தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


வானம் அழுதது
பூமி மகிழ்ந்தது
மழை!

பற்றியதும்
வழுக்கியது
பாசி!

முடியும் வரை பயணம்!
அலுக்கவில்லை!
சருகுகள்!

அடைத்து விற்கிறார்கள்!
நிறையவே இல்லை!
சிப்ஸ்!

அனுமதியின்றி ஆக்ரமிப்பு
வீட்டினுள் புகுந்தது
ஒட்டடை!

தேயத் தேய
பிறந்தது வழி!
பாதை!


மேகப்படையெடுப்பு
சமாதானத் தூது!
வானில் கொக்குகள்!

தேடிக்கொண்டே இருக்கின்றன!
தொலைந்து போகின்றன
எறும்புகள்!

சிறைபட்ட கைதி!
சிக்கியும் தப்பினான்!
ஜன்னல் காட்சி!

துடைத்து எடுத்தாலும்
சேர்ந்து கொண்டே இருக்கிறது!
அழுக்கு!

கருவூன்ற
வெட்டப்பட்டன கன்றுகள்!
வாழை!


ரசிக்கவில்லை
ருசித்தது!
மாக்கோலத்தில் அணில்!

குளிர்ந்ததும்
குளிர்ந்தார்கள் மக்கள்!
மாலைச் சூரியன்

 தவழ்கையில்
 ஈரமானது தரை!
 குழந்தை!


 மலர் மேடை!
  ஜதிபோட்டன!
வண்ணத்துப்பூச்சிகள்!

 ஒளிந்து கொண்ட மரங்கள்!
வெளிச்சம் போட்டன
 மின்மினி!


 கொள்ளை அடித்தாலும்
 திருடனாவதில்லை!
  குழந்தைகள்!

  வீடெல்லாம் அலங்கோலம்
  அழகாய் இருந்தது
   குழந்தை!

 ஒளித்து வைப்பதில்லை!
 வெளிப்படுகிறது பாசம்!
 குழந்தைகள்!


  தெருவோர வெள்ளம்!
  மீண்டது குழந்தை உள்ளம்!
  காகிதக் கப்பல்கள்!

வணக்கம் அன்பர்களே!  பதிவர் கீதா சாம்பசிவம் மற்றும் நண்பர் பரமு சிவசாமி அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஹைக்கூ, சென்ரியு, லிமரிக் பற்றிய விவரங்களுக்கான இணைப்பு கீழே கொடுத்துள்ளேன். நான் இங்குதான் இவரிடம்தான் ஹைக்கூ பயின்றேன். அதனால் அவர் எழுதிய இணைப்பை தந்துள்ளேன். நன்றி!  ஹைக்கூ, சென்ரியு, லிமரிக், வடிவம்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அணில்,வண்ணத்துப்பூச்சி, குழந்தை மிக ரசித்தேன்
    யாவும் ரசனைதான்

    வாழ்க வளர்க

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  3. படங்களும் பதிவும் அருமை

    ReplyDelete
  4. ஒவ்வொன்றும் அருமை. அதிலும் அந்த குழந்தைக்கான வரிகள் அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அனைத்துமே அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2