ஃபிளாஷ்பேக் தீபாவளி!
ஃபிளாஷ்பேக்
தீபாவளி!
கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் தீபாவளிக்கு
தங்களுடைய பழைய தீபாவளி அனுபவங்களை எழுதி முடித்துவிட்டார்கள். நானும் வேறு
எதையாவது எழுதலாம் என்று யோசித்தால் மூளை மக்கர் செய்கிறது. புதிதாக கதை, கவிதை
ஏதும் தோன்றவில்லை. இரண்டுமாதமாகவே பதிவுகளும் சரியாக எழுதி வெளியிடவில்லை.
இதற்குள் பரமு சிவசாமி போன்றவர்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்கள் கமெண்ட் போட்டால்
பதில் சொல்ல மாட்டீர்களா? என்றெல்லாம் கேட்டு மிரட்டுகிறார்கள்.
அதெல்லாம் போகட்டும். தீபாவளி
சமாச்சாரத்துக்கு வருவோம். என்னுடைய பால்ய வயது தீபாவளிகள் என் அம்மாவின் அப்பா
(தாத்தா) வீட்டில்தான் கழிந்தது. அது ஒரு குக்கிராமம். பழவேற்காடு கடற்கரைக்கு அருகில்
அமைந்த ஊர். ஆசானபூதூர் என்ற அந்த ஊரிலே மொத்தமே முப்பது வீடுகள்தாம். பயந்த
சுபாவம் உள்ள எனக்கு பட்டாசு அப்போது முதலே அலர்ஜிதான். விடிகாலையில் எழுப்பி
பாட்டி, எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள். பின்னர் புத்தாடை அணிந்து
பட்டாசு கொளுத்துவோம். எனதுமாமா இரண்டுமூன்றுநாட்கள் முன்னரேசில பட்டாசுகளை வாங்கி
வந்து வெயிலில் உலர்த்தி வைத்திருப்பார். அவரின் வழிகாட்டுதலோடு வெடிப்போம்.
மிளகாய்வெடி லஷ்மிவெடிதான் பெரிதாக வெடித்தது. நான் அதெல்லாம் தொடவே மாட்டேன்
பயம். சங்கு சக்கரம் ஒன்றை கொளுத்தி வீட்டில் இருந்த மர ஊஞ்சலில் ஒருமுறை
பயந்துபோய் போட்டுவிட்டேன். அவ்வளவு பயம்.
பெரிதாக பட்சணங்கள் ஏதும் இருக்காது. முறுக்கு
செய்வார்கள்.வடை பாயசத்துடன் கடந்து போகும் தீபாவளி. சிலசமயம் தீபாவளி அன்று கேதார
நோன்பு வந்தால் கோயிலுக்கு நோன்பு நூற்க வருவார்கள். தாத்தா கலசம் எல்லாம் வைத்து
பூஜை செய்து கதை படித்து நோன்பு கயிறு கொடுப்பார். அன்று கோயிலே களைகட்டும்.
இப்படித்தான் என் இளவயது தீபாவளிகள் கழிந்தது. பின்னர் எட்டாம் வகுப்பு படிக்கும்
சமயம் நத்தம் வந்துவிட்டேன். இங்கும் பெரிய அளவில் கொண்டாடியது இல்லை. ஆனால்
தீபாவளிக்கு முன்பாக அப்போது ரெட் ஹில்ஸில் இருந்த குமரன் ஸ்டோர்ஸில் துணி எடுக்க
செல்வோம். நானும் மூன்று தங்கைகளும் அப்பா- அம்மா என்று துணி எடுக்கச் செல்வதே
அலாதி. கடையே அல்லோகலப்படும். அந்தக் கடையில் நிரந்தர வாடிக்கையாளர் நாங்கள். சிறப்பு
தள்ளுபடியும் கொடுப்பார்கள். துணி எடுத்து முடித்ததும் பெண்கள் வளையல், மணி என்று
வாங்கிக் கொண்டு வீடு வருவோம். இப்போது குமரன் சில்க்ஸே இல்லை. சென்னை தி. நகர்
குமரன் சில்க்ஸுக்கு போட்டியாக செயல்பட்டது இந்த கடை. தி.நகர் குமரன் சில்க்ஸ்
காரர்கள் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்று விளம்பரம் செய்யும்
அளவிற்கு இந்த கடையில் வியாபாரம் நடக்கும். இந்த கடையின் விளம்பரம் விவிதபாரதியில்
கூட ஒளிபரப்பாகும்.
