சிரிச்சுக்கிட்டே இருக்கணுமா! சரிதாயணம் படிச்சுகிட்டே இருங்க!
சிரிச்சுக்கிட்டே இருக்கணுமா!
சரிதாயணம் படிச்சுகிட்டே இருங்க!
வலைப்பூ தொடங்கி ஒரு வருடம்
கடந்த பின் தான் பாலகணேஷ் அவர்களின் மின்னல் வரிகள் தளத்தினை படிக்க ஆரம்பித்தேன்.
அதில் அவர் எழுத்தாளர்களுடனான தனது அனுபவத்தினை சுவைபட சொன்னவிதம் எனக்கு மிகவும்
பிடித்து இருந்தது. நகைச்சுவையாக எழுதவும் செய்வார் என்பது அவர் முதல் புத்தகமான
சரிதாயணம் வெளியிட்ட போதுதான் தெரிந்தது.
அப்போது அந்த புத்தகத்தை வாங்கி படித்து
மகிழ்ந்தேன்! இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பில் அவரை சந்தித்தாலும் என்னை அவர்
அறிந்திருக்கவில்லை! அவரிடமே அன்று வெளியான பதிவர்களின் நூல்களை வாங்கினேன். தளிர்
சுரேஷ் என்று அறிமுகம் செய்து கொண்டு! ஆனால் அவரின் பரபரப்பான பணிகள் காரணமாக அதை
மறந்திருக்கலாம்.
பின்னர் எனது வலைப்பூவில் சிறுகதை ஒன்றை
எழுதி அவர் மதிப்பீடு செய்தால் நன்றாக இருக்கும் என்று கருத்திட்டேன்! அவரும்
வந்து சில திருத்தங்களை தந்தார். அவ்வப்போது வலைப்பக்கம் வந்தாலும் சில கதைகளுக்கு
அவரது பின்னூட்டம் இல்லையே என்று வருந்தி இருக்கிறேன்!
இதற்கிடையில் அவரது இந்த இரண்டாவது நூல்
வெளியீடு நடந்தபோது கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியும் போக முடியாத சூழல்!
தற்போது புத்தக கண்காட்சியில் அவரை சந்தித்தேன். அவரது புத்தகத்தை கேட்டு
வாங்கினேன். நான் வாங்கிய நூல்களில் சங்கதாராவுக்கு அடுத்து இதைத்தான் படித்து
முடித்தேன்.
வித்தியாசமாக இந்த தொகுப்பில் உள்ள
சிறுகதைகளை பிரசுரிக்காத பத்திரிக்கைகளுக்கு நன்றி என்று சொல்லி அசத்தி
இருக்கிறார் வாத்தியார். சரிதா என்ற ஒற்றை கதாபாத்திரத்தை இந்த நூலின் நாயகியாக்கி
புகுந்து விளையாடி இருக்கிறார் வாத்தியார். ஒவ்வொரு கதையும் நகைச்சுவை விருந்தை
படைக்கிறது. அதுவும் முதல் கதையில் வரும் வைதீக பிராமணர் நரசிம்ம சாஸ்திரிகள்
பாத்திரப்படைப்பு வெகு ஜோர்! அதற்கு விவியன் ரிச்சர்ட்ஸுக்கு கட்டுக்குடுமி வைத்த
கிராபிக்ஸ் அசத்தல்! அந்த கதையை படித்து வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்தேன்!
அத்தனை நகைச்சுவை விருந்து! ஏரோப்ளேன் இப்போ இறங்கோ ப்ளேன் ஆகப்போறதாம்! என்ற
வரிகளை எரிச்சலுடன் சொன்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை!
நகைச்சுவை கதையாயினும் சரிதாவின் சபதத்தில்
அனுமன் சீதையை கண்ட காட்சியை விவரிக்கையில் அனுமன் கண்ணுக்கு வெள்ளைப்பூ சிவப்பாக
தெரிந்ததற்கு அவர் தரும் விளக்கம் அருமை!
சரிதாவை பயமுறுத்த மோகினிப்பிசாசு ஐடியா
செய்து உண்மையான மோகினி பிசாசிடம் மாட்டிக்கொள்வது பின்னர் சரிதாவே அந்த பிசாசை
விரட்டுவது செம காமெடி ஸ்டோரி!
சீரியலில் நடிக்கும் சரிதா வேண்டுமென்றே
ரீடேக் வாங்கி நடிகையை அறைவது செம கலாட்டா! செல்போன் வாங்கித்தரச்சொல்லி அதில்
சரிதா செய்யும் கலாட்டா அனைத்தும் சிரிப்புக்கு கியாரண்டி! இவர் சொல்லும் உவமைகள்
சிரிக்க மட்டுமல்ல ரசிக்கவும் வைக்கிறது. சொத்தை கடலையை மென்னுட்ட மாதிரி
ஆயிருச்சு சரிதாவோட மூஞ்சி! அதற்கோர் உதாரணம்.
