ஊடகங்களே ஏன் இந்த அவசரம்?
ஊடகங்களே ஏன் இந்த அவசரம்?
அம்மாவின் ஜாமீன் மனு மீதான
வழக்கில் தீர்ப்பு வரும் முன்னரே அவசரப்பட்டு நிபந்தனை ஜாமீன் கிடைத்துவிட்டது
என்று தவறான செய்தியைக் கொளுத்திப் போட்டுவிட்டன ஊடகங்கள். மதியம் இரண்டு மணி
வாக்கில் 2.30க்கு வழக்கு ஒத்தி வைப்பதாக தகவல். மூன்று மணிக்கு அம்மாவுக்கு
நிபந்தனை ஜாமீன் கிடைத்துவிட்டது என்று தினமலர், தி இந்து முதலியவற்றில் செய்திகள்
பரவ பேஸ் புக் போராளிகள் வெளுத்துக் கட்டினார்கள்.
ஆளாளுக்கு விதவிதமாய் ஸ்டேட்டஸ்! சிலர்
சரியென்றும் சிலர் தவறென்றும், சிலர் பவானி சிங்கின் நேர்மையை கிண்டல் செய்தும்
இன்னிக்கே தீபாவளி ஸ்டார்ட் ஆயிருச்சு! என்றும் விதவிதமான நிலைத்தகவல்கள்!
இவர்கள் அத்தனை பேரையும் நிலைகுலையவைத்தது
உயர்நீதிமன்ற தீர்ப்பு. ஜாமீன் நிராகரிப்பு என்பதுதான் அது. அவசர அவசரமாக ஊடகங்கள்
தங்கள் தகவல்களை மாற்றி அமைத்தன.
நான் கேட்பது எல்லாம் ஏன் இந்த அவசரம்?
சரியான செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்களே இப்படி தவறான செய்திகளை
பரப்பினால் அப்புறம் யாரை நம்புவது?
இப்போதே நம்மிடையே இருக்கும் ஒவ்வொரு ஊடகமும்
ஓர் கட்சியை சார்ந்துதான் இருக்கிறது. பொதுவான தூர் தர்ஷன் கூட ஆளுங்கட்சிக்கு
ஜால்ரா அடிக்கும் நிலைமை. இந்தநிலையில் கொஞ்சம் கூட பொறுப்புணர்ச்சி இல்லாமல்
அவசரப்பட்டு அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்ப வேண்டிய
அவசியம் என்ன?
அன்று வழக்கில் தண்டனை கொடுத்தபோது கூட
விடுதலை என்று சில ஊடகங்கள் தவறான தகவல்களை தந்தன. இன்று மீண்டும் அப்படி ஒரு
தவறான பரப்புரை. தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் ஊடகங்களே இப்படி அதிக
விற்பனைக்கும் ஹிட்ஸுக்கும் ஆசைப்பட்டு, அதுவும் இல்லாமல் செய்திகளை முந்தி
தருவதில் சிறப்பானவர்கள் என்பதை காட்டிக்கொள்வதிலும் நம்பர் ஒன் என்று போட்டுக்
கொள்ளவும் ஆசைப்பட்டு இப்படி பொய்யான தகவல்களை தருகின்றன என்பது வேதனைப்படவைக்கும்
செய்தி.
தன் வீட்டில் பெண்டாட்டியை நம்பாதவன் கூட தான்
தொடர்ந்து படிக்கும் நியுஸ்பேப்பரை வேதமாய் நம்புவான். அதில் செய்தி வந்துவிட்டால்
அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொள்வான். இந்த பேப்பர்ல போட்டிருந்துச்சு! அது
உண்மையாகத்தான் இருக்கும் என்பான். பல சரித்திர சம்பவங்கள் ஊடகங்கள் எப்படி
நாட்டில் ஆட்சியையே மாற்றி அமைத்தன என்பதை சொல்லுகின்றன. அப்படி இருக்கையில்
ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டாமா? கொஞ்சமாவது சமூக அக்கறை வேண்டாமா?
ஏற்கனவே கொலை கொள்ளை கற்பழிப்பு
செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து அதை விதவிதமாய் வர்ணித்து விற்பனையை அதிகரிக்க
என்னவெல்லாமோ இழித்தனங்கள் செய்யும் ஊடகங்களின் போக்கு கவலைப்பட வைக்கிறது. முன்னனி
நாளிதழ் ஒன்று வைக்கும் தலைப்புக்கள் இதற்கு ஓர் உதாரணம்.
யாரோ ஓர் வக்கீல் சொன்னதை செய்தியாக்கி தப்பான
செய்தியை பரப்ப வேண்டியதன் அவசியம்தான் என்ன? அவசரம்தான் என்ன? அதிமுக காரனை விட
அதிக ஆவலாக இருந்த ஊடகங்களே உங்கள் முகத்தில் நீங்களே கரியிட்டுக் கொண்டீர்களே!
ஊடகங்களே! உங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம்
என்றால் வேறு ஏதாவது தொழில் செய்து கொள்ளுங்கள்! செய்தித்துறை என்பது நாலாவது
தூணாக பார்க்கப்படுகிறது. அந்த தூணே அரித்துப் போனால் அப்புறம் மக்கள் யாரை
நம்புவார்கள்!
