கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 48


1.    

மன்னா! ஏன் இப்படி தூக்கத்தில் அலறி அடிக்கிறீர்கள்?
  கனவில் எதிரி மன்னன் போரில் விரட்டுகிறான் ராணியாரே!
கனவிலும் கூடவா நீங்க ஜெயிக்க வில்லை!

2.   மாப்பிள்ளை பஸ் கண்டக்டராத்தான் இருக்கணும்னு எப்படிச் சொல்றீங்க?
கவனிக்காம போற ப்ரெண்ட்ஸை விசில் அடிச்சி கூப்பிடறாரே!

3.   அமைச்சரே எதிரியின் கோட்டையை பிடிப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
இப்படியெல்லாம் மனக் கோட்டை கட்டாதீர்கள் மன்னா!

4.   தலைவர் அன்னிய முதலீட்டாளர்கள் நம்ம மாநிலத்தையே நாட வேண்டும்னு சொல்றாரே என்ன விஷயம்?
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணக் கூடாதுன்ற நினைப்புலதான்!

5.   அந்த தியேட்டர்ல என்ன கலாட்டா?
பால்கனி டிக்கெட் வாங்கின யாரோ ஒருத்தர் பாலும் பழமும் எங்கேன்னு கேட்டு அடம்பிடிக்கிறாராம்!

6.   அன்பே! நம் காதல் வீட்டினருக்கு கசக்கிறதாம்! இனிப்பாய் எதாவது சொல்!
ஆனால் எனக்கு புளிப்புதான் பிடிக்கிறது! சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க!


7.   மன்னா! எதிரி மன்னன் நமது கோட்டையை சுற்றி வளைத்துவிட்டான்!
சுற்றி வளைத்து பேசாதீர்கள்! சரணாகதி ஆகவேண்டும் என்று சொல்லுங்கள்!

8.   இன்னிக்கு தோசை வார்க்கையிலே கொஞ்சம் தீஞ்சி போயிருச்சு!
  அப்புறம்?
அதான் என் முகம் இப்படி காஞ்சி போயிருக்கு!

9.   அந்த சாமியாரை ஏன் கைது பண்ணிட்டு போறாங்க!
அவர்கிட்ட சாந்தியை தேடிப்போன பெண்கள் எல்லாம் வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்!

10.  தலைவரோட சம்சாரம் எதுக்கு திடீர்னு மதுவிலக்குக்கு ஆதரவா குதிச்சிருக்காங்க!
  தலைவரோட சின்ன வீட்டோட பேரு மதுவாம்!

11. டாக்டர் பட்டம் வாங்கினதும் தலைவரோட அலும்பு தாங்க முடியலை!
  ஏன் என்ன ஆச்சு!
ஓ.பி சீட்டு வாங்கிட்டுத்தான் உள்ளே வரணும்னு சொல்றாரு!

12.  டீக்கடையிலே என்னங்க கலாட்டா?
ஜிராக்ஸ் காபி கொடுக்க மாட்டீங்களான்னு ஒரு கஸ்டமர் கலாட்டா பண்றாருங்க!


13. பழைய பேப்பர் வாங்கறவரை கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா ஏன்?
  எல்லோரையும் குறைச்சலாவே எடை போடறார்!

14.  மன்னரின் வீரம் எல்லாம் எங்கே போயிற்று?
  எதிரியின் கர்ஜணையைக் கேட்டதும் ஈரமாய் நாறிப்போயிற்று!

15.  பொண்ணுக் கண்ணுலே இனிமே தண்ணியே பார்க்கக் கூடாது மாப்பிள்ளை!
  வெங்காயம் எல்லாம் போட்டு சாப்பிடற அளவுக்கு நாங்க அவ்வளவு வசதியானவங்க கிடையாது மாமா!
16. டாக்டர் உங்க மருந்து சீட்டுல என்ன எழுதறீங்கன்னே புரிய மாட்டேங்குது! கொஞ்சம் தெளிவா எழுதக் கூடாதா?
தெளிவா எழுதினா மருந்து கடைக்காரனுக்கு புரியாதே பரவாயில்லையா!

17. புலவர் ஏன் வருத்தமாய் இருக்கிறார்?
மன்னரை வாயறா புகழ்ந்தும் அவரின் வயிறார வில்லையாம்!

18. அவர் ஆட்டோ ஓட்டுறவருன்னு எப்படி இவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சி சொல்றீங்க?
கையைப் பிடிச்சு இந்த குலுக்கு குலுக்கிறாரே அதை வச்சுத்தான்!

19. முதல்வராத் தான் இந்த சபைக்குள்ள நுழைவேன்னு  எங்க தலைவர் சபதம் போட்டிருக்காராம்!
அப்ப கடைசி வரைக்கும் சபைக்குள்ள நுழையப் போறது இல்லேன்னு சொல்லு!


20.  அந்த டாக்டருக்கு ரொம்பவும் நல்ல மனசு!
எப்படிச் சொல்றே?
ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடி கடைசி ஆசை என்னன்னு கேட்டு நிறைவேத்திட்டுதான் பண்ணுவாருன்னா பார்த்துக்கோயேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




Comments

  1. அனைத்தும் ரசனை நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  2. No 9 ஸூப்பரோ ஸூப்பர் நண்பரே...

    ReplyDelete
  3. ரசித்தேன்
    சிரித்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  4. அதிகம் ரசித்தேன், சிரித்தேன். நன்றி.

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை தளீர்,,,,,,,,,,

    ReplyDelete
  6. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  7. ஹஹஹஹ் அனைத்தும் செம! ரசித்தோம் சிரித்தோம் சுரேஷ்!

    ReplyDelete
  8. அனைத்தும் சிறப்புங்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!