மிக்க நன்றி!

இன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!

தினமணி கவிதை மணி இணையதளத்தில் இன்று என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி ஆசிரியர் குழுவினர் மற்றும் தினமணி குழுமத்தினருக்கு நன்றி! தீ தின்ற உயிர்! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By   கவிதைமணி   |     Published on :   28th October 2017 03:58 PM   |     அ+ அ  அ-     |   தீயின் நாக்குகளை விட தீட்சண்யமாக்கி விட்டு சென்றிருக்கிறது கந்துவட்டி! கந்தை வேட்டி உடுத்தும் ஏழைக்கு ஆசைக்காட்டி மோசம் செய்திருக்கிறது கந்துவட்டி! நூற்றுக்கு நூறு வட்டி வாங்கிய பின்னும் தீரவில்லை அசல்! அதனால் உயிராடியது ஊசல்! ஆட்சியாளர்கள் காத்துக் கொண்டார்கள் தங்கள் ஆட்சியை! தடுக்கவில்லை கந்துவட்டி கும்பலின் ஆட்சியை! கொஞ்சம் மண்ணெண்ணெயும் ஒரு தீப்போறியும் நாலு பேரை பற்ற வைத்து காட்சியாக்கி தமிழகத்திற்கு தந்திருக்கிறது பேரதிர்ச்சியை! தீ தின்ற உயிர்கள்! கேட்பதெல்லாம் கந்து வட்டி அரக்கனிடமிருந்து மீட்சியை! மீட்டெடுக்க அரசு செய்யுமா முயற்சியை? தீ தின்ற உயிர் தீயா...

இந்து ஆன் லைன் கார்டூனில் எனது கருத்துச் சித்திரம்!

Image
இந்து இணைய இதழில் எனது கருத்துச்சித்திரம் நேற்று இரவு வெளியானது. தொடர்ந்து எனது படைப்புக்களை வெளியிட்டு ஆதரவு இந்து குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்! முதலில் தகவல் தெரிவித்த பஞ்ச் மாஸ்டர் டாக்டர் கே. லக்‌ஷ்மணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த நட்புக்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் !

இன்றைய இந்து முகப்பு பஞ்சில் எனது பஞ்ச்!

Image
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் பகுதியில் எனது பஞ்ச் இடம்பெற்றது. முதல் தகவல் அளித்த ரேகா ராகவன் சாருக்கும் வாட்சப்பில் பதிந்து வாழ்த்திய சிவகுமார் நடராஜன் சாருக்கும் மற்றும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!   அவ்வப்போது என் படைப்புக்களை வெளியிட்டு ஆதரவளிக்கும் இந்து நாளிதழ் ஆசிரியர் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்! பஞ்ச் உங்கள் பார்வைக்கு! பதிவை வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!

இன்றைய இந்து மாயாபஜார் சிறுவர் பகுதியில் என் கதை!

Image
இந்து மாயாபஜார் சிறுவர் பகுதியில் இன்று என்னுடைய கதை இடம்பெற்றுள்ளது. இது 20ம் தேதியே ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. அப்போது முகநூலில் பகிர்ந்து கொண்டேன்.  நான் அனுப்பியதை கொஞ்சம் எடிட் செய்து மாற்றி வெளியிட்டுள்ளார்கள். இந்த கதை உங்களின் பாராட்டுக்களை ஏற்கனவே பெற்ற ஒன்றுதான். மீண்டும் படித்து ரசித்து மகிழுங்கள்! உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! வெளியிட்ட இந்து பத்திரிக்கை குழுமம் ஆசிரியர் குழுவினருக்கும் முதல் தகவல் தந்த சின்னஞ்சிறு கோபு சார், இமேஜ் பதிவு தந்த திருவாளர்கள் முத்துஆனந்த், ஏந்தல் இளங்கோ  அவர்களுக்கும் நன்றி! வாட்சப்பில் வாழ்த்துக்கள் பரிமாறிய அனைத்து தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

பஞ்ச்”சர் பாபு- பகுதி 3

தி- இந்து தமிழ் நாளிதழின் பஞ்ச்சோந்தி பராக் பகுதிக்கு தொடர்ந்து பஞ்ச்கள் அனுப்பி வருகிறேன். சில பிரசுரம் ஆகியிருக்கிறது. பல திரும்பி எனக்கே பஞ்ச்சாக வந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் விடாமுயற்சியோடு களத்தில் குதித்துள்ளேன். அக்டோபர் 12 முதல்  அக்டோபர் 20 வரை அனுப்பிய சில பஞ்ச்கள் உங்களின் பார்வைக்கு! 1. செய்தி:  டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமென்றால் ஈபிஎஸ் தலைமையிலான டெங்கு ஆட்சி ஒழிய வேண்டும்: ஸ்டாலின் பஞ்ச்: அ’டெங்க”  மாட்றீங்களே அண்ணே! 2. செய்தி:  பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு பஞ்ச்: உங்களுக்கும் ஈ.பி.எஸ்ஸுக்குமான உரசியல் குறித்தாவது பேசினீங்களா அண்ணே! 3  செய்தி:  'காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது': மாணவர்களுக்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவுரை!  பஞ்ச்: ’காந்தி’ போன பேச்சா இருக்குதே ஐயா! பஞ்ச்: ஆனா காந்தி படம் போட்ட ரூபா நோட்டெல்லாம் கடவுள்னும் சொல்லிக்கொடுங்க! 4. செய்தி:  வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது.. அமைச்சர் செல்லூர் ராஜு அடடே ஐடியா பஞ்ச்: 49 வது வட்டம் சார்பா...