உங்கள் விற்பனைக்காகவும் அரசியல்
லாபத்திற்காகவும் அப்பாவி மக்களை ஏமாற்றாதீர்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நியாயமான கேள்வி சார், நானும் கல்லூரி முடிந்து வந்தவுடன் டிவியில் பார்த்து ஜாமீன் கிடைத்துவிட்டதென நினைத்து பேஸ்புக்கில் கூட ஸ்டேட்டஸ் போட்டுவிட்டேன், பின்னர் அதே செய்தி சானல் ஜாமீன் ரத்து என்றதும் எனக்கும் கடும் கோபம் வந்தது.... நல்ல பகிர்வு சார்..
ReplyDeleteவிளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் பொறுப்பற்ற அவசரம்.
ReplyDeleteசுரேஷ் நல்ல பதிவு, ஊடகங்களுக்கு இது ஒரு ஸ்கூப், அவ்வளவுதான் ஆதாலால் கேட்டதை முதலில் அறிவித்துவிடுவார்கள்.
ReplyDeleteசபாஷ் சுரேஷ்! மிக மிக உண்மையான சரியான கேள்வி! பொறுப்பற்ற ஊடகங்கள் என்று தெரியாதா சுரேஷ்! பரபரப்பு செய்திகள் தானே அவர்களுக்கு வேண்டியது?! அது சரியா என்று ஆராய்வது கூடக் கிடையாதே! மிக மிக நல்ல ஒரு பதிவு சுரேஷ்! கை கொடுங்கள்!
ReplyDeleteஅரசு எந்திரம் செய்யும் 'கோயபல்ஸ் 'தந்திரமாயும் இது இருக்கக்கூடும் .அதாவது ,பொய்யையே திரும்ப திரும்பக் கூறி உண்மை என்பது போல் மக்கள் மனநிலையை மாற்ற முயற்சியை மறைமுகமாக செய்வது போல் தோன்றுகிறது !
ReplyDeleteஉண்மைதான் சார்..ஊடகத்தர்மம் எல்லாம் பணம் பண்ணும் நோக்கம் அழித்துவிட்டது...
ReplyDelete//தன் வீட்டில் பெண்டாட்டியை நம்பாதவன் கூட தான்//
ReplyDeleteஇந்த ஜெயா அம்மையாரின் வழக்கை விடுங்கள். இது என்ன புது கதை இங்கே... பெண்டாட்டி சொன்னதை நம்பாதவனா...? இப்படியும் ஆட்கள் இருப்பாங்களா? கண்பியுசன்!
நல்ல பதிவு, தொடருங்கள்.
இப்போது பத்திரிக்கைகள் எல்லாம் அரசியல் கட்சிகளின் கைக்கூலியாக இருப்பது வேதனைதான்....
ReplyDeleteநல்ல பகிர்வு...
எல்லாம் பணம் பண்ணும் வேலை தான் இல்லையா நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்...!
ReplyDeleteநல்ல கேள்வி. ஆனால் உடங்கங்கள் இதற்கு பதில் சொல்லாது.
ReplyDeleteஏனென்றால், யார் முதலில் செய்திகளை வெளியிடுவது என்ற போட்டி. அந்த செய்தியின் நம்பகத்தன்மையை பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
இப்படி தவறான செய்திகளை படிக்கும் நாம் தான் முட்டாளாகிறோம்.
அவன் சொன்னான் எவன் சொன்னான்னு இவன் சொன்னானாம். எவன் சொன்னான் இவன் சொன்னன்னு அவன் சொன்னானாம்.
ReplyDeleteநியாயமான கேள்வி. இது மட்டும் அல்ல நிறைய செய்திகள் சமீப காலமாக தவறாகவே செய்தி தாழ்களில் வருகிறது.
ReplyDeleteநான் படித்து பெருமைப்படும் பதிவு இது !
ReplyDeleteநேர்மையாக, நடுநிலையாக நின்று மிகச் சரியாக, நெத்தியடியாக கொடுத்துள்ளீர்கள் !
ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றான ஊடகத்துறை வியாபார உத்தி துறையாக மாறி வெகுகாலமாகிவிட்டது ! முன்னணி பத்திரிக்கைகள் அவர்களுக்குள் நடத்தும் போட்டாபோட்டிகளும் அரசியலே !! பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அரசியல் நிகழ்வுகளைக்கூட சினிமா கிசுகிசுவாக கருதி ஹேஸ்யமாக எழுத தொடங்கிவிட்டதின் விளைவு இது !
நன்றி
சாமானியன்
எல்லாம் பணம் பண்ணும் நோக்கம் ...
ReplyDeleteஎனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடு உண்டு. நமது மீடியாக்கள் சொதப்பித்தான் விட்டார்கள்...
ReplyDeletep
கொஞ்சம் புதிய அறிவியல்(5) ...
உண்மை. ஊடகங்களின் தொல்லை தாங்க முடியவில்லை! :(
ReplyDelete