இந்து தீவிர வியாதிகள்!
இந்து தீவிர வியாதிகள்!
சென்ற இரண்டு வாரங்களாக புதன்
கிழமைகளில் மதங்களில் நடக்கும் சில கேலிக்கூத்துக்களையும் அது என்னை பாதித்தமையும்
குறிப்பிட்டேன்.
இந்து தீவிர வியாதிகள் என்ற தலைப்பில் இந்த
வாரம் பார்க்கபோவது மோடி தர்பார் ஆசாமிகளை. ஆர்.எஸ்.எஸ் என்றொரு அமைப்பு. அதன் ஆதி
அந்தம் இதைப்பற்றியெல்லாம் நான் ஏதும் அறியேன். அறிந்து கொள்ளும் ஆசையும் இல்லை.
இதன் கிளைகளாக இந்து முன்னனி போன்ற இயக்கங்கள். இவை மதம் வளர்க்கின்றேன் என்ற
போர்வையில் மதம் பிடித்து அலைகின்றன என்றே சொல்லவேண்டும். மதம் என்ன செடியா கொடியா
நட்டு வளரவைக்க.
இந்த அமைப்பினர் செய்யும் செயல்கள் அனைத்தும்
வேடிக்கையாக இருக்கும். பசுவை தெய்வமாக மதிக்க வேண்டும். பசுவைக் கொல்லக் கூடாது.
கோமாதா பூஜை செய்கிறோம். எல்லோரும் உங்கள் ஊர் பிள்ளையார் கோவிலுக்கு வாருங்கள்
என்பார்கள். வீடு வீடாக போய் அழைப்பார்கள். இதற்கென ஓர் அமைப்பாளர். அவருக்கு சில
தொண்டர்கள். இரண்டு மூன்று தினங்கள் வீடு வீடாக வந்து கோயிலுக்கு அழைத்துச் சென்று
பிரசங்கங்கள் நடத்தி பசு ஒன்றிற்கு பூஜைகள் புனஸ்காரங்கள் செய்து ஆரத்தி எடுத்து
அனைவரையும் வழிபடச் சொல்வார்கள். பிரசாதம் தருவார்கள் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு
கலைந்து போகும் பொதுமக்கள் அன்றைய மாலையிலேயே அந்த அமைப்பாளரின் மிலிடரி ஓட்டலில்
பிரியாணியும் குஸ்காவும் ஒரு வெட்டு வெட்டுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால் போதும்!
ஊரெல்லாம் ஒரே ரணகளம்தான். மூலைக்கு மூலை பிள்ளையார் வைத்து அமர்க்களப்படுத்தி
ஊர்வலம் வந்து காசு வசூலித்து இறுதி நாளன்று டாஸ்மாக்கிற்கு தானம் செய்து விட்டு
கடலில் கரைத்து விடுவார்கள்.
இதில் போட்டிவேறு! அவன் ஐந்தடி பிள்ளையாரா?
நான் ஆறடி வைப்பேன்! அவன் ஒருவேளை பூஜை செய்து படையலா? நான் மூன்று வேளை படையல்
போடுவேன்! பிள்ளையாருக்கு ஆறடி மாலையா? நான் இன்னும் பெரியதாக போடுவேன்! எல்லாம்
எத்தனை நாளைக்கு இந்த பிள்ளையார் வைக்கும் போதே கடலில் போட நாள் குறித்துத்தானே
அனுப்புகிறார்கள் அதுவரை.
பாவம் உள்ளூர் விநாயகர் கோவிலில் விளக்கேற்றக்
கூட எண்ணெய் இருக்காது. இருட்டில் அமர்ந்து இருப்பார் பிள்ளையார். ஆனால் இந்த
ரெடிமெட் பிள்ளையார்களோ அமர்க்களப்படுவார்கள்.
இன்னுமொன்று இவர்கள் செய்வது படிக்கிற
பிள்ளைகளை கெடுப்பதுதான். ‘சாகா’ என்றொரு
பயிற்ச்சி! நல்ல உடற்பயிற்சிதான் இல்லையென்று சொல்லவில்லை! அதை விடுமுறை தினத்தில்
சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை! மாலைவேளைகளில் பிள்ளைகளை கூட்டிச்சென்று நம்
மதத்தை காக்கிறோம் அது இதென்று பெற்றோர்களை சரிகட்டி அழைத்துச் சென்று ஓர் இரண்டு
மணிநேரம் உடற்பயிற்சி இவர்களுடைய பாட்டு பிரசங்கம் என்று வீணடிக்கின்றனர்.
