தளிர் சென்ரியு கவிதைகள் 12
தளிர் சென்ரியு கவிதைகள் 12
- வேட்பாளர்கள் போட்டி
வெற்றிபெற்றது
துட்டு!
இடைத்தேர்தல்!
- வேலைகொடுத்தார்கள்
ஓய்வு
எடுக்கிறார்கள்
நூறுநாள்
வேலை!
- கதைவிட்டதும்
உதைபட்டார்கள்!
மாதொருபாகன்!
- கண் பார்க்கையில்
வலி!
திருநங்கையர்!
- முடங்கிய அரசு இயந்திரம்!
தொடங்கியது
கொசு உற்பத்தி!
- கொடிகட்டிப்பறந்தன வயல்கள்!
கொட்டப்பட்டன
வயிற்றில் மண்!
வீட்டுமனைகள்!
- உத்தரவின்றி உள்ளே வந்தன
மெத்தனமில்லாது
அழிந்தது பொருளாதாரம்!
அந்நிய
ஏற்றுமதி!
- காப்பதற்குபதில் எடுக்கின்றன
உயிர்காக்கும்
மருந்துகள்!
விலை!
- அடங்காப்பசியில் மருத்துவம்!
விழுங்குகின்றன
பணத்தோடு
பல
உயிர்கள்!
- புகையில்லா போகி!
கொசுவர்த்தியோடு
கழிந்தது
இரவு!
- கடையான பாதைகள்!
வியாபாரம்
செழித்தது!
காவல்துறை!
- திருடி எடுக்கிறார்கள்!
திருட்டு
போகிறது!
தமிழ்
சினிமா!
- விலைபோகும் அறிவு!
பெருமிதத்தில்
படைப்பாளி!
புத்தகச்
சந்தை!
- அள்ளிக்குவித்தார்கள்!
வறண்டுபோனது
விவசாயம்!
- மலையை முழுங்கினார்கள்!
செரிக்கவில்லை!
சகாயம்!
- இலவசமாய் கொடுத்தாலும்
கசக்கிறது!
அரசுபள்ளியில்
கல்வி!
- நூலறுந்தாலும்
விடவே
இல்லை பிடி!
தமிழக அரசு!
- நத்தையாய் நகரும் வாகனங்கள்!
களவாடின
நேரங்கள்!
வாகன
நெரிசல்!
- காரணமில்லாமல் கூடி
சத்தம்
போட்டன!
சாலை
நெரிசலில் வாகனங்கள்!
- குடிப்பெயர்ச்சி ஆகையில்
கூட்டிவந்தது
சனி!
டாஸ்மாக்!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
நிதர்சனமான உண்மையுடன் தொடங்குகிறது பதிவு!
ReplyDelete3வது பொருந்துகிறதா என்ன? யார் உதை வாங்குவது?
எல்லாமே அருமை.
வழக்கமான தங்களது கவிதை அருமை நண்பரே....... வாழ்த்துகள்.
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
புரட்சி எண்ணங்கள். புதுமைக் கவிதைகள்.
ReplyDeleteஅது என்ன சென்ரியு கவிதை? எனக்கு புதிது. விளக்கம் சொன்னால் தெரிந்து கொள்வேன்.
http://thalirssb.blogspot.com/2014/06/thalir-senriyu-kavithaigal-4.html இந்த லிங்கில் சென்று படித்தால் விளக்கம் கிடைக்கும் ஐயா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅருமை சகோ அருமை
ReplyDeleteகுறுங்கவிதையில் பூத்தது இருபது நறு மலர்கள்.
ReplyDeleteஅனைத்தும் ஆன் லைன் படைப்புகள்.அற்புதம்.
புத்தக கண்காட்சியில் தங்களது தமிழர் பாரம்பாரிய உடை அழகு அய்யா!
(வேட்டி சட்டையில் வந்ததைத் தான் சொன்னேன்.
உபயம்: தில்லை ஆசான்!
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமை
ReplyDeleteஅருமை
நண்பரே
வணக்கம்
ReplyDeleteசிறப்பாக பாவரிகள் கண்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்துக்கவிதைகளையும் ரசித்தேன். கொடிகட்டிப்பறந்தன வயல்கள் என்ற வரிகளைப் படித்தபோது மனதிற்குள் ஏதோ பாரமாவதுபோல இருந்தது.
ReplyDeleteஅருமை. அருமை.அணைத்தும் அருமை.
ReplyDeleteஇன்றைய நிலை - அழகான வரிகளில்... அருமை...
ReplyDeleteவழக்கம்போல் சிறப்பு
ReplyDeleteசிறப்பான ஹைக்கூக்கள்...
ReplyDeleteஅருமை சகோதரா...
வழக்கம் போல அருமையான ஹைக்கூக்கள்! நண்பரே!
ReplyDelete#செரிக்கவில்லை!#
ReplyDeleteசகாயம் அவர்களுக்கு கொடுத்தது கசாயம் அல்லவா :)
அனைத்தும் "நச்"என்று கருத்தைச் சொல்கிறது. ஆனால் சென்ரியூ என்றால் என்னனு தான் புரியலை! :)
ReplyDelete