இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

இந்த வார தினமணி கவிதை மணியில் என்னுடைய கவிதை நிலைக்கும் என்றே வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஆதரவு நல்கி வரும் தினமணி குழுமத்திற்கும். ஊக்கமளித்துவரும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்திற்கும் மிக்க நன்றி!

நிலைக்கும் என்றே: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 03rd September 2017 03:20 PM  |   அ+அ அ-   |  
ஆழி சூழ் இவ்வுலகில் நிலைக்கும் என்றே
ஒழிவின்றி உழைத்தே சேர்த்து வைப்பர் பலர்!
ஊழ்வினைகள் உறுத்தும் என்று
நல்வினைகள் ஆற்றி தம் சொத்தாய்
வாரிசுக்கு அளித்திடுவர் பலர்!

ஆழிப்பேரலைகள் எழும் சமயம்
விண் முட்டும் மலைகள் கூட மூழ்கும்!
நற்செயல்கள்தான் நம்மை காக்கும்!
பொன் தேடி பொருள் தேடி
இடம் தேடி அலைந்தோர் சேர்த்ததுதான் என்ன?

பத்திரமாய் பெட்டிக்குள் இட்டு வைத்தாலும்
எத்தனை நாள் அவருடனே இணைந்திருக்கும்?
ஊட்டிவளர்த்த அன்ன்னை! கற்றுக்கொடுத்த தந்தை!
துணை வந்த மனைவி! பெற்றெடுத்த பிள்ளை!

சுற்றங்கள் நட்புக்கள்! சொந்தங்கள் பந்தங்கள்!
எத்தனைதான் இருந்தாலும் எதுவும் நிலையன்றோ?
மறைந்திட்ட மனிதர்கள் எண்ணிலடங்கா!
பிறந்திட்ட பிறப்புக்கள் கணக்கிலடங்கா!

இப்பிறப்பில் ராமன் மறுபிறப்பில் ரஹிம்
பெயர்கள் கூட நிலைப்பதில்லை!
உன் செயல்கள் உன் புகழ்கள்தான் 
ஒருபோதும் இறப்பதில்லை!

எத்தனையோ மகாத்மாக்கள் அவதரித்த பூமி
எத்தனையோ மகான்கள் மறைந்த பூமி!
மறைந்த பின்னும் அவர் புகழ் நிலைத்திருக்கும் பூமி!
விவேகானந்தர், பாரதி, கலாம் என
தலைவர்கள் எல்லாம் நிலைத்திருக்கும் என்றே
சேர்த்த சொத்து எது?

நிலையாமை புரிந்த அவர்கள் சேர்த்ததெல்லாம்
புகழ் ஒன்றே!
உன் செயல்கள் உன்னதமாகட்டும்!
அது உன்கூட நிலைத்திருக்கும்!
நிலைக்கும் என்றே எண்ணாதே!
அதுவே உன் வாழ்வில் நிலைக்கும் என்றே!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மன்னிக்கவும், கவிதை என்றா சொல்கிறீர்கள் இதை?

    ReplyDelete
    Replies
    1. என் சிற்றறிவுக்கு இது கவிதையாக தோன்றி அனுப்பினேன்! பிரசுரித்தும் இருக்கிறார்கள்! தங்களின் பேரறிவின் முன் இது கவிதை இல்லாமல் போனால் மன்னிக்கவும்! உங்கள் ஆவலை பூர்த்தி செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன்! தளத்திற்கு முதல் முறையாக வருகை தந்து கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!