கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 20

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 20


  1. புதுப்படம் ரிலீஸுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு?
    ஏன்?
  வேலூர்ல இருந்தா புழல்ல இருந்தான்னு கேக்கறாரு!

  1. பையன் ரொம்ப ஊதாரித் தனமா செலவு பண்றான்னு சொல்றீங்களே சிகரெட், தண்ணின்னு …
சேச்சே! அந்த பழக்கமெல்லாம் கிடையாது! நிறைய டீ காபி குடிப்பான்னு சொல்ல வந்தேன்!

  1.  ஆம்னி பஸ்ல என்ன கலாட்டா ?
பால் விலையேத்தனாங்கன்னு கோவா போற பஸ்ஸுக்கு கூட டிக்கெட் விலையை ஏத்திட்டாங்களாம்!

  1. தலைவரை நினைச்சா சிரிப்பா இருக்கு!
    ஏன்? கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்தது போல கட்சியில் இருக்கும் கறுப்பு ஆடுகளையும் வெளிக்கொண்டுவர நீதிமன்றம் உதவ வேண்டும்னு அறிக்கை வெளியிடறாரே!

  1. மன்னர் வாளை உறையில் வைப்பதே இல்லையாமே!
உறையில் வைக்கையில் இசகு பிசகாகி ரத்தக்கறை படிந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான் காரணம்!

  1. இந்த ஏரியாவிலேயே அவருக்குத்தான் இன்னிக்கு மதிப்பு அதிகம்!
    ஏன்?
   பால்வியாபாரம் பண்றாரே!

  1. எங்க தலைவர் கிட்டே சரக்கே இல்லைன்னு நீ சொன்னது தப்பாயிருச்சு!
    எப்படி சொல்றே?
  இப்பத்தான் டாஸ்மாக்கிலேருந்து ஒரு கேஸ் சரக்கு வாங்கிண்டு போறாரே!

  1. மன்னருக்கு எதிரி நாட்டின் சந்து பொந்து எல்லாம் கூட அத்துபடியாமே?
பின்னே எதிரி  ஓட ஓட விரட்ட சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்து வந்தவர் ஆயிற்றே!


  1. இன்னிக்கு நம்ம கல்யாண நாள்னு தெரிஞ்சும் ஆபிஸ்ல இருந்து லேட்டா வர்றீங்களே?
இந்த அதிர்ச்சியில இருந்து மீளறதுக்கு கொஞ்சம் நேரம் ஆயிருச்சு டியர்!

  1. தீபாவளி அன்னிக்கு உங்க வீட்டுல வெடிச்சத்தம் கேட்டுது ஆனா வெளியே பட்டாசு எதுவும் காணோமே!
ஹிஹி! அது என் மனைவி முதுகில அடிச்ச பட்டாசு சத்தம்!


  1. எல்லாமே நார்மலா இருக்குன்னு சொல்லிட்டு ஏன் டாக்டர் பெட்ல அட்மிட் ஆகச் சொல்றீங்க!
என்னோட கிளினிக்கோட கண்டிஷன் அப்நார்மலா இருக்கே!

  1. பஸ்ல இவ்ளோ இடமிருக்கே ஏன் புட்போர்டுல தொங்குற?
நானும் அதையேத்தான் கேக்கறேன்! பஸ்ல இவ்ளோ இடமிருக்கே டிரைவர் ஏன் அந்த சீட்லயே உக்காந்திருக்கார்?

  1. அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
பல்ஸ் பாக்கணும் பல்லை காட்டுங்கன்னு சொல்றாரே!

  1. சென்சார் போர்டு அதிகாரியோட பொண்ணை கட்டிக்கிட்டது தப்பா போச்சு!
    ஏன்?
   திருமண வீடியோவை கூட சென்சார் பண்ணித்தான் தருவேன்னு அடம்பிடிக்கிறார்!

  1. செல்போன் கம்பெனிக்கும் மனைவிக்கும் என்ன ஒத்துமை?
போன்ல பேலன்ஸ் இருந்தா செல்போன் கம்பெனிக்கு பொறுக்காது! பேங்க்ல பேலன்ஸ் இருந்தா மனைவிக்கு பொறுக்காது!

  1.  அந்த பேச்சாளர் பேசினா பேச்சு அருவி மாதிரிக் கொட்டும்!
     அப்புறம் ஏன் கூட்டத்தையே காணோம்!
    அருவியிலே அடிச்சுட்டு போயிடபோறோம்ற பயம்தான்!

  1. எவ்ளோ தைரியம்?பட்டப் பகல்லேயே பூட்டை உடைச்சு மாட்டிகிட்டேயே ஏன்?
    இராத்திரியிலே கண்ணு நல்லாத் தெரிய மாட்டேங்குது எசமான்!

  1. மேனேஜர் எல்லாரையும் தட்டிக்கொடுத்து வேலைவாங்குன்னு சொன்னதாலே மாட்டிக்கிட்டியா எப்படி?
    ஸ்டேனோவோட முதுகுல தட்டிக் கொடுத்து மாட்டிக்கிட்டேன்!


  1. எதிரியின் எதிர்பாராத தாக்குதலில் மன்னர் ஆடிப்போய்விட்டார்!
    அப்புறம்?
 அப்புறம் என்ன? ஓடிப்போய் சரணடைந்துவிட்டார்!

20 வேட்டைக்கு மன்னர்  வருகிறார் என்றதும் சந்தோஷம் தாங்கவில்லை!
   யாருக்கு?
 வேட்டை மிருகங்களுக்குத்தான்! துரத்தி துரத்தி மகிழ்ந்தன!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த  கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!


Comments

  1. ஹஹஹ... நன்கு சிரித்தேன்...ஹா..!!!
    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி.

    ReplyDelete
  2. மிக்க அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
  3. #என்னோட கிளினிக்கோட கண்டிஷன் அப்நார்மலா இருக்கே!#
    இப்படி உண்மை பேசும் அப்நார்மல் டாக்டரை இப்போதான் பார்க்கிறேன் :)

    ReplyDelete
  4. ஆகா
    சுவை ..
    தொடர்க தோழர்

    மலர்த்தரு

    ReplyDelete
  5. ஆம்னி பஸ்ல என்ன கலாட்டா ?
    பால் விலையேத்தனாங்கன்னு கோவா போற பஸ்ஸுக்கு கூட டிக்கெட் விலையை ஏத்திட்டாங்களாம்!
    ஹஹாஅஹ் எல்லாமே சூப்பர்! சிரித்தோம்...பால் விலை ரொம்பவே ஏத்தறாங்க போல....

    ReplyDelete
  6. அருமையாக இருக்கிறது
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  7. என்னத்த சொல்கிறது ஒரே அசத்தல் தான் போங்க. அனைத்தும் ரசித்தேன் வெகுவாக பதிவுக்கு நன்றி வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. அனைத்துமே அருமை சுரேஷ்..... ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2