இன்றைய கவிதை மணியில் என் கவிதை!

தினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் கவிதை! தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி குழுமம்! உற்சாகமூட்டும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், தமிழகவலைப்பதிவாளர் குழுமம், மற்றும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!  கவிதையை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்! நன்றி! வானவேடிக்கை!: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  23rd October 2017 03:12 PM   |    அ+ அ  அ-     |   சீறி உயரே பறக்கும் வெடிகள் சிறு மத்தாப்புக்களாய் சிதறி கண்ணைக் கவரும்! உயரே உயரே எழுந்து வெடித்துப் பூக்கையில் கந்தக மணமும் கவனத்தில் ஈர்க்கும்! சிந்தனைச் சிதறல்களை நிறுத்தி வைத்து பட்டாசு சிதறல்களை பார்க்கையில் பறவை போல பறக்கிறது மனசு! தாத்தாப் பாட்டிகளைக் கூட சிறுவயதிற்கு அழைத்துச்செல்கிறது உயரே கிளம்பி ஒளிரும் வெடிகள்! வான் தூவும் வண்ண பூச்சிதறல்கள் பொறுக்கத்தான் முடிவதில்லை! காதைப் பிளக்கும் வெடிச்சத்தம் கண்ணைக் கவரும் ஒ(வெ)ளிச்சத்தில் கரைந்து சந்தோஷப் பூக்களை பூக்கிறத...

”பஞ்ச்”சர் பாபு- பகுதி 2

சென்ற மாதம் நான் எழுதிய சில பஞ்ச்களை தொகுத்து வெளியிட்டேன். தொடர்ந்து வெளியிட முடியவில்லை. தமிழ் இந்து நாளிதழ் வெளியிடும் பஞ்ச்சோந்தி பராக் பகுதிக்கு அனுப்பும் பஞ்ச்கள் சிலவற்றை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன். இவை நாளிதழில் வெளியாகவில்லை! உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள் நண்பர்களே! இந்த பஞ்ச்கள் அக்டோடபர் 4ம் தேதி முதல் அக்டோபர் 11 வரை    எழுதப்பட்டவை! செய்தி:  ரஜினி அரசியலுக்கு வந்தால் நிறைய மாற்றங்கள் நடக்கும்: லதா ரஜினிகாந்த் கருத்து பஞ்ச்: அதனாலதான் “ஏமாற்றத்தையே ”தந்துகிட்டு இருக்கிறா மேடம்! செய்தி:  மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார்: நடிகை சுஹாசினி பஞ்ச்: நீங்க சினிமாவுக்கு வந்த விபத்தையே தாங்கிகிட்ட மக்கள் இதையும் தாங்கிப்பாங்க! செய்தி:  கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம்: அர்ஜுன் பஞ்ச்: “ஃபைன்” நடவடிக்கைங்கிறது இதுதான்! செய்தி:  மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது: முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு பஞ்ச்: முக்கியமா “கரசேவகர்களை” விட்டுட்டீங்களே ! ...

இன்றைய கவிதை மணியில் என் கவிதை!

இன்றைய கவிதை மணியில் என் கவிதை! தினமணி கவிதை மணி இணையதளத்தில்   நிசப்த வெளியில் என்ற தலைப்பில் இன்று என் கவிதை வெளியாகி உள்ளது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி குழுமத்திற்கும் எழுத உற்சாகமூட்டும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்திற்கும் தமிழக வலைப்பதிவாளர்கள் குழுமத்திற்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! பதிவினை படித்து கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே! நன்றி! நிசப்த வெளியில்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  14th October 2017 06:27 PM   |    அ+ அ  அ-     |   ஓயாத சப்தங்கள்! வாகன இரைச்சல்கள்! ஒலிப்பெருக்கியின் அலறல்கள்! தொலைக்காட்சியின் அழுகைகள்! குழாயடிச் சச்சரவுகள்! சந்தை இரைச்சல்கள்! இவையெல்லாம் தாண்டி ஒர் வெளி! அது நிசப்த வெளி! நிசப்த வெளியில் அமருங்கள்! வெளிச்சத்தத்தை வாங்காது உள் ச(சு)த்தத்தை எழுப்பும் உன்னத வெ(ஓ)ளி உங்களைச்சுற்றி ஆயிரம் நடப்பினும் காதில் வாங்காதீர்கள்! காதினை அடைத்துவிடுங்கள்! மனதினை திறந்து வையு...

