கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 29

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 29


1.      தலைவர் இன்னும் பழசை மறக்கலைன்னு எப்படி சொல்றே?
பொங்கல் இனாமா அன்னிக்கு கொடுத்த அதே பத்துரூபாவை இன்னிக்கும் தர்றாரே!

2.      பேங்குக்கு வந்த அவர் ஏன் ஷாக் அடிச்சா மாதிரி நின்னுக்கிட்டு இருக்கார்?
அவர் கரண்ட் அக்கவுண்ட்ல பணம் காணாம போயிருச்சாம்!

3.      தலைவர் இப்ப எதுக்கு திடீர்னு மணிவிழா கொண்டாடப் போறேன்னு சொல்றாரு?
நிறைய “money’ திரட்டணும்னு முடிவெடுத்துதான்!

4.      மன்னர் எதிரியிடம் அடக்கு அடக்கு என்கிறது மனம்! ஆனால் முடியவில்லை என்று சொல்லுகிறாரே! அவ்வளவு கோபமா?
இல்லை இல்லை! அவ்வளவு அவசரம்!

5.      பொங்கலுக்கு ஆசையா ஒரு புதுப்புடவை எடுத்துக் கொடுத்தது என் பொண்டாட்டிக்கு பிடிக்கலை!
    ஏன்?
   எடுத்துக்கொடுத்தது வேலைக்காரிக்காச்சே!

6.      தலைவர் அடிக்கடி உண்ணாவிரதம்னு கிளம்பிடறாரே என்ன விசயம்?
வீட்டு சாப்பாடு சரியில்லையாம்! உண்ணாவிரதத்துல சூப்பர் பிரியாணி கிடைக்குதாமே!

7.      அந்த ஆபீஸ்ல எல்லோர் கையும் சுத்தம்!
ஒருத்தரும் லஞ்சம் வாங்க மாட்டாங்களா?
கை கழுவ டெட்டால் வச்சிருக்காங்கன்னு சொல்ல வந்தேன்!

8.      மாப்பிள்ளை பெரிய ஜல்லிக்கட்டு வீரர்னு சொன்னீங்களே இப்ப எப்படி இருக்கார்?
பிடிச்சு கொட்டில்ல அடைச்சிட்டோம்ல…!

9.      ஒரு சின்ன வாய்த் தகறாறுக்கு ஆயிரம் ரூபா செலவு ஆயிருச்சா எப்படி?
என் மனைவியோட சண்டையில வாய் கிழிஞ்சி போச்சு! தைக்க ஆயிரம் ரூபா செலவாயிருச்சு!

10.  தலைவர்கிட்ட பொங்கல் இனாம் வாங்கலாம்னு போனது தப்பா போச்சா ஏன்?
பத்து ரூபாயை இனாமா கொடுத்துட்டு நூறு ரூபாயை கட்சிவளர்சிக்கு உண்டியல்ல போட சொல்லிட்டாரு!


11.  பொண்ணு புருஷனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டா!
    பேஷ்! பேஷ்!
    எல்லாத்தையும் கையாலாயே பேசிடுவா!

12.  மாப்பிள்ளையை பார்த்து நீங்க பூரிச்சு போயிட்டீங்களா எப்படி?
பொண்ணு வீசற பூரிக்கட்டையில இருந்து லாவகமா தப்பிக்கிறதை பார்த்துதான்!

13.  என்ன மாப்ளே என்னாலதான் உங்க கை உடைஞ்சி போச்சா ஏன்?
நீங்கதானே சொன்னீங்க என் பொண்ணை கையில வச்சு தாங்கணும்னு கொஞ்சமான வெயிட்டா… அதான் உடைஞ்சிருச்சு!

14.  அடிமை ஒருவன் சிக்கிவிட்டான் என்று மன்னர் கொக்கரிக்கிறாரே எந்த நாட்டு மன்னனை வென்றார்?
நீ வேற அவர் தன் மகளுக்கு வரன் பார்த்து இருக்கிறார் அதைத்தான் அப்படி சொல்கிறார்!


15.   மன்னர் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல…
பாய்ந்து எதிரியை வீழ்த்தினாரா?
 எதிரியிடம் இருந்து தப்பி ஓடிவந்துவிட்டார்!

16.  புலவரே உம் பாட்டில் வீரமே இல்லையே!
மன்னா உம்மை பாடுகையில் அது எதற்கு?

17.  அந்த டாக்டர் கிட்ட போனா எல்லாமே தீர்ந்து போயிரும்!
வியாதியா?
 இல்லை உங்க சொத்து!

18.  பொண்டாட்டிக் கூட சண்டைன்னா நேருக்கு நேர் நிற்காமா முகத்தை திருப்பிக்கிட்டு போயிருவேன்!
ஏன்?
முதுகு வீங்கினா தெரியாது முகம் வீங்கிருச்சுன்னா….!

19. தலைவர் இப்ப எதுக்கு தொப்பையோட போட்டோவுக்கு போஸ் கொடுத்துகிட்டு இருக்கார்?
  இடைத்தேர்தல்னு அறிவிச்சதை தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கார்!

20. பக்தர்களின் கலி தீர்ப்பேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரே ஒரு சாமியார் இப்ப எங்க காணோம்?
   ஜெயில்ல “களி”யை தின்னுக்கிட்டு இருக்கார்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. வணக்கம்
    இரசித்தேன்.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  2. அனைத்துமே சரவெடிகள் நண்பரே வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. படித்தேன். ரசித்தேன். சிரித்தேன்.

    ReplyDelete
  4. டெட்டால், 15, 16 ,மிகவும் ரசித்தேன்....அனைத்தயும் ரசித்தேன்

    ReplyDelete
  5. ரசித்து சிரித்தோம் !

    ReplyDelete
  6. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்

    சூப்பர் ரசித்தேன்

    ReplyDelete
  7. ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2