தளிர் லிமரிக் கவிதைகள்!
தளிர் லிமரிக் கவிதைகள்!
அம்மா போனாங்க ஜெயிலு!
ஆண்டவனுக்கு தொண்டனுங்க
அடிச்சாங்க மெயிலு!
அட்ராசக்கை கிடைச்சது பெயிலு!
சாலையில் ஓடுது ஆறு!
ஏரிகுளங்களில் இல்லையே நீரு!
சட்டத்தை மீறியதால் இந்த ஊறு!
ஹூத் ஹூத் புயலு!
உடைச்சு போட்டுது ஆந்திரா!
இயற்கைக்கு என்னா தில்லு!
கடையில தொங்குது குட்கா!
கவர்ந்து உன்னை இழுக்குது
சோக்கா!
காலி பண்ணுமே மக்கா!
சீராய் சிந்தும்
நீர்த்துளிகள்!
தாகம் தீராத பூமி!
அணிவகுத்த கான்கிரிட்
சாலைகள்!
மழையில் ஒலித்தது பாட்டு!
தவளையாரு இசைக்கிறாரு கீதம்!
மயங்கலை யாரும் கேட்டு!
மாற்றி மாற்றி
சுரண்டினார்கள்!
மாறவே இல்லை தலையெழுத்து!
மாற்றத்தை இன்னும்
விரும்பினார்கள்!
இறங்கிவந்தது மேகம்!
இடி இடித்து பெய்தது மழை!
தீருமோ தமிழ்நாட்டின் தாகம்!
பாறை சுமந்த கோவில்கள்!
பாவம் நிறைய சுமக்கின்றன!
பகல்கொள்ளையாக தரிசன
கட்டணங்கள்!
கடை வீதி நெறஞ்சாச்சு!
உடை மணிகள் வாங்கித் தள்ள
உடையாளின் மனம் நிறைஞ்சாச்சு!
கடைக்கோடி நாடுகளும் அள்ளுது
பதக்கம்!
கோடிகோடி மக்களிருந்தும்
குறைந்திடவில்லை நம் ஏக்கம்!
பேருதான் விராட் கோலி!
கிரிக்கெட்டில் அவர் கில்லி!
ஊரு என்னமோ புதுதில்லி!
தேங்கி தேங்கி நிற்குது நீரு
தெருவெல்லாம் உருவாகுது மாசு!
தினமும் படையெடுக்குது கொசு!
தெருவில மொய்க்குது கூட்டம்!
திருடங்க போடுவாங்க ஆட்டம்!
தீபாவளிக்கு இந்த கொண்டாட்டம்!
தமிழ் மூதாட்டி அவ்வை!
தமிழுக்கு தந்தாங்க ஆத்திச்சூடி!
தமிழா நீ நினைவில் வை!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நான் தான் முதல் போணியா? நல்லா இருக்கு கவிதைகள் எல்லாமும்! :)
ReplyDeleteரொம்ப நாளாக் கேட்கணும்னு! லிமரிக் கவிதைகள் சென்ரியு கவிதைகள் என்ன வித்தியாசம்? அவற்றை ஏன் அப்படி அழைக்கணும்? புரியலை எனக்கு! :(
ReplyDeleteSuper
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை.. பாராட்டுகள் தளிர் சுரேஷ்.
ReplyDeleteபுன்முறுவலுடன் சிந்திக்கவைத்த லிமெரிக் கவிதைகள் ! சமீபத்திய சமூக பிரச்சனை அனைத்தையும் தொட்டது அருமை !
ReplyDeleteநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
அனைத்தும் அருமை ! தீபாவளி வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteகுடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பு நன்பா!
ReplyDeleteமறுபடியும் அம்மா அவர்களை வம்புக்கு இலுத்துள்ளீர்கள். அந்த கசப்பை மரந்து உங்களை இப்போ பாராட்ட வைத்திருக்கிரது உங்கல் லிமெரிக். என்ன கவிதை சார்.... பட்டைய கிளப்புரீங்க அர்புதமான திரமைகல் நிரைந்த உங்கல் பதிவுகல் எப்படி எனக்கு இவ்வலவு தாமதமாக கன்னில் பட்டதென்றே தெரியவிள்ளை. குழந்தைகல் கதை அது ஒரு குழந்தைக்கு எந்த நடை பிடிக்குமோ அப்படி , அரசியளா அதிலும் அடிதூள் நகைச்சுவைக்கோ பஞ்சமே இல்லை.
பராட்டு ஒருபுரமிருந்தாலும் சில கேல்விகள்.
பிரபலமான பதிவர் என்பதாள் உங்கலை மதித்து கருத்து சொல்லும் பதிவர்கலை மதித்து பதில் சொள்வதில்லையோ ? லிமரிக் என்றால் என்ன என்ரு கேட்டவறுக்கு பதில் எங்கே ? அப்படியே நலுவி விட்டீர்களே ? மற்ற மட்டமான பதிவர்கலை போல் மற்றவர்களை மதிக்காமல் இருப்பது சரியா. நாளு பேர் நீங்கல் எலுதியதை படிக்க வருகிறார்கலே அது பெரிதா இல்லை உங்கள் திரமை அதைவிட பெறிதா ? என் கேல்விக்காவது பதில் உண்டா ?
தீபாவளி நல் வாழ்த்துகல். வாழ்க வலமுடன்.
பரமுசிவசாமி
அம்மா போனாங்க ஜெயிலு!
ReplyDeleteஆண்டவனுக்கு தொண்டனுங்க அடிச்சாங்க மெயிலு!
அட்ராசக்கை கிடைச்சது பெயிலு!//
அட் அட.....சூப்பர் கவிதைகள் எல்லாமே!