எல்லாமே உன் வசப்படும்!

ஏற்றங்களை காணும் போது
ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி! ஒருநாள்
சரிகையில் சடுதியில் துயரங்களாய்
உருமாறி பெருக்கெடுக்கிறது ஆற்றாமை!

ஆற்றாமைதான் நம் முன்னேற்றத்தின்
முதல் முட்டுக்கட்டை! அதனோடு குட்டிபோடும்
கோபங்கள் தாபங்கள் தவறான நடவடிக்கைகள்!
ஊக்கம் உன்னுள்ளே புகுந்தால் ஆமைகள் அடங்கிப்போகும்
தேக்கங்கள் கரைந்து போகும்!

உயரத்தில் ஒளிவீசும் சூரியனைக்கூட
ஒருநாள் துயரத்தில் ஆழ்த்தி
மறைக்கின்றன மேகங்கள்!
மறைக்கப்பட்டாலும் மறக்காது ஒளிவீசி
மங்காது நிற்கிறான் சூரியன்!

ஓங்கிவளர்ந்த மலைகளெல்லாம் கூட
ஒருநாள் சரிந்து போனதாக சரித்திரம் உண்டு!
ஆழ்கடலின் போக்கும் மாறும்
அலையடிப்பதும் நின்று போகும்!
ஆதலின் கடல்வற்றிப்போவதில்லை!

பிறப்பிருக்கும் உலகில் கட்டாயம்
இறப்பும் இருக்கும்!
நன்மை இருக்கும் இடத்திலே
தீமைகளும் பிறக்கும்!
அமைதியிருக்கும் உள்ளத்திலே ஒருநாள்
புயலும் வீசும்!

கடும் மழைக்கு போட்டியாய்
சுடும் வெயில் வறுத்தெடுக்கும்!
அமுதம் விளையும் இடத்தில்தான்
விஷமும் விளைகின்றது!

வெற்றிபெற்ற மனிதனுக்கு பின்னால்
தோல்வி முகங்கள் பல உண்டு!
இன்பங்களும் துன்பங்களும்
வருத்தங்களும் மகிழ்ச்சிகளும்
வெற்றிகளும் தோல்விகளும்
ஏற்றங்களும் இறக்கங்களும்
மேடுகளும் பள்ளங்களும்
கலந்ததுதான் வாழ்க்கை!
ஏற்றம் வந்தாலும் சரிவு வந்தாலும் ஓர்
மாற்றம் வரும் என்று நம்பு!

உன் மீது நம்பிக்கை இருப்பின்
உருவாகும் துயரமெல்லாம் நீர்த்துபோகும்!
நம்பிக்கை போயின் நாடிவரும் இன்பம் கூட
 துன்பமாய் தோன்றும் கைவிட்டு போனாலும்
கைவிடக்கூடாது நம்பிக்கை!
கலக்கங்களை கண்டு கலங்காதிரு!
இலக்கங்களை முன்னிருத்தாமல்
இலட்சியத்தை முன்னிருத்தி உழை!
உறுதிதனை இறுதிப்படுத்து!
எல்லாமே உன் வசப்படும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!


Comments

  1. அருமை அருமை நண்பரே உண்மையான தன்னம்பிக்கை ஒவ்வொரு வரியிலும் மிளிர்கிறது வாழ்த்துகள் சுரேஷ்....

    ReplyDelete
    Replies
    1. மின்னலென பறந்துவந்து கருத்து சொன்னமைக்கு நன்றி நண்பரே!

      Delete
  2. தன்னம்பிக்கை கவிதை சூப்பர். எல்லா வரிகளும் அருமை. .

    ReplyDelete
  3. "ஏற்றம் வந்தாலும் சரிவு வந்தாலும்
    ஓர்"
    மாற்றம் வரும் என்று நம்பு!"

    நம்பிக்கு பிடித்த நம்பிக்கையான வரிகள் இவை நண்பரே!

    "எல்லாமே உன் வசப்படும்!"

    வலைப் பூக்களின் வாசமெல்லாம் உமக்குத்தான் நண்பா!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  4. தன்னம்பிக்கை வரிகள் பிரமாதம் சகோ

    ReplyDelete
  5. தன்னம்பிக்கை அனைத்து வரியிலும் பிரகாசிக்கிறது பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. தன்னம்பிக்கை வரிகள்..
    அருமை சகோதரா...

    ReplyDelete
  7. அருமையான புத்துணர்ச்சி ஊட்டும் தன்னம்பிக்கை வரிகள் நண்பரெ!

    ReplyDelete
  8. தோல்வி என்பது படிக்கட்டுகள் தானே... அருமை நண்பரே...

    ReplyDelete
  9. ஆஹா ..அருமையான கவிதை சகோ .ஒரு சின்ன தோல்விக்கும் மனம் துவள்கிறது ..வாழ்க்கைல தன்னம்பிக்கைதான் முக்கியம் அது இருந்தால் எதையும் சாதிக்கலாம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2