கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 27

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 27


1.      எங்க வீட்டு டெலிபோன் பில் எக்கச்சக்கமா ஏறினதுக்கு காரணம் நான் என் லவ்வர் கூட கடலை போட்டதுதான் அப்பாவுக்கு தெரிஞ்சிடுச்சு!
    அப்புறம்?
  அப்புறம் என்ன? அவரோட பி.பியும் எக்கசக்கமா ஏறிப்போச்சு!

2.      எங்க வீட்டுல அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை நடந்தா நான் முகத்தை தொங்க போட்டுகிட்டு வெளியே வந்துடுவேன்!
     ஏன்?
   இல்லே முகம் வீங்கி போயிருமே!

3.      மாப்பிள்ளை ரொம்ப நெருங்கி பழகுவார்னு சொன்னாங்க ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலை!
    என்ன ஆச்சு?
   வேலைக்காரியோட நெருங்கி பழகிட்டார்!

4.      தலைவர் எதுக்கு எல்லா தொண்டர்களையும் கண்டிப்பா டார்ச் லைட் எடுத்துக்கிட்டு கட்சி ஆபீஸ் வரச்சொல்றார்!
இருண்டு கிடக்கிற கட்சிக்கு ஒளி கொடுக்கணுமாம்!

5.      மன்னர் ஆள்பாதி ஆடைபாதி என்பதை நிரூபித்துவிட்டார்!
    எப்படி?
போருக்குச் சென்றவர் ஆடையும் கிழிந்து ஆளும் கிழிந்து திரும்பி இருக்கிறாரே!


6.      புத்தாண்டு அன்னிக்கு கொஞ்சம் ஓவரா போயிருச்சுன்னு சொன்னியே சரக்கு ஓவராயிருச்சா!
ஊகும்! என் மனைவி புத்தாண்டு ஸ்பெஷல்னு நிறைய சமைக்க சொல்லி வேலை ஓவராயிருச்சுன்னு சொன்னேன்!

7.      இவரு கேப்டனா இருக்கிறதை எதிரணி வீரர்கள் ரொம்பவும் விரும்புவாங்கன்னா பார்த்துக்கோயேன்!
      ஏன்?
   அப்பத்தானே அவங்க தொடர்ச்சியா ஜெயிச்சிக்கிட்டே இருக்க முடியும்!

8.      அந்த ஆபீஸ்ல லஞ்சமே கேட்க மாட்டாங்க?
    அடடே!
   நீ வேற இந்தந்த வேலைக்கு இவ்ளோன்னு ஒரு லிஸ்டே எழுதி ஒட்டி இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்!

9.      அந்த மானேஜர் பெரிய ஜொள்ளுப்பேர்வழியாமே?
ஆமாம்! உள்ள நுழைஞ்சதுமே ‘ஜொள்ளுங்கன்னுதான் பேச ஆரம்பிப்பார்!

10.  தலைவர் எதுக்கு திடீர்னு வீதியில இறங்கி போராட   வேண்டாம்னு சொல்லறார்?
    கட்சி நடுத்தெருவுக்கு வந்திருச்சு யாரோ சொல்லிட்டாங்களாம்!


11.  வீதியை கூட்டி பெருக்க போன தலைவருக்கு வீட்டுல செம டோஸாமே?
    இருக்காதா பின்னே! வீட்ட பெருக்க சொன்னா ஏமாத்திட்டு வீதி சுத்தம் பண்ணவந்துட்டாராம்!

12.  இண்டர்வியு எடுக்க போன டைரக்டர் எதுக்கு உன்மேல கோவிச்சுக்கிட்டார்?
    என்ன வேணும்னாலும் தயங்காதிங்க வெளிப்படையா கேளுங்கன்னு சொன்னாரேன்னு ஓரு ஆயிரம் ரூபா கைமாத்தா கேட்டேன்!

