Posts

சாமி முன்பு குமாரசாமி சத்தியம் கர்னாடகாவில் பரபரப்பு

Image
சாமி முன்பு குமாரசாமி சத்தியம் கர்னாடகாவில் பரபரப்பு எதியூரப்பா , குமாரசாமியின் சவால்களால் இன்று தர்மஸ்தலா மஞ்சுநாத சாமி கோவில் நாடு முழுவதும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது . ஆனால் கடந்த 800 ஆண்டுகளாக இங்கு சாமி முன்பு சத்தியம் செய்யும் நிகழ்ச்சி சத்தமின்றி நடந்து வருவது நிறையப் பேருக்குத் தெரியாது . தென் கனரா மாவட்டத்தில் உள்ள எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது தர்மஸ்தலா . கோவில் வளாகத்தின் ஒரு பக்கம் நேத்ராவதி ஆறு அழகுற ஓடிக் கொண்டிருக்கிறது . இங்குள்ள மஞ்சுநாத சாமி கோவில் மிகவும் பழமையானது . கிட்டத்தட்ட 800 ஆண்டுகளாக இந்தக் கோவில் இப்பகுதி மக்களுக்கு அருள் பாலித்து வருகிறது . இங்கு காலம் காலமாக ஒரு பழக்கம் நடைமுறையில் உள்ளது . அதாவது தாங்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க விரும்புவோர் இங்கு வந்து சாமி முன்பு நின்று , நான் சொல்வது உண்மை , சத்தியம் என்று சொல்லி நிரூபிப்பதுதான் அந்த வழக்கம் . சாமி முன்பு பொய் சத்தியம் செய்தாலோ அல்லது பொய் சொன்னாலோ அவர்களுக்கு கடும் விளைவுகள் ஏற்படு...

“லவ்லி லுக்”

Image
“லவ்லி லுக்” அந்த பஸ் ஸ்டாண்டில் வண்ணத்துப்பூச்சியின் பல நிறங்கள் போல பலவிதமான கலர்களில் ஆடைகள் அணிந்து பெண்கள் கூட்டம் நின்றிருக்க தங்களை சூர்யாகவும்,ஆர்யாவாகவும் கற்பனை பண்ணிக்கொண்டு இளவட்டங்கள் லவ்லிலுக் விட்டுக் கொண்டிருந்தனர்.   “ஹேய் ப்ரியா அதோப் பாரு ஒருத்தன் கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு உன்னையே ஜொள் விட்டுகிட்டு இருக்கான்!”   “ஆமாண்டி நானும் கவனிச்சிகிட்டுதான் இருக்கேன் தினமும் அவன் என்னையே பாத்துகிட்டிருக்கான்”   “அப்படியா விஷயம் அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாளா?” தோழி சீண்ட இன்னொருத்தி எடுத்துக் கொடுத்தாள். “இல்லடி அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா” “ச்சீ போடி போயும் போயும் அந்த மூன்சியை”இன்னொருத்தி ப்ரியாவுக்கு சப்போர்ட் செய்தாள். “ ஏண்டி அந்தமூஞ்சிக்கு என்ன குறை?”   “அப்ப நீ ஓரம் கட்டு!” “ஏய் ஏய் என்னையே மடக்கற பாத்தியா?” தோழிகள் கூட்டம் கலாய்த்தது.   “இப்ப பாரு வேடிக்கைய அவன் பணத்த கறந்துடலாம்!”   இளைஞர்கள் முகாமில், “மச்சி அந்த ஃபிகரு உன்கிட்ட வருதுடா உதை வாங்கி சாகப்போற!”   “யாரு? நானா இப்ப பாரு வேடிக்கைய!” “அலோ மிஸ்டர்?” ப்ரியாவி...