பிள்ளைகளின் கல்வியை இப்படி பாழடிக்கலாமா?
பெரும்பாலும் இந்த பயிற்சிக்குச் செல்பவர்கள் கொஞ்சம் மக்கு பசங்களே! படிப்புக்கு
டிமிக்கி கொடுத்து இங்கே செல்கின்றனர். ஏற்கனவே படிப்பில் பின்
தங்கியிருப்பவனுக்கு இதனால் இன்னும் பின்னடைவுதானே!
இப்படி இந்த அமைப்புக்களால் என்ன பிரயோசனம்!
இதனாலெல்லாம் இந்துமதம் வளர்ந்துவிடுமா என்ன? ஏதோ ஓர் அரசியல் கட்சியின்
கைக்கூலிகளாக இருந்துகொண்டு இன்னும் சில கைக்கூலிகளை வளர்க்க வேண்டுமானால் இது
உதவலாம். உண்மையில் மதம் வளர்க்க நினைப்பவர்கள் இப்படி புதிது புதிதாக பிள்ளையார்
வைக்காமல் இருக்கும் கோவில்களை சீரமைத்து அதில் விளக்கேற்றி வைக்கலாம்.
இந்துமதத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவலாம்.
இலவசமாக டியுசன் சொல்லித் தரலாம். இதையெல்லாம் விட்டு இப்படி சாகா அது இதென்று
பிள்ளைகளை அழைத்துச் சென்று அவர்கள் எதிர்காலத்தை பாழாக்கலாமா?
இவர்கள் இப்படி என்றால் இப்போதெல்லாம் திடீர்
சாமியார்களும் சித்தர்களும் முளைத்து விடுகிறார்கள். அவர்களை குருஜி என்றுதான்
பக்தியோடு அழைக்க வேண்டியிருக்கிறது. காவி வஸ்திரம் ஒன்றை அணிந்து கொண்டு ஒரு
முழம் தாடியும் உச்சிக்குடுமியும் வைத்துக்கொண்டால் சுவாமிஜி ஆகிவிடுகிறார்கள்.
ஏதோ ஒன்றை வசியம் செய்து கொள்கிறார்கள்.
அல்லது அரைகுறையாக இந்துமத நூல்களையும் ஜோதிடத்தையும் கற்றுவைத்துக்கொண்டு ஒரு
கோவிலை கட்டி வைத்துக் கொண்டு குறி சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
நம் மக்களுக்கு எல்லாமே கவலைதான்! காலையில்
எழுந்ததும் ஒண்ணுக்கு வரவில்லை என்றால் கூட யாரோ செய்வினை செய்து விட்டார்கள்
என்று சந்தேகம் கிளம்பிவிடுகிறது. ஓடு அந்த கோவிலுக்கு சாமியாரை பார்! அவர் குறி
சொல்லுவார். பரிகாரம் சொல்லுவார் என்று நமக்கு இலவச ஆலோசனை மையங்கள் அண்டைவீடு
பக்கத்துவீடு எதிர்வீடு என்று ஏராளம்.
குறிப்பாக பெண்களிடையே இந்த குறி
சொல்பவர்களுக்கு செல்வாக்கு அதிகம். இவர்கள் ஒன்று சொல்லிவிட்டால் அதை அப்படியே
செய்து முடிக்கத் தயாராக இருக்கின்றனர் பெண்கள். அந்தக் கோவிலுக்கு போ எலுமிச்சம்
பழத்தில் விளக்கேற்று! பூசணிகாயில் விளக்கேற்று! தேங்காய் மூடியில் விளக்கேற்று.
மிளகாய் அரைத்து இந்த சாமிக்குத் தடவு! காசை வெட்டிப்போடு! இப்படி எண்ணற்ற
பரிகாரங்கள் அவர்கள் கற்பனையில் உலா வருகின்றன.
இந்த மிளகாய் அரைத்து தடவுதல் அதை
நினைக்கும்போதே நமக்கு உடம்பு எரிகிறது! உண்மையில் அந்த சாமிக்கு உயிர் இருந்தால்
தடவுபவரை சுட்டெரித்துவிடும். இது போதாதென்று தாயத்து குளிகை என்று இன்னும்
என்னமெல்லாமோ செய்கின்றனர் இந்த சாமியார்கள்.