வீட்டில் அம்மா, முறுக்கு, மைசூர்பாகு, பர்பி
என்று பட்சணங்கள் செய்ய தீபாவளி அன்று மூன்று மணிக்கே எழுப்பி கங்கா ஸ்நானம் என்று
சொல்லி எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள். அப்போது ஞானபூமி இதழில் கங்கை
நீர் இலவசமாக கொடுப்பார்கள் அதை குளிக்கும் போது கலந்து குளிப்போம். பின்னர் இட்லி
தோசை பலகாரங்கள். அப்புறம் சென்னைத் தொலைக்காட்சியின் தீபாவளி நிகழ்ச்சிகள். அந்த
நிகழ்ச்சிகள் இன்றைய நிகழ்ச்சிகள் போல் சினிமாவையே கொண்டிராமல் வித்தியாசமாக
இருக்கும். இரவில் சிறப்புத் திரைப்படம் ஒளிபரப்பாகும் ஒன்றுவிடாமல் ரசிப்போம்.
இடையில் பட்டாசு வெடிப்போம்.
அன்று கையில் பணம் குறைவு. வாங்கும் பொருட்களை
பார்த்து பார்த்து வாங்குவோம். வீணடிக்க மாட்டோம். கொஞ்சமாக இருந்தாலும் மனசு
நிறைவாக இருக்கும். இன்றோ எல்லாம் இயந்திரமயம். பணத்திற்கும் குறைவில்லை! ஆனால்
தீபாவளியில் மனம் நிறையவில்லை! இது எனக்கு மட்டுமல்ல! பதிவர்கள் பலருக்குமே என்று
பதிவுகளை பார்க்கும்போது தெரிகிறது.
அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடைசியில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மை. உண்மை. உண்மை.
பழைய தீபாவளி நினைவுகளை
ReplyDeleteகிளறிப் போனதுடன் இன்றைய யதார்த்த நிலையை
மிகச் சரியாகச் சொல்லி முடித்தவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அன்று கையில் பணம் குறைவு. வாங்கும் பொருட்களை பார்த்து பார்த்து வாங்குவோம். வீணடிக்க மாட்டோம். கொஞ்சமாக இருந்தாலும் மனசு நிறைவாக இருக்கும். இன்றோ எல்லாம் இயந்திரமயம். பணத்திற்கும் குறைவில்லை! ஆனால் தீபாவளியில் மனம் நிறையவில்லை! இது எனக்கு மட்டுமல்ல! பதிவர்கள் பலருக்குமே என்று பதிவுகளை பார்க்கும்போது தெரிகிறது.//
ReplyDeleteமிகவும் சரியே சுரேஷ்! நல்ல தீபாவளி நினைவுகள் தங்களுடையது!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
அருமையான மலரும் நினைவும்
ReplyDeleteஇன்றைய நிலைப் பகிர்வும் மிகச் சிறப்பு!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதீபாவளி தன் நிறத்தை இழந்து விட்டது. திரை நிகழ்ச்சிகளுக்கும், திரைப் படங்களுக்கும் தன்னை விட்டுக் கொடுத்து விட்டது.
ReplyDeleteஉங்கல் கவிதைகல் சூப்பர் சினிமாவில் உங்கள் ஹைக்கூ திருடப்படுகிறது என்று சொன்னவனும் நான் தானே. ஒரு சிரு தவரை சிட்டிக் காட்டினாள்: அது தவரா ?
ReplyDeleteஎன்ன சார் பாராட்டி எலுதினால் ஒ.கே. ஒரே ஒரு குரை சொன்னாள் போச்சு உடனே உப்பரிகையில் ஏற்றி விடுகிறீர். குரை எல்லாமே மிரட்டல் அல்ல.காய்ந்த மீன் அத்தனையும் கருவாடு ஆகிடாது. அரிவீர்கலாக.பதங்கமாக்கல் முரையில் பதப்படுத்தினால் மட்டுமே மீன் கருவாடு ஆகும் என்ரு சொல்லும் அதே வேலையில் சாதாரன குரைகள் உங்கலை பன்படுத்தாவே அன்ரி பதம் பார்க்க அல்ல என்பதை உன்ர்வீர்கலா ?