ஆவி அழைக்கிறது! பகுதி 8

Image
ஆவி அழைக்கிறது!         பகுதி 8                      எழுதுபவர் "பிசாசு" முன்கதை சுருக்கம்: ஆழ்வார் குறிச்சியில் உள்ள தன் பரம்பரை பங்களாவை சீர்படுத்த முயலும் தனவேல் முதலியாருக்கு அடுக்கடுக்காய் சிக்கல்கள் இரண்டு வேலையாட்கள் பலியாகிவிட மந்திரவாதி கேசவன் நம்பூதிரியை நாடுகிறார். அவரையும் பயமுறுத்தும் அந்த ஆவி தனவேலின் பழைய காதலி பொன்னம்மா என்று தெரியவருகிறது. இனி: நிதிலா அந்த பாழடைந்த பங்களாவை மீண்டும் ஒருமுறைப் பார்த்தாள். நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டாள்.ம்ம்..! இந்த குட்டிச்சுவரால் எவ்வளவு பிரச்சனை. இரு உயிர்களை வேறு குடித்துவிட்டது. இன்னு எத்தனை உயிர்களை பலிவாங்குமோ? பேசாமல் இதை சரிப்படுத்துவதை விட்டுவிட்டு சென்னைக்கே திரும்ப சென்று விடலாம்! வீணாய் எதற்கு ஆபத்தை விலை கொடுத்து வாங்கவேண்டும். இங்கே வந்ததிலிருந்து எதுவுமே சரியில்லை. மந்திரவாதி மையில் காட்டிய முகம் என் முகம் போலிருந்ததே அந்த பெண்ணை அப்பா வேலைக்காரி என்கிறாரே! அப்படியானால் நான்? இவ்வாறு அவள் மனம் சஞ்சலப்பட்டுகிடந்தது.    பங்களாவின...

நடுத்தரமக்கள் தலையில் கை வைத்த காங்கிரஸ்! சமையல் கேஸ் விலை உயர்வால் மக்கள் அதிருப்தி!

Image
நடுத்தரமக்கள் தலையில் கை வைத்த காங்கிரஸ்! சமையல் கேஸ் விலை உயர்வால் மக்கள் அதிருப்தி! சமையல் கேஸ் மற்றும் டீசல் மண்ணெண்ணை விலைகளை அதிரடியாக   ஏற்றி சாதணை படைத்து வருகிறது காங்கிரஸ் அரசு. விலைவாசியை விரைவில் கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் கூறிவந்த நிலையில் இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயரக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கமும் கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில் அதிகரிக்கும் சூழல் உண்டாகும்.   பாமர மக்களின் தலையில் இந்த விலை உயர்வு பேரிடியாக விழுந்துள்ளது. ரேசன் கடைகளில் விற்கப்படும் மண்ணெண்ணை விலை லிட்டருக்கு ரு 2 கூடுதலாகி விட்ட நிலையில் தனியாரில் விலை மேலும் அதிகரிக்க கூடும் சிலிண்டரின் விலை கேஸ் எஜண்சிகளால் கூடுதலாக வசுலிக்கப்படும் நிலையில் இந்த விலை உயர்வால் நசுக்கப்படுவது பாமர மக்களே! ஏற்கனவே பெட்ரொல் விலையை தன்னிச்சையாக உயர்த்திக்கொள்ள எண்ணை நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து மாதமிருமுறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. இந்த விலை உயர்வை பி.ஜே.பி உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்த்து நாடெங்கும் போராட்டங்களை நடத்தி வருகிறது.   இந்திய...

கட்டெறும்பாகும் ஆரம்பப் பள்ளிகள்!

Image
கட்டெறும்பாகும் ஆரம்பப் பள்ளிகள்!   தமிழ்நாடெங்கும் சமச்சீர் கல்வி குறித்து பல்வேறு சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும் சமயம் நாம் ஆரம்ப பள்ளிகளை குறித்து பேசப்போகிறோம். என்னாது!ஆரம்ப பள்ளியா அப்படின்னா என்று சிலர் கேட்க கூடும். கிராமங்களில் நீங்களும் நானும் ஐந்தாம் வகுப்பு வரை படித்தோமே அவைதான் ஆரம்ப பள்ளிகள்.    படித்து முடித்த பின் ஒருமுறையேனும் ஆரம்ப பள்ளிகளுக்கு நீங்கள் சென்றது உண்டா? அனேகமாக சென்றிருக்க மாட்டீர்கள் என்றுதான் நம்புகிறேன். என் வயதுள்ளவர்கள் அதாங்க ஒரு 30, 35வயசு உள்ள வங்க எல்லாம் இப்ப ஆரம்ப பள்ளிகளை நினைச்சு கூட பார்ப்பது இல்லை. தான் படித்த பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்க வைப்பதுமில்லை. அனைவரும் ஆங்கில பள்ளிகளையே நாடிக்கொண்டிருக்கின்றனர்.    ஏன் ஆரம்பப் பள்ளிகளில் என்ன குறை   குழந்தைக்கு இங்கிலீசு சொல்லித்தரமாட்டாங்களாம்! கான்வெண்டுக்கு அனுப்பி மம்மி டாடின்னு புள்ள சொன்னாதாம் பெத்தவங்களுக்கு புல்லரிக்குதாம்.தமிழ்நாட்டில் தான் இந்த கொடுமை! தமிழ் தமிழ் என்று கொடி பிடித்தவர்கள் கூட தங்கள் வருமானத்திற்காக ஆங்கிலப்பள்ளிகளை ஆரம்பித்து காசை அள...