தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


 பழுத்ததும்
 விழுந்தது பழம்!
 மாலைச்சூரியன்!

மேடுபள்ளம்
சமமாக்கியது!
மழைவெள்ளம்!

வெள்ளப்பெருக்கில்
விரைந்து பூத்தது
மனிதம்!

ஒளி மறையவும்
ஊடுருவி விடுகின்றது
பனி!

சமாதான தூது
வெள்ளைப்போர்வையில்பூமி!
காலைப்பனி!

கும்மிருட்டு
ரசிக்க வைத்தன
மின்மினிகள்!

சிறகு விரிக்கையில்
வெட்டப்படுகின்றன!
குழந்தையின் கற்பனைகள்!

காரிருள்
மறைந்த மரங்கள்
வெளிச்சப்படுத்திய மின்மினிகள்!

 வண்ணப்பூக்கள்
வண்டுகள் மொய்க்கவில்லை!
கோலம்!

பழுத்தது
உண்ண முடியவில்லை!
இலை!

ஆறுவழிச் சாலைகள்
கூறு போட்டன
கிராமங்கள்!

வீதிகளில் வழிந்தது பால்!
விபத்து ஏதும் இல்லை!
வான் நிலா!

தள்ளி வைக்கப்பட்டது
குளிர்!
நெருப்பு!

அரண்களையும்
அணைத்துக் கொண்டது
பனி!

மாரி
மாறி அணைத்ததில்
மரணித்தது பூமி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஹைக்கூ கூவியது அழகு நண்பரே அனைத்தும் ரசித்தேன்

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் நன்று சகோ
    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சிறகு விரிக்கையில்
    வெட்டப்படுகின்றன!
    குழந்தையின் கற்பனைகள்!

    உண்மை
    ஆயினும்
    வேதனையான உண்மை

    ReplyDelete
  4. அருமை அனைத்தும் ரசித்தேன் ....! நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை தளீர்

    ReplyDelete
  6. அருமையான ஹைகூ கவிகள் ரசித்தேன்.தாங்கள் இப்போது நலமா ?,உடல்நலம் சீராக பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  7. கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே!

    ReplyDelete
  8. கும்மிருட்டு
    ரசிக்க வைத்தன
    மின்மினிகள்!

    சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  9. #மேடுபள்ளம்
    சமமாக்கியது!
    மழைவெள்ளம்!#
    சமதளம் என நினைத்தோரை
    சவமும் ஆக்கியது!

    ReplyDelete
  10. அனைத்தும் அருமை!

    ReplyDelete
  11. சிறகு விரிக்கையில்
    வெட்டப்படுகின்றன!
    குழந்தையின் கற்பனைகள்!

    இறுதி ஹைக்கூவும் அருமை!! அனைத்துமே அருமைதான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!