இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

இந்த வாரமும் பல பிரச்சனைகளுக்கு இடையே என் கவிதையை தினமணி கவிதை மணிக்கு அனுப்பி வைத்தேன்! பிரசுரம் ஆகி கொஞ்சம் கவலை மறக்கச்செய்திருக்கிறது. தினம் ஒரு பதிவு தந்து கொண்டிருந்த என்னால் பதிவுகள் தர முடியாமல் செய்திருக்கிறது காலம்! காலத்தை வெல்ல முயல்கிறேன்! பார்ப்போம்! இதோ உங்கள் பார்வைக்கு கவிதை!

தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி குழுமம், தமிழகஎழுத்தாளர் வாட்சப் குழுவினர் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பின் நன்றிகள்!

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 17th September 2017 03:35 PM  |   அ+அ அ-   |  
தாத்தா சுமந்த உப்பு மூட்டையை
வாங்கிக் கொள்கையில்
இனிக்கிறது பாட்டிக்கு!
தாத்தா பாட்டிகள்
பேரன் பேத்திகளுக்கு
கொடுக்கும் செல்ல மழையில்
எவ்வளவு நனைந்தாலும்
ஜலதோஷம் பிடிப்பதில்லை
குழந்தைகளுக்கு!
நிலாக்காட்டி சோறுட்டும்
பாட்டியின் மடியில் தூங்குகையில்
கனவுகளில் உலா வருகிறது குழந்தை!
தாத்தாவுடன் கடைக்குப் போய்
சாக்லேட்டும் பிஸ்கெட்ஸும்
வாங்கிக் கொள்கையில்
வழியெங்கும் வழிந்தோடுகிறது 
செல்ல மழை!
அப்பாவுடன் வண்டியில் அடம்பிடித்துச்
செல்கையில் றெக்கை கட்டிப் பறக்கிறது
பிஞ்சு மனசு!
தம்பிக்கு பிடிச்ச பழத்தை
அழுதடம்பிடித்து வாங்கி வரும் அக்காவின்
மனசில் அன்பு கொட்டிக்கிடக்கிறது!
தொலைக்காட்சி படங்கள் பார்த்து
உறவுகளை தொலைத்துவிட்டு
களைத்து உறங்கி கிடக்கிறது பிஞ்சுகளின்
மனசில் ஏக்கம் நிரந்தரமாய் இடம்பிடிக்கிறது!
ஏக்கங்கள் தீர்க்கும் தாத்தாவும் பாட்டியும்
இருக்கும் இல்லத்தில்
எப்போதுமே குடியிருக்கிறது செல்ல மழை!
ஊட்டி விட்ட அம்மாவிற்கு
செல்ல முத்தம்!
பள்ளி கூட்டி செல்லும் அப்பாவின்
கழுத்தில் கட்டி அணைக்கும் கைகள்!
பாட்டியின் இடுப்பில் ஏறி தாத்தாவின்
முடி கோதி செல்லமழை பொழிகின்றன
செல்லங்கள்!
அன்பு எனும் மேகம்
கரைகையில் அழகாய் பொழிகின்றது
செல்ல மழை!
செல்லங்களின் செல்ல மழை!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

Comments

Post a Comment

Popular posts from this blog

வெற்றி உன் பக்கம்! கவிதை!

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!