போதாத குறைக்கு பவுர்ணமி அமாவாசைகளில் இந்த
சாமியார்களின் ஆசிரமத்தில் நடக்கும் மகா யாகங்கள்! அதில் என்னவெல்லாமோ
கொட்டுகிறார்கள். ஒரு நியமனமும் கிடையாது. இத்தனை செய்தும் நோய் தீரவில்லை! குறை
தீரவில்லை என்றால் திருந்துகிறார்களா?
அதுதான் கிடையாது நம் மக்களிடம்! இந்த
சாமியார் சரியில்லை! அந்த சாமியாரிடம் போ! சரியாகிவிடும்! அடுத்த சாமியாரிடம்
ஓடுகிறார்கள்.
இது போதாது என்று வாஸ்து கற்கள், வாஸ்து மீன், ராசிக்கல் மோதிரம், எந்திரம், மூலிகை என்று எண்ணற்ற வியாபாரங்கள். இப்படியெல்லாம் இருந்தால் இதை வாங்கிவைத்து அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிட மாட்டார்களா? இதை மக்கள் உணருவதே இல்லை. அவர்களுக்குத் தேவை உடனடியாக ஓர் நிவாரணம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற அவசரம். இந்த சாமியார்களுக்கு என்று சில லோக்கல் சேனல்கள் விளம்பரம் செய்கின்றன. இன்னும் சிலருக்கு பத்திரிக்கை விளம்பரம். இதையெல்லாம் நம்பி அந்த டீவியிலே வந்தாரு. இந்த புக்குலே படிச்சேன்! தொட்டது எல்லாம் துலங்குதாம்! அவருகிட்ட மாரியம்மனே இறங்கி வந்து பேசுதாம்! என்றெல்லாம் ஓடுகின்றனர் மக்கள்.
சாமியார்களிடம் வைக்கும் நம்பிக்கையை தன் மீது
வைத்தாலே எல்லாம் சரியாகிவிடும்! அதுபோல இன்பங்களும் துன்பங்களும் வாழ்வின்
இருபக்கம்! அதை அனைவரும் அனுபவித்தே ஆகவேண்டும்! இதை உணரவேண்டும் மக்கள்.
கடவுள் உன்னிடம் எதையும் கேட்பதில்லை! அவருக்கு
கொடுக்க நீ யார்? உனக்கு இது வேண்டும் என்று அவரிடம் யாசிப்பவன் நீ! உனக்கு
கொடுக்கும் நிலையில் கடவுள் இருக்கிறார் என்றால் அவருக்கு நீ என்ன கொடுப்பது? இதை
உணர வேண்டும். இதெல்லாம் இந்துமதத்தை பிடித்த தீவிர வியாதிகள். இதைக் குணப்படுத்தினாலே இந்துமதம் செழிக்கும். இதை உணரவேண்டும் மக்கள்.
இதனால் ஆலயங்களை சீரமைப்பதையும், பழைய
கோவில்களுக்கு உபயங்கள் செய்வதையும் குறை சொல்லவில்லை! அது உங்கள் கடமை! இருண்டு
கிடக்கும் கோயிலுக்கு விளக்கேற்றி வைப்பது தவறில்லை! இதை கொடுத்தால்தான் இதை
செய்வேன் என்று பேரம் பேசுவதுதான் தவறு.
உள்ளார்ந்த அன்புடன் இறைவனை வணங்குங்கள்! நம் மதம்
ஒன்றும் பிள்ளையில்லை வளர்க்க! அது தானாக வளரும். நம் வினைகளை நாம் அனுபவித்துதான்
ஆகவேண்டும். அதை எந்த பரிகாரமும் சரி செய்து விடாது. வீணாக மூடநம்பிக்கைகளில்
கவனம் செலுத்தாதீர்கள் என்பதுதான் என் கருத்து.
உங்கள் உள்ளங்களையும்
இல்லங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்களை தேடி இறைவன் வருவார் என்று
சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கின்றேன்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மதவாதிகளுக்கு அற்புதமான சவுக்கடி வார்த்தைகளில் விலாசியுள்ளீர்கள் நண்பரே...மதப்பேயை விரட்டினால் நாடும் முன்னேறும் நாமும் முன்னேற முடியும்.
ReplyDeleteஇந்த பதிவை காண்க...
http://www.killergee.blogspot.ae/2014/09/my-india-by-devakottaiyan.html
//பிள்ளைகளின் கல்வியை இப்படி பாழடிக்கலாமா? பெரும்பாலும் இந்த பயிற்சிக்குச் செல்பவர்கள் கொஞ்சம் மக்கு பசங்களே! படிப்புக்கு டிமிக்கி கொடுத்து இங்கே செல்கின்றனர். ஏற்கனவே படிப்பில் பின் தங்கியிருப்பவனுக்கு இதனால் இன்னும் பின்னடைவுதானே!//
ReplyDeleteசற்றும் எதிர்பாரா இடத்தில் இருந்து சற்றும் எதிர்பாரா விமர்சனம்...
முற்றிலும் உண்மை.
படிப்பில் பின்தங்கிய மனிதம் குறித்த புரிதல் இல்லமால் தெய்வீக புனிதம் என்று சொல்லி மாற்று மதத்தை அழிக்க புறப்படும் புற்றீசல் இவர்கள்.
நன்றி தோழர்
உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை.... அருமையான புரிதல்....
ReplyDelete
ReplyDeleteசிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
என்ன சுரேஷ்...? மேலே உள்ள புகைபடத்தில் உள்ளது "பரமஹம்ச நித்யானந்தா" போல இருக்கே. அவர் படம் இங்கே எப்படி?
ReplyDeleteநல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
மிக அருமையான உண்மையைப் பறை சாற்றும் பதிவு சுரேஷ்!
ReplyDeleteஅந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாற வில்லை....மதத்தில் ஏறிவிட்டான்....
எத்தனை உண்மை!
நல்ல புரிதலுடன் எழுதப்பட்ட ஒன்று! மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கைக்கும், இத்தகைய செயல்களுக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு
அழகான வெளிப்பாடு!! குடோஸ்!
"உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்களை தேடி இறைவன் வருவார் "- Really fantastic line
ReplyDeleteநடுநிலையோடு சொல்லி இருகிறீர்கள். விநாயகர் சதுர்த்தி சமயங்களில் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள் சொல்லில் அடங்காதவை. பாவம் பிள்ளையார் என்று நினைத்துக் கொள்வேன்.
ReplyDeleteஇன்னமும் "ஷாக்கா" வெல்லாம் நடக்கிறதா?
மதுஅவர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த இந்த பதிவை பார்த்து வந்தேன்.. உங்களிடமிருந்து வந்த மிகவும் மாறுபட்ட பதிவு பாராட்டுக்கள்
ReplyDeleteநம் மதம் ஒன்றும் பிள்ளையில்லை வளர்க்க! அது தானாக வளரும்
ReplyDeleteஉங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்களை தேடி இறைவன் வருவார்
இந்த 2 வரிகளும் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள்... சபாஷ்
அட! எதிர்பாராத ஒரு பதிவு.
ReplyDeleteநடுநிலையோடு நின்று ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள்.
ஒவ்வொரு வரியிலும் உண்மை தெரிகிறது.
அந்த கடைசி வரிகள் - அற்புதம்.
இந்துத் தீவிரவாதிகளின் உண்மை முகத்தை காட்டிய பகிர்வு...
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்.
சரியான பதிவு சார்!
ReplyDeleteநிதர்சனம் கொப்பளிக்கும் ஓவ்வொரு வரியிலும் சங்கீத ஆபரனங்களை சாகசமாய் சேர்த்துள்ளீர்கள். சித்திர யதார்த்தங்களை தேன் தடவாமல் உப்புத்தாள்களால் தேய்க்கப்பட்ட மாவுக்கல்லில் செதுக்கிய சிற்பங்களின் சீரிய மூக்கு போன்று தெளிவாக எடுத்துக்காட்டி சொல்லப்பட வேண்டியவர்களுக்கு இடித்துரைத்துள்ளீர்கள். ஆட்டைக்கானோமே என்று தேடிக்கொண்டிருந்த தெனாலிராமனிடம் என்ன தேடுகிறீர்கள் என்றார்களாம் ? எண்ட ஆட்டைத் தான் என்றாராம். அது தான் உம்ம கழுத்தில் இருக்கிறதே என்ற உடன் அட ஆமா என்றாராம் தெனாலிராமன். அது போல் தீவிரவாதம் ஆங்கே இங்கே இல்லை நம்மருகிலேயே காலை ஆட்டிக் கொண்டு கலகல வென்று சிரித்துக் கொண்டும் தென்காசி கயத்தாறு பகுதிகளில் வீசும் கணவாய் காற்றில் சுற்றுகிற விண்ட்மில் காற்றாடி போலவும் ஒயாது சுற்றிக் கொண்டும் நம்மிடையே இருக்கிறது என்று தொடுமாவின் கொம்பில் ஏறி நின்று சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். வித்தியார்த்த நிமிடங்களில் விந்திய மலைச்சாரலின் விளிம்பில் கப்பிய பொழுதின் கடைசி தருனத்தில் வின்னை நோக்கி கையுர்த்தி தவமாக நின்ற அகத்திய மாமுனியின் நேர்மையை நெஞ்சில் நிறுத்தி நடுநிலையாய் உங்கள் சிரீய கருத்தை பதிவுசெய்துள்ளீர்கள். தீவிரவாதிகளை இங்கே அங்கே தேடாதே உன் அருகே உன் மதத்தினர் தான் செய்கிறார்கள் என்று சொல்ல நல்ல மனப்பக்குவம் வேண்டும். சாரிட்டி ஸ்டார்ஸ் ப்ரம் யுவர் ஹோம் என்பார்களே அது போல நாம் சரியாக இருக்கிறோமா பார் என்று வலிந்து உண்மை நிலையை உவமேயமே இல்லாத உபாயத்துடன் கூடிய தெளிந்த நிர் நிலையில் விழுந்த இலையாக சலனமே இல்லாமல் சாத்வீக முறையில் எடுத்தாண்டு இருக்கும் உங்கள் எழுத்து நடைக்கு ஒரு சாக்ரடீஸ் சல்யூட்.பாண்டியமன்னனுக்கு பயந்து பாண்டி நாடுவிட்டு மானிக்கவாசகரை கூட ஓடவைத்தத மதத்தினரைப் முழித்துக்கொள்ள வைக்ககூடிய ஒருங்கிசைந்த துப்புரவான பதிவு. இன்று லவ்ஜிகாத் என்பவர்கள் யோகா என்று சொல்லப்படக்கூடிய உடற்பயிற்சி முறைக்குள் ஒழிந்திருக்கும் உள் குத்து வெளிக்குத்துக்களை அறிவார்களா ? அதற்குள் மறைந்து நிற்கும் ஆரிய வாதத்தை அறிவார்களா ? அதன் பாசிச முசோலிந்த்துவத்தை புரியாதவர்கள் அல்ல அவர்கள். உங்கள் சிந்தனை சுத்தமானது அதிதீவிர புனித சிந்தனை வாய்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சிலருக்கு சிந்தனை இருக்கும் ஆனால் சொல்ல நேர்மையான முயர்ச்சி இருக்காது. ஒரு மூத்த பிரபல பதிவர், எழுத்து திறமை மிக்கவர் இத்தனை அற்புதமாக கருத்துக்களை முன் வைக்கும் பொழுது அது பலரை சென்று அடைகிறது. பல இடங்களில் பகிரப்படுகிறது. பாரதி அக்ணிகுஞ்சு ஒன்று கண்டேன் அதை காட்டுக்குள் ஒளித்தேன் காடு அழிந்தது என்பார். அது போன்ற சிறு தீச்சுடர் போல நீங்கள் தீவரவாதத்தின் உச்ச்சனிக்கிளையை பொசுக்கி எடுத்துள்ளீர்கள் ஒருசினிமா விழாவில் நண்பர்கள் உங்கள் பதிவுகளைப்பற்றி பேசியதன் மூலமே நான் இங்கு வந்தேன். உங்களின் அழகான ஹைக்கூக்கள் திருடப்பட்டு வசனங்களில் உபயோகிப்படுகிறது என்றார்கள். ஹைக்கூக்கள் சமூக சமுதாய மாட்சிமங்கள் என்று கலந்து கட்டி கற்பூர ஜீவ ஜோதியாக எழுதியிருக்கிறீர்கள். சமீபத்தில் வந்த பேய்படம் (பெயர் வேண்டாமே) ஒன்றில் ஒருசில பகுதிகள் உங்கள் படைப்பில் இருந்து புடைக்கப்பட்டதாம். இத்தனை தகுதிகள் உள்ள தாம் ஏன் இன்னும் குடத்தில் இட்ட விளக்காக இருக்குறீர்கள். உங்கள் படைப்புகளைக் காக்க நீங்கள் ஏன் புத்தகமாக வெளியிட்டு அவற்றை ஆவனப் படுத்தக் கூடாது.எல்லாவற்றையும் படிக்க முடியாவிட்டாலும் ஆங்காங்கே பார்த்ததில் இத்தனை தரமான எழுத்தில் இத்தனை படைப்புகளா என்று ஆச்சர்யம் மேலிடுகிறது. வற்றியும் வற்றாத அழுக்குத்தடாகத்தில் அன்று அலர்ந்த அல்லியாக அபரீதாமான சுள் அழகில் தாமரை மலர்ந்ததிருக்குமே அது போல் கபட நாடக சூத்திர தாரிகள் சுற்றி நடக்கும் ஏகாதிபத்தியத்தின் எச்சம் சொச்சமாக இருக்கும் சூட்சன சமுதாயத்தின் நடுவே அசுவத்தாம போன்ற நெஞ்சுரமிக்க வீரனாக நீங்க நிமிர்ந்து நிற்கிறீர்கள். சோதிர்மாஸ்ய கோனத்தின் உட்பொருளை உள்ளத்தில் வைத்து நேர்மையே கடமையாய் இருக்கும் சற்குனம் நிறைந்தவரே நீர் வாழ்க.
பரமுசிவசாமி
பசுபதிபாளையம்
நல்ல பகிர்வு.
ReplyDeleteமதத்தில் அரசியலைக் கலக்கும் மதவாதிகளின் முகத் திரையை அருமையாக கிழித்து உள்ளீர்கள்!வாழ்த்துகள் !
ReplyDeleteஉங்களின் தளத்தில் உள்ள அனைத்து தளத்திலும் என் ஆதரவை வழங்கிவிட்டேன் !
மிஸ்டர் வெளக்கெண்ணை, இந்து தீவிர வாதத்தை கண்டித்தாகிவிட்டது. தினம் தினம் நடுக்கும் திவீரவாதம் உன் கண்ணில் படவில்லையா. தலை அறுப்பவர்களும் உயிருடன் கொளுத்துபவர்களைப் பற்றியும் ஒரு நாலுவரியில் கண்டிச்சிருக்கியா ? அட ஆக்கம் கெட்ட கூவை இத்தனை பயத்தை வைத்துக்கிட்டு எவன் குட்ட குட்ட கூனிபவனோ அவனை குட்டுகிறாயே உனக்கே அசிங்கமா இல்லை. எலே தேவநாதன்னு ஒருத்தன் கர்ப்பக்கிரகத்துக்குள் அயோக்கியத்தனம் பன்னினான், அதனால அத்தனை குருக்களும் காமக் கொடூரன்கள்-னு சொல்றதா ? அவனுக்கும் மதத்துக்கும் என்னா சம்மந்தம் ? குருக்கள் தப்புப் ப்ன்னீனா பாதிரியார் முல்லா என்று யார் தப்புப் பன்னினாலும் அவா சார்ந்த மதத்தை குறை சொல்வது உன்னைப் போன்ற அரைகுறைகள் மட்டுமே.
ReplyDeleteநித்யானந்தாவுக்கும் இந்து தீவிரவாதத்துக்கும் என்னாடா எழவு சம்மந்தம்.
சரி சரி என்னா வேணா எழுதிட்டுப்போ எவனாவது எதுக்காகவாது பாராட்டுனும்னு வெறிகொண்டு எழுதும் போது இப்படி தான் எழுத முடியும்
என் பின்னூட்டத்தை பெரிசா எடுத்துகொள்ள வேண்டாம் அய்யனே, நீர் எப்போதும் போல பின்னூட்ட வெறியனாக வளம் வர கண்டதையும் கக்கி வாழ்க. நான் சொன்னதற்காக வேற தீவிரவாதத்தை கண்டிக்க நினைக்காதே அது உனக்கு நல்லதல்ல. வலையில் எழுதுவது பொழுதுபோக்கிற்க்கு அது மாய உலகம். வம்பு இழுத்து கொள்ளாதே. மற்றயாரும் இந்துக்கள் மாதிரி மெண்மையானவர்களோ மேம்பட்டவர்களோ அல்ல.
கோபிசந்த்கொபராகடே