தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


 அனுமதியின்றி கட்டியவீடுகள்
 அகற்றிக் கொண்டிருந்தான் சூரியன்!
 புற்களில் பனிக்கூடுகள்!

  அசைந்த ஓவியங்கள்!
  மறைந்து போனது!
  நிழல்!

 கொட்டுகின்றது
 திட்டுகின்றோம்!
  பனி!


 வழிந்தோடும் கற்பனைகளில்
 மிதந்தோடுகிறது
 குழந்தைப் பருவம்!

  உடை பெற்ற கற்களில்
  உயிர்பெற்றது
  கலை!

  மிதிபட்டாலும்
  நல்வரவு சொன்னது
  மிதியடி!

தேய்கின்ற நிலவு
முகம் கறுத்தது
பூமி!

ஆற அமர்ந்து ரசிக்கையில்
ஆடைக்கட்டிக்கொண்டது
தேநீர்!

போர்த்திக்கொண்ட பூமி
விலக்கிப்பார்க்கின்றன விளக்குகள்!
 இருட்டு!

ஈரக்காற்று!
பிடித்துக்கொண்டது!
சளி!


தண்ணீரில் இறங்கியும்
தலை முழுகவில்லை!
குவளை மலர்கள்!

பதுக்கி வைத்தன!
சிறைபடவில்லை!
எறும்புகள்!

தேய்ந்த தடங்கள்!
நினைவுபடுத்தின
வலித்த பாதங்கள்!

ஒளிந்த சூரியன்!
காட்டிக்கொடுத்தன பறவைகள்!
மாலைப்பொழுது!

நீர் ஊறியும்
நிறையவில்லை தாகம்!
நாக்கு!

கட்டி அணைக்கையில்
விலகிப்போகின்றன துயரங்கள்!
குழந்தைகள்!

ஒளிகொடுக்க
உயிர் கொடுக்கிறது
தீக்குச்சி!


விடைகளிலிருந்து
கேள்விகள்பிறக்கின்றன!
குழந்தைகள்!

மழைவிட்டதும்
குடைபிடித்தன!
காளான்கள்!

பிரித்து வைத்தாலும்
ஒட்டிக்கொள்கிறது!
குழந்தையிடம் மண்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அத்தனையும் அருமை நண்பரே,,,,
    பூவில் மாற்றம் தெரிகிறதே.... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! புத்தாண்டில் மாற்றம் இருக்கட்டும் என்று மாற்றி அமைத்துள்ளேன்!

      Delete
  2. அருமை அருமை
    //மிதிபட்டாலும்
    நல்வரவு சொன்னது
    மிதியடி!//

    வித்தியசமான சிந்தனை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! நாளை புத்தக கண்காட்சியில் முடிந்தால் சந்திப்போம்!

      Delete
  3. என்னங்க சுரேஷ் கலக்குறீங்க.... பாராட்டுக்கள் குப்பைகளையெல்லாம் புக்கா போடும் இந்த நாளில் உங்கள் வைரங்களை புக்கா ஏன் போடவில்லை. நல்ல அட்டைபடத்துடன் மற்றும் தலைப்புடன் போட்டால் நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம். புத்தகம் போடுவதால் கிடைக்கும் லாபம் புகழ் மட்டுமே..


    நீங்கள் நண்பர் ஜோதிஜியிடம் கேட்டு உங்களின் இந்த கவிதைகளை மின் நூலாக வெளியிடலாம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! புத்தகம் போடும் எண்ணம் உண்டு! புகழ்தான் மிஞ்சும் என்பதால் அதற்கு என் பொருளாதாரம் இடம் கொடுக்காமல் இருக்கிறது. மின்நூல் முயற்சி வேண்டுமானால் செய்யலாம் பார்க்கலாம்! நன்றி!

      Delete
  4. குழந்தைகளின் முதல் படம் அட்டகாசம். பட்டு பாவடையில் சூப்பர்

    ReplyDelete
  5. வடிவமைப்பில் மாற்றம், குழந்தைகளின் படங்களும் அழகு.

    கவிதைகள் அனைத்தையும் ரசித்தேன். பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  6. உடை பெற்ற கற்களில் என்பதை உடைபட்ட கற்களில் என்று சொல்லலாமோ... ட்ரெஸ் கிடைத்த என்ற பொருள் வந்து விடும்!!!!!

    எல்லாமே அருமை. ப்ளாக்கில் முகப்புப் படங்களை மாற்றி இருக்கிறீர்கள். அழகிய அந்த வாண்டுகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. புதிய பொலிவாக வலைப்பூ குழந்தைகளின் சிரிப்புகளுடன் மிகவும் அருமையாக உள்ளது. அனைத்து கவிதைகளும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. உங்களது ஹைஹூக்களை ரசித்தேன்.வாழ்த்துக்கள். தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இணைக்கவில்லையா?

    ReplyDelete
  9. அனைத்தும் அருமை...

    தளம் இன்னும் அழகு... செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. அனைத்தும் அருமை.
    குழந்தைகள் அழகோ அழகு. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பாப்பாக்கள் அருமை! அவர்களைப் போல அனைத்து ஹைக்கூக்களும் அருமை! உங்கள் திறமையைக் கேட்கவா வேண்டும்?!!

    ஆவியின் கதைப் போட்டியில் கலந்து கொள்கின்றீர்களா சுரேஷ்?!! கலந்து கொள்ளலாமே! நீங்கள் நன்றாக எழுதுவதால்....

    ReplyDelete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர் திருநாள்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. ஆழகிய ரோஜாக்கள் அருமை (படம்)

    அனைத்தும் அருமை சகோ

    ReplyDelete
  14. கவிதையைப் போலவே குட்டீஸ் ,இயற்கை காட்சி படங்களும் ரசிக்க வைத்தன !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!