தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்! சிறகடித்தது பறக்கமுடியவில்லை! செடியில் இலை! கீழே விழுந்ததும் ஆசுவாசம்! நிழல்! வளரவளர குறைகின்றன கற்பனைகள்! குழந்தைகள்! பூத்தது ஆனாலும் பறிக்க முடியவில்லை! குழந்தையிடம் குறும்பு! ஒட்டி உறவாடினாலும் தட்டிவைத்தார்கள்! காலில் தூசு! இருபுறமும் நம்பிக்கை நடுவே கரை! அலை, மக்கள்! சிவந்த சூரியன்! கவிழ்ந்த பூமி! அந்திமாலை! ஓட்டம் எடுத்ததும் நகரத்துவங்கியது படகு! காற்று! கடத்தி வந்து காதில் போட்டது காற்று! இசை! ஓலமிட்டதை ஊர்க்கூடி ரசித்தது! கடல்! ஓசையின்றி சிரித்தன! ஒருநூறு மொட்டுக்கள்! நந்தியாவதனம்! மிதிபடவே வளர்க்கிறார்கள்! புல்வெளி! நட்டுப் பராமரித்தும் வளரவே இல்லை! மின்கம்பம்! பிடித்துக்கொண்டால் விடுவதேஇல்லை குழந்தைகளிடம் பிடிவாதம்! ஒரே பருக்கைதான்! நிறைந்துபோனது மனசு! குழந்தை ஊட்டிய சோறு! விழவைத்து முத்தம்! குழந்தைக்கு கொடுக்கிறாள்! பூமித்தாய்! கண் அயர்கையில் விழிக்க ஆரம்பிக்கின்றது நகரம்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு கு...