Posts

Showing posts from September, 2017

”இந்து தமிழ் ஆன்லைன் கார்டூனில் எனது கருத்துச்சித்திரம்!

Image
நேற்று இரவு ஓர் ஆனந்த அதிர்ச்சி! இந்து தமிழ் ஆன்லைன் கார்டூனில் எனது கருத்துச்சித்திரம் இடம்பெற்றிருந்தது என்ற தகவலை வாழ்த்துடன் பகிர்ந்து இருந்தார் நண்பர் டாக்டர் லக்‌ஷ்மணன். தொடர்ந்து தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் வாழ்த்து மழைகளை பொழிய இரவு இன்பமாய் கழிந்தது. உங்களின் பார்வைக்கு அந்த ஆன்லைன் கார்டூன் கீழே! தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிந்து ஊக்குவியுங்கள்! நன்றி!

குட்டி!

Image
குட்டி!  வாட்சப் குழுவில் கதைப்போட்டிக்கு கொடுத்த படம் இதுதான்! அந்த விடிகாலை வேளையில் அந்த வீட்டின் வாசலில் குடும்பமே வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது. தாத்தா- பாட்டி- அப்பா- அம்மா- அண்ணன் அண்ணி- மாமா-மாமி- குழந்தைகள் எல்லோரும் வாசலையே நோக்கிக்கொண்டிருந்தனர். அப்படி என்ன அதிசயம் அந்த வீட்டில் என்கிறீர்களா?    ஆம் அதிசயம்தான்! அந்த வீட்டின் கடைசிப்பையன் குட்டி இன்று ஊர் திரும்புகிறான். அதுவும் கல்யாணம் பண்ணிக்கொண்டு புது மணப்பெண்ணை அழைத்து வரப் போகிறான். அதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? அதில்தான் அதிசயம்.    குட்டி அந்தவீட்டின் கடைக்குட்டி மட்டுமல்ல! ஊருக்கே குட்டிதான். ஆம் குட்டையான உருவம் கொண்டவன். மனம்தான் வளர்ந்ததே தவிர உடல் வளரவில்லை. நடிகர் கிங்காங் அளவிற்கு கூட வளரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அப்படி ஒரு குள்ளம். முகத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும் உடலில் வளர்ச்சி இல்லை. அதனால் எல்லோருக்கும் அவன் குட்டிதான்.   உடல் குட்டையானாலும் வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வான். ரேஷன் கடைக்கு போய் அரிசி சர்க்கரை வாங்குவ...

இந்த வார கவிதை மணியில் என் கவிதை.

இந்த வார கவிதை மணியில் என் கவிதை.   இந்தவாரத் தலைப்பிற்கு கவிதை எழுத கொஞ்சம் கஷ்டப்படவேண்டி இருந்தது. எழுதாமல் விட்டுவிடலாமா என்றும் நினைத்தேன். பின் ஏதோ யோசித்து இந்த கவிதையை எழுதினேன். தேர்வு பெறுமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனாலும் தேர்வு பெற்று பிரசுரம் ஆகியுள்ளது. கீழே கவிதையைத் தந்துள்ளேன். நண்பர்கள், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு, தினமணி குழுமம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! பறவையின் மனசு: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  24th September 2017 03:28 PM   |    அ+ அ  அ-     |   அழுக்குத் துணி! பரட்டைத்தலை காவியேறிய பற்களில் எப்போதும் சிந்தியிருக்கும் ஒரு புன்னகை! கையில் ஒரு நசுங்கிய அலுமினிய கிண்ணம்! யார் பற்றிய சிந்தனையும் இல்லை! அவனைப் பற்றிய சிந்தனையும் கிடையாது! பரபரப்பான வீதிகளில் எதையும் லட்சியம் செய்யாது பயணிக்கிறான் அவன்! பைத்தியம் என்கின்றனர் சிலர்! பிச்சைக்காரன் என்போர் சிலர்! எங்கிருந்தோ இருந்து ஓடிவந்தவன் என்போரும் உண்டு சித்த புர...

இன்றைய இந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன்!

Image
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன்! இந்து தமிழ் நாளிதழில் எனது கார்டூன், மற்றும் பஞ்ச்கள் அவ்வப்போது வருவதை அறிவீர்கள்! கிட்டத்தட்ட நாற்பது நாட்களுக்கு பிறகு இடைவிடாத முயற்சியின் பலனாக இன்று ஒரு கார்டூன் பிரசுரம் ஆகி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.  அதை போனில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த நண்பர் சரஸ்வதி செந்தில் அவர்களுக்கும் ஊக்கப்படுத்தும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் இந்து தமிழ் பத்திரிக்கை குழுமத்தினருக்கும் எனது எழுத்துப்பணியை ஊக்கப்படுத்தும் என்னுடைய குடும்பத்தினருக்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்! கீழே எனது கார்டூன். தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!

இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

இந்த வார கவிதை மணியில் என் கவிதை! இந்த வாரமும் பல பிரச்சனைகளுக்கு இடையே என் கவிதையை தினமணி கவிதை மணிக்கு அனுப்பி வைத்தேன்! பிரசுரம் ஆகி கொஞ்சம் கவலை மறக்கச்செய்திருக்கிறது. தினம் ஒரு பதிவு தந்து கொண்டிருந்த என்னால் பதிவுகள் தர முடியாமல் செய்திருக்கிறது காலம்! காலத்தை வெல்ல முயல்கிறேன்! பார்ப்போம்! இதோ உங்கள் பார்வைக்கு கவிதை! தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி குழுமம், தமிழகஎழுத்தாளர் வாட்சப் குழுவினர் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பின் நன்றிகள்! பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  17th September 2017 03:35 PM   |    அ+ அ  அ-     |   தாத்தா சுமந்த உப்பு மூட்டையை வாங்கிக் கொள்கையில் இனிக்கிறது பாட்டிக்கு! தாத்தா பாட்டிகள் பேரன் பேத்திகளுக்கு கொடுக்கும் செல்ல மழையில் எவ்வளவு நனைந்தாலும் ஜலதோஷம் பிடிப்பதில்லை குழந்தைகளுக்கு! நிலாக்காட்டி சோறுட்டும் பாட்டியின் மடியில் தூங்குகையில் கனவுகளில் உலா வருகிறது குழந்தை! தாத்தாவு...

தினமணி கவிதை மணியில் வெளியான என் கவிதை!

  இந்த வார தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை! (அப்படி சொல்லலாமா தெரியவில்லை)  தொடர்ந்து ஆதரவு நல்கும் தினமணி குழுமத்தினருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்திற்கும் மிக்க நன்றி! சேர்த்து வைத்த கனவு: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By   கவிதைமணி   |     Published on :   10th September 2017 03:42 PM   |     அ+ அ  அ-     |   ஓங்கி உயர்ந்த தென்னைகள் ஒருபுறம் காய்த்துத் தொங்க அடர்ந்த மாந்தோப்பின் கிளைகளில் பறவைகள் கீதம் இசைக்க! பச்சை பசும் வயல் வெளிகளில் நெல்மணிகள் காற்றிலாட களத்து மேட்டில் கயிற்றுக்கட்டிலில் கால்நீட்டி படுத்திருக்கும் பண்ணையாரைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுச்சொல்வார் தாத்தா! பேராண்டி! நாமும் ஒரு நாள் இதுபோல தோப்புத்துரவும் வாங்கி சுகமாய் வாழணும்டா! என்றபடி வயலுக்கு மடை மாறுவார்! இருக்கும் கால்காணி நிலத்தை பண்ணைக்கு குத்தகைவிட்டு அங்கேயே கூலி வாங்கி கால்வயிற்றை நிரப்பியவருக்கு தோப்பும் துறவும் சேர்த்து வைத்த கனவானது! என் படிப்பு, தங்கை கல்யாணம...

இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

இந்த வார தினமணி கவிதை மணியில் என்னுடைய கவிதை நிலைக்கும் என்றே வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஆதரவு நல்கி வரும் தினமணி குழுமத்திற்கும். ஊக்கமளித்துவரும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்திற்கும் மிக்க நன்றி! நிலைக்கும் என்றே: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  03rd September 2017 03:20 PM   |    அ+ அ  அ-     |   ஆழி சூழ் இவ்வுலகில் நிலைக்கும் என்றே ஒழிவின்றி உழைத்தே சேர்த்து வைப்பர் பலர்! ஊழ்வினைகள் உறுத்தும் என்று நல்வினைகள் ஆற்றி தம் சொத்தாய் வாரிசுக்கு அளித்திடுவர் பலர்! ஆழிப்பேரலைகள் எழும் சமயம் விண் முட்டும் மலைகள் கூட மூழ்கும்! நற்செயல்கள்தான் நம்மை காக்கும்! பொன் தேடி பொருள் தேடி இடம் தேடி அலைந்தோர் சேர்த்ததுதான் என்ன? பத்திரமாய் பெட்டிக்குள் இட்டு வைத்தாலும் எத்தனை நாள் அவருடனே இணைந்திருக்கும்? ஊட்டிவளர்த்த அன்ன்னை! கற்றுக்கொடுத்த தந்தை! துணை வந்த மனைவி! பெற்றெடுத்த பிள்ளை! சுற்றங்கள் நட்புக்கள்! சொந்தங்கள் பந்தங்கள்! எத்தனைதான் இருந்தாலும் எதுவும் நி...