இறுதியாக எம்.பி ஆக ஆசைப்பட்டு சரிதா
கலைஞருக்கு போன் செய்து கலைஞர் தாத்தாவா எனக்கு ஒரு சீட் வேணும் என்று கேட்பது செம
ஹைலைட்! இந்த கதையை இரண்டு முறை படிச்சு ரசித்தேன்!
இப்படி 64 பக்கங்களுக்கு சிரிக்க வைத்த வாத்தியார்
புத்தகத்தை திருப்பி புரட்டச்சொல்லி அடுத்த 64 பக்கங்களுக்கு வித்தியாசமான கதைகளாக
தருகிறார். நான் இருக்கிறேன் அம்மா!
என்பது தலைப்பு! கதையும் அசத்தல்! அமானுஷ்யம் கலந்த இந்த கதை முதலில்
சாதாரணமாக சென்று இறுதியில் முடிக்கையில் நம்மை அசத்துகிறது. க்ரைம் கதை அசத்தலாக
எழுதுகின்றார் வாத்தியார் கிளி, கிலி, கிழி என்ற ஒரு கதையே அதற்கு
உதாரணம்!கொன்னவன் வந்தானடி! நானும் ஒரு கொலைக்காரனும் கதைகள் சுவாரஸ்யமான நடையில்
நம்மை வசீகரிக்க குழந்தை என்ற கதை திருமணமாகி குழந்தை இல்லாத ஒரு மருமகள்-
மாமியார் மனப்பாங்கை விவரித்து மருமகள் – மாமியாரிடம் ராசியாக அந்த குழந்தையே
காரணமாக அமைவது நெகிழ்ச்சியாக இருந்தது. பெற்றோர்களின் விருப்பங்களை குழந்தைகளிடம்
திணிக்க கூடாது என்று சொல்லும் எனக்கொரு மகன் பிறப்பான் கதை பெற்றோர்களுக்கு
சரியான அறிவுரை கூறும் வகை கதை. அமைதியின் பின்னே என்ற கதை இன்றைய சமூக அவலத்தை
நச்சென்று சொல்லி செல்கிறது.
இப்படி ஒரு எழுத்தாற்றல் மிக்கவர் பணிவுடன் சக
பதிவர்களையும் மதித்து நட்பு பாராட்டி அவர்களை ஊக்குவிப்பது என்பது மிகவும்
போற்றத்தக்க ஒன்று. நான் பெரிய பிஸ்தா என்று பந்தா இல்லாமல் தோழமையுடன் பழகும்
வாத்தியார் பாலகணேஷ் இன்னும் பல படைப்புக்களை தந்து நம்மை மகிழ்விக்க வேண்டும்.
நகைச்சுவை பொழுது போக்குக்காக மட்டுமன்றி நல்ல
தகவல்களையும் கதைகளின் ஊடே தரலாம் என்று வாத்தியார் இந்த நூலில் நிரூபித்து
இருக்கின்றார். ஒரே மணி நேரத்தில் விறுவிறுவென வாசித்து முடிக்க கூடிய வகையில்
அமைந்த கதைகள் அனைத்துமே சிறப்பு.
சரிதாயணம்@ சிரிதாயணம், நான்
இருக்கிறேன் அம்மா!
எழுதியவர் பால கணேஷ்
வெளியிட்டோர்:
ஸ்ரீ பால கங்கை பப்ளிகேஷன்ஸ்,
32/1 கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி, சென்னை 26
பக்கங்கள் 128
விலை ரூ 70
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நல்ல வாசிப்பனுபவம். நிச்சயம் ரசிக்க முடியும் ஒரு புத்தகம்.
ReplyDeleteபாராட்டுகள்.
சரிதாயணம் படிக்கும் ஆவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...சகோ. நல்ல விமர்சனம் தந்ததற்கு நன்றி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
நல்ல விமர்சனம்.. படிக்கதூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எனக்கு வேண்டியவர்கள் அனைவரின் தளங்களுக்கும் தவறாமல் சென்று படித்துக் கருத்திட மலையளவு ஆசை மனதில் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் சுமைகள் பல சமயங்களில் அனுமதிப்பதில்லையே சுரேஷ்... அது எனக்குப் பெரும் வருத்தம்தான். இனி அடிக்கடி தலைகாட்ட முயல்கிறேன். ரைட்டா...?
ReplyDeleteஉண்மைதான் சார்! பல சமயம் நாம் விரும்பினாலும் வேலைப்பளு நம் விருப்பத்தினை கொன்றுவிடுகிறது! கடந்த ஒருவாரமாக என்னாலும் முழுதாக இணையத்தில் உலவ முடியவில்லை! வருத்தம் எதுவும் இல்லை! உங்களுடைய பார்வையில் என் கதை பட்டு அதை மெருகேற்ற ஏதாகிலும் டிப்ஸ் கிடைக்காதா என்ற ஆசை மட்டுமே! நன்றி!
