இந்த வார கவிதை மணியில் என் கவிதை.

இந்த வார கவிதை மணியில் என் கவிதை.

  இந்தவாரத் தலைப்பிற்கு கவிதை எழுத கொஞ்சம் கஷ்டப்படவேண்டி இருந்தது. எழுதாமல் விட்டுவிடலாமா என்றும் நினைத்தேன். பின் ஏதோ யோசித்து இந்த கவிதையை எழுதினேன். தேர்வு பெறுமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனாலும் தேர்வு பெற்று பிரசுரம் ஆகியுள்ளது. கீழே கவிதையைத் தந்துள்ளேன். நண்பர்கள், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு, தினமணி குழுமம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

பறவையின் மனசு: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 24th September 2017 03:28 PM  |   அ+அ அ-   |  
அழுக்குத் துணி!
பரட்டைத்தலை
காவியேறிய பற்களில் எப்போதும்
சிந்தியிருக்கும் ஒரு புன்னகை!
கையில் ஒரு நசுங்கிய அலுமினிய கிண்ணம்!

யார் பற்றிய சிந்தனையும் இல்லை!
அவனைப் பற்றிய சிந்தனையும் கிடையாது!
பரபரப்பான வீதிகளில் எதையும்
லட்சியம் செய்யாது பயணிக்கிறான் அவன்!
பைத்தியம் என்கின்றனர் சிலர்!
பிச்சைக்காரன் என்போர் சிலர்!

எங்கிருந்தோ இருந்து ஓடிவந்தவன் என்போரும் உண்டு
சித்த புருஷர்கள் இப்படித்தான்
என்று சிலர் கன்னத்தில் போட்டுக்கொள்வதுமுண்டு!
எதையும் லட்சியம் செய்வதில்லை அவன்!
பசி எடுத்தால் ஏதாவது கடையில் தட்டை நீட்டுவான்!
கொடுத்தால் வாங்கி கொள்வான்
விரட்டினால் சென்றுவிடுவான்!

மழை வெயில் குளிர் ஏதும் அவனை
பாதித்தது இல்லை!
பகலெல்லாம் சுற்றித் திரிந்தபின்
அய்யனார் கோயில் மண்டபத்திலோ
அரச மரத்து மேடையிலோ
ஆற்றங்கரை மதகின்மீதோ படுத்து கிடப்பான்
நோய் அவனை தீண்டியதில்லை!

பாசம் அவனை பீடிக்கவில்லை!
வேசம் அவன் போட்டதில்லை!
சோகம் அவனை பாதிப்பதில்லை!
மகிழ்ச்சி அவனை குஷிப்படுத்தியதில்லை!
நன்மை தீமை! நல்லது கெட்டது
ஏதும் அவனை எதுவும் செய்ததில்லை!

ஏகாந்தமாய் எதுவும்
எனதில்லை என்று காற்றைக் கிழித்து
பறந்து கொண்டிருக்கும் பறவைகளின்
மனசை படித்தவனாய் இருப்பானோ!
ஆம் பறவை மனசுக்காரன் அவன்!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டதில்
தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!