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 94

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 94 1, தலைவரே கட்சியிலே நிறைய ஸ்லீப்பர் செல்கள் சேர ஆரம்பிச்சிட்டாங்க!    அதுக்கென்னய்யா இப்ப? தூங்கறதுக்கு வசதியா பாயும் தலையணையும் கேக்கறாங்க! 2. கட்சி இப்படி பல அணியா உடையும்னு தலைவருக்கு அப்பவே தெரிஞ்சிருக்கும் போலிருக்கு!    எப்படி சொல்றே? கட்சியோட சின்னமா கண்ணாடியைத் தேர்வு செய்து இருக்காரே! 3.  எதுக்காக எம்.எல்.ஏக்களை ரிசார்ட்ஸ்ல அடைச்சு வைக்கிறீங்க?     ஆட்சியை ரீ_ ஸ்டார்ட் பண்ணனுங்கிறதுக்காகத்தான்! 4. மேடையிலே பேசும் போது நம்ம தலைவர் நிறைய “அப்ளாஸ்” வாங்கினாராமே! அப்படி என்ன பேசி வாங்கினார்?   நீ வேற ராத்திரி சாப்பாட்டு பொறிச்சு தின்ன அப்பளம் வாங்கினதைத்தான் அப்படிச் சொல்லிக்கிட்டு திரியறார்! 5. தலைவர் கண்ணசைவிலே கட்சியை நடத்திக்கிட்டு இருந்தார்!     அப்புறம்? இப்போ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல தவிக்கிறார்! 6. எந்த விஷயத்தையும் அவசரப்படாம ஆறப்போடறதுல என் மனைவி ஸ்பெஷலிஸ்ட் தெரியுமா?   அதான் உன் வீட்டு டிபனும் காபியும் இவ்வளோ ஆறிப் ...

இந்த மாத கொலுசு மின்னிதழில் எனது ஹைக்கூக்கள்!

 கொலுசு இலக்கிய மின்னிதழை பற்றி அறிந்திருப்பீர்கள்! இந்த மாத மின்னிதழில் எனது இரண்டு ஹைக்கூக்கள் அம்மின்னிதழில் இடம்பெற்றுள்ளது. வலைப்பூ எழுத்தாளர் பூபாலன் அதன் ஆசிரியர் குழுவில் உள்ளார். வலைப்பூ எழுதும் கவிஞர்கள் நிறைய பேர் இதில் எழுதி வருகின்றனர். நானும் என் பங்களிப்பை இந்த மாதம் செய்துள்ளேன். நண்பர் ஹிஷாலியும் இதில் எழுதி வருகின்றார்.   மின்னிதழில் வந்ததை அப்படியே பிரிண்ட் எடுத்து பதிய இயலவில்லை! எனவே அதில் வந்த கவிதையை கீழே தந்துள்ளேன்.    உடைபட்டது    உழைப்பு!   கடலில் பிள்ளையார்!    அகலமான சாலைகள்!     ஓடி ஒளிந்தது!     நிழல்! எனது படைப்புக்களை வெளியிட்ட கொலுசு மின்னிதழ் குழுமத்தினருக்கும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் முதல் தகவல் தந்த நண்பர் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!        

தினமணி கவிதை மணியில் வெளிவந்த என் கவிதை!

தினமணி கவிதை மணியில் இந்த வாரம் வெளியான எனது கவிதை. சென்றவாரம் வெளியூர் சென்றதால் எழுதவில்லை! இந்தவாரம் வழக்கம் போல கவிதை இடம்பெற்றதில் மகிழ்ச்சி! தினமணி குழுமத்தினர். தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்!.  காந்திக்கு ஒரு கடிதம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  07th October 2017 03:50 PM   |    அ+ அ  அ-     |   அன்புள்ள காந்திக்கு ஆசையில் ஓர் கடிதம்! பண்புள்ள இந்தியா உருவாகும் என்ற நம்பிக்கையில் சுதந்திரத்தை மீட்டீர்! நீவீர் சுடப்பட்டு இறக்கும்போது அந்நம்பிக்கை மோசம் போனது! அஹிம்சையை போதித்த உமக்கு ஹிம்சையான ஓர் மரணம்! அப்போதே துளிர்த்துவிட்டது இந்தியாவில் அசத்தியமும் வன்முறையும் இலஞ்சமும்! மெய் வருந்தி நீங்கள் பெற்ற சுதந்திரங்கள் பொய்யே உருவான மனிதர்களால் மீண்டும் அடிமையாக்கப்பட்டு மடிந்தது! அஞ்சல் தலைகளிலும் ரூபாய் நோட்டுக்களிலும் பாடப்புத்தகத்திலும் தேசப்பிதாவாக நீர்! அக்டோபர் இரண்டு மட்டும் இரண்டு நிமிடம் உன்னை நினைப்பர் ...