இந்தப் பத்வு அவசர கோலத்தில் வந்திருக்கு போல ? எலுத்து நடை அவ்வலவு நன்ராக இல்லை. நாஸ்டாள்ஜியா எலுதுவதில் உங்க
ளுக்கு அனுபவம் போதலை. காப்பியில் கருனைக்கிழங்கு லேகியத்தைக் களக்கி குடித்த்து போலருக்குங்க்
பரமு சிவசாமி
இனிய நினைவுகள்......
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்பு நன்பா,
ReplyDeleteநட்புடன் எலுதுவதை நட்புடன் பார்க்கவேண்டுகிரேன்.
மெய்யாளுமே எனக்கும் லிமெரிக் என்றாள் என்ன என்ரு தெறியாது. அதை சொல்ல ஏன் தயக்கம் உங்கலுக்கு, லிமெரிக் கூட தெறியாமல் ஏன் கவிதை படிக்கிறாய் என்ரு நினைக்கிரீர்களா ? உங்கல் எலுத்துக்கலுக்கு மதிப்பு கொடுப்பவர்கல் தானே பின்னியோட்டம் போடுகிரார்கல். அவர்கலுக்கு உரிய மதிப்புடன் பதில் சொன்னால் தவராகிவிடுமா ?
இந்து மதத்தை தாக்கி நீங்கல் எலுதிய பதிவும் கவிதைகளும் நகைச்சுவை ச்ட்டையர்கலும் அறுமையாக இருந்தது. அடுத்த பதிவை இந்த வகையிள் உல்ல எதாவது ஒன்ராக எலுதுங்கள் ப்லீஸ்.
இந்து மத பலக்க வளக்கங்களினால் உருவாகும் தீவிரவாத என்னங்கலையும் அதனால் சிருபாண்மையினருக்கு விலையும் தீங்குகலையும் எலுதுங்கள். நம் பலக்கவளக்கங்கள் ஏன் இப்படி மோசமானதாக இருக்கிரது. கோவில்கள் ஏன் கொடியவர்கலை உறுவாக்க வேண்டும்.
நீங்கல் வளுவாக இருக்கும் தலங்கலில் இயங்குங்கல் சீக்கிரம் நள்ளதொறு கட்டுறையை எதிர்பார்கிரேன்.
பரமு சிவசாமி
அன்பு நண்பரே! உங்களை நான் கோபிக்கவில்லை! உங்களின் கமெண்டில் என்னை பிரபல பதிவர் என்று சொல்லிவிட்டீர்களே நான் இன்னும் பிரபலம் இல்லை என்பதைத்தான் இந்த பதிவில் கூறினேன். நான் பெரும்பாலும் பின்னூட்டத்தில் பதில் அளிப்பது இல்லை! இதற்கும் காரணம் உங்களைப் போன்ற ஒரு நண்பர்தான். நீங்கள் சொல்வது போல இந்த பதிவு கொஞ்சம் அவசரமாக எழுதப்பட்டதுதான். உங்களின் விமர்சனங்கள் என்னை பண்படுத்தும். தொடருங்கள். லிமரிக் பற்றிய விளக்கம் அந்த கவிதைகளை முதலில் எழுதியபோது அளித்து இருந்தேன். மீண்டும் ஒருமுறை விளக்கம் அடுத்த முறை பதிவிடும்போது தருகிறேன்! அதுவரை பொறுத்துக் கொள்ளவும். நானும் இந்த கவிதைக்கு கத்துக்குட்டிதான். உங்கள் கமெண்ட்டில் இப்பொழுது நிறைய எழுத்துப் பிழைகள் காணப்படுவது ஏன்? மொபைல் மூலம் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வாசகரையும் நான் மதிக்கின்றேன் இதை போகப்போக தாங்கள் புரிந்துகொள்வீர்கள்! தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
Delete