தளிர் ஹைக்கூ கவிதைகள்!


தளிர் ஹைக்கூ கவிதைகள்!


தாங்கிப்பிடித்ததை
தவிக்கவிட்டுச்சென்றார்கள்!
துணிக் