கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 20
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 20 புதுப்படம் ரிலீஸுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு? ஏன்? வேலூர்ல இருந்தா புழல்ல இருந்தான்னு கேக்கறாரு! பையன் ரொம்ப ஊதாரித் தனமா செலவு பண்றான்னு சொல்றீங்களே சிகரெட், தண்ணின்னு … சேச்சே! அந்த பழக்கமெல்லாம் கிடையாது! நிறைய டீ காபி குடிப்பான்னு சொல்ல வந்தேன்! ஆம்னி பஸ்ல என்ன கலாட்டா ? பால் விலையேத்தனாங்கன்னு கோவா போற பஸ்ஸுக்கு கூட டிக்கெட் விலையை ஏத்திட்டாங்களாம்! தலைவரை நினைச்சா சிரிப்பா இருக்கு! ஏன்? கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்தது போல கட்சியில் இருக்கும் கறுப்பு ஆடுகளையும் வெளிக்கொண்டுவர நீதிமன்றம் உதவ வேண்டும்னு அறிக்கை வெளியிடறாரே! மன்னர் வாளை உறையில் வைப்பதே இல்லையாமே! உறையில் வைக்கையில் இசகு பிசகாகி ரத்தக்கறை படிந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான் காரணம்! இந்த ஏரியாவிலேயே அவருக்குத்தான் இன்னிக்கு மதிப்பு அதிகம்! ஏன்? பால்வியாபாரம் பண்றாரே! எங்க தலைவர் கிட்டே சரக்கே இல்லைன்னு நீ சொன்னத...