Deleteபடித்து, ரசித்துச் சிரித்து அதை வஞ்சனையின்றி அனைவரிடமும் சிறப்பாகச் சொல்லி பகிர்ந்து கொண்ட உன் அன்பிற்கு தலைவணங்கிய நன்றி. படித்துச் சிரித்தேன், இருமுறை படித்து ரசித்தேன் என்றெல்லாம் நீ குறிப்பிட்டிருப்பது மனதிற்கு நிறைவு. நம் செயல் அதற்கான அங்கீகாரத்தை தேடிக் கொள்கையில் கிடைக்கும் மனத்திருப்திக்கு இணையில்லை. அதை எனக்கு அள்ளித் தந்த உனக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
ReplyDeleteநன்றியெல்லாம் நண்பர்களுக்குள் எதற்கு? உங்களின் எழுத்துக்கள் என்னை வசீகரித்ததைத்தான் சொன்னேன்! தொடர்ந்து உங்கள் சாதனைப் பயணம் தொடரட்டும்! அதில் நானும் ஓர் பயணியாக உடன் வருவதில் மகிழ்ச்சி!
Deleteஅருமையான மன வெளிப்பாடு. மதிப்புரையில் நூலைப் பற்றியும் ஆசிரியரைப் பற்றியும் தாங்கள் விவாதிக்கும் விதம் அனைவரும் அந்நூலை வாங்கிப்படிக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டிவிடும் அளவு உள்ளது. நல்ல நூலை மகிழ்வுடன் படித்த உணர்வு. நனறி.
ReplyDeleteஇது பற்றி வாத்தியாரிடம் தனிப்பட்ட முறையிலும் புத்தக வெளியீட்டு நிகழ்விலும் என் கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும் உங்கள் வாசகர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்....
ReplyDeleteவாத்தியாரின் நகைச்சுவைக் கதைகளை மட்டும் படித்துப் பழக்கமாகியிருந்த எனக்கு வித்தியாசமான திரில்லர்களைப் படித்ததும் வியப்பில் ஆழ்ந்தேன். அதிலும் நான் இருக்கிறேன் அம்மா என்ற கதை மனதை மிகவும் நெகிழ வைத்தது.
வாத்தியார் நூல்கள் சிரிப்புக்கு என்றுமே கியாரண்டி...
ReplyDeleteநாங்களும் சிரித்துக் கொண்டே இருக்கின்றோம். சுரேஷ். நண்பரெ! நாங்களும் சரிதாவின் போராட்டம் என்று ஆரம்பித்துள்ளோம். ஆனால் அண்ணாவின் சிரிப்பு வெடிகள் அதன் தொடரான அடுத்த பதிவில் இடுவதாக உள்ளோம்.
ReplyDeleteதங்களின் விமர்சனம் அருமை! சிரித்துவிட்டு நான் வருகிறேன் அம்மாவிற்கு வ்ர்ரோம் என்றும் சொல்லி இருக்கின்றோம்....மிக்க மகிழ்ச்சி பாலகணேஷ் அண்ணாவின் கதைகளை இங்கு சொன்னதற்கு. அசாத்தியமான நகைச்சுவைப்படைப்பு......
கணேஷ் அண்ணாவின் பதிவுகள் கூட நகைச் சுவை இழையோடத்தான் இருக்கும். மிகவும் ரசனையானவை!
ReplyDeleteஎழுதியிருப்பது அனைத்தும் சரியே!அருமை சுரேஷ்
ReplyDeleteஅவரது பதிவுகள் விரும்பிப் படிப்பேன். புத்தகம் இங்கு கிடைக்காது. PDF விட்டால் நன்றாக இருக்கும் :-)
ReplyDeleteமணிமாறன்.. என் இமெயில் ஐடிக்குத் தொடர்பு கொள்ளுங்கள். (மின்னல் வரிகளில் இருக்கிறது) உங்களுக்காக அனுப்பி வைக்கிறேன்.
Deleteஅருமையான விமர்சனம்.
ReplyDeleteஅடுத்த முறை இந்தியா வரும்போது, வாங்கிவிடுகிறேன்.
நன்றாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் நண்பரே...
ReplyDeleteநானும் கூட படித்ததாக ஞாபகம்.
ஆசிரியரின் தளத்திற்கு இது வரை சென்றதில்லை.
ReplyDeleteநூல்வாங்கவும், தளம் செல்லவும் தூண்டும் மதிப்புரை.
பகிர்விற்கு நன்றி தளிர். சுரேஷ் அவர்களே!
மிகச் சிறப்பானதொரு விமர்சனம்...
ReplyDeleteஅருமை சகோதரா...
வருகை தந்து கருத்துரை இட்ட நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteநல்ல விமர்சனம். பாலகணேஷின் நகைச்சுவை எழுத்தாற்றல் அசாதரணமானது.சிறியவர் பெரியவர் பேதமின்றி எந்த தலைமுறையுடனும் ஒத்துப் போகும் குணம் கொண்டவர். அதுவே அவரது + .
ReplyDelete