13.  மக்கள் மனசை கசக்கி பிழியறமாதிரியான ஒரு சப்ஜெக்ட் இருக்குன்னு சொன்னீங்களே படத்தோட தலைப்பு என்ன?
     ஜூஸ்!

14.  அரண்மனை விதூஷகனை மன்னர் ஏன் விரட்டி விட்டார்?
மன்னர் போரில் தோற்றுப் புண்பட்டதை எல்லோரும் அறியும் வண்ணம் ‘புண்’சிரிக்க வைத்துவிட்டானாம்!

15.  தலைவரை அசிங்கப்படுத்தனும்னு எல்லாரும் கூடி முடிவெடுத்திட்டாங்களா என்ன சொல்றே?
     தலைவருக்கு சிலை வைக்கனும்னு முடிவெடுத்து இருக்காங்களே!

16.  சமைச்சதுக்கு அப்புறம் அது சரியா இல்லேன்னா என் மனைவி கோவிச்சுக்கவே மாட்டா!
பரவாயில்லையே!
நீ வேற அது முழுசையும் நானே சாப்பிட்டு அவங்களுக்கு புதுசா சமைச்சு வைக்கணும்!

17. நீட்டி முழக்கி பேசிக்கிட்டு இருந்த தலைவர் இப்ப புது ட்ரெண்டுக்கு மாறிட்டாரா எப்படி சொல்றே?
     தெருவுல இறங்கி கூட்டி பெருக்க ஆரம்பிச்சிட்டாரே!

18. மன்னர் மண்ணைக் கவ்வி வந்தும் அவரது ரவுசு தாளவில்லையா என்ன சொல்கிறார்?
    எதிரியின் மண்ணில் வீரம் விளைஞ்சாலும் உப்பு கரிக்கிறதாம்!

19. தலைவருக்கு வெளியில பவர் ஜாஸ்தியா இருந்தாலும் வீட்டுக்குள்ள கம்மிதான்!
    வீட்டுல மூணுமணிநேரம் ’பவர் கட்’னு சொல்லு!

20. எதுக்கு ஜாதகத்தோட சோப்பும் தண்ணியும் கொண்டு வர்றீங்க?
   நீங்கதானே ஜோசியரே  ஜாதகத்தை அலசி பார்க்கணும்னு சொன்னீங்க!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. வணக்கம்
  ஐயா.

  அருமையாக உள்ளது இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. எப்படி நண்பரே சரவெடியாய் அடிக்கிறீர்கள் ஆச்சர்யமாக இருக்கிறது....
  புதிய பதிவு எ.எ.எ.

  ReplyDelete
 3. தௌசன்ட் வாலா தான் போங்க....செம ஜோக்ஸ்! ரசித்தோம்....

  ஜாதகத்தை அலசிப் பார்க்கணும்..ஹஹஹ்

  ReplyDelete
 4. நன்றாக ரசித்தேன். தொடர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 5. ரசிக்க வைத்த நகைச்சுவைகள்.. அருமை நண்பா...

  ReplyDelete
 6. அனைத்தும் அருமை. அதிலும் அந்த
  கடைசி ஜோக் மிக அருமை சுரேஷ்.

  ReplyDelete
 7. அருமை. ரசித்தேன்

  ReplyDelete
 8. ரசித்தேன் சிரித்தேன் நண்பரே

  ReplyDelete
 9. ஹாஹா.. சூப்பர். ஜொள்ளுங்க.. செம.

  ReplyDelete
 10. இன்னும் சிரிக்க வையுங்கள் ரசிக்கிறோம்

  ReplyDelete
 11. பூரிக்கட்டையால் அடி வாங்கி அழுது கொண்டிருந்த நான் உங்கள் பதிவான கொஞ்சம் சிரிங்க பாஸ் என்பதை பார்த்ததும் என்னைப் பற்றிதான் ஏதோ எழுதி கொஞ்சம் சிரிங்க என்று சொல்கிறீர்களோ என்று நினைத்து வந்தால் ரொம்பவே சிரிக்க வைச்சுட்டீங்க பாராட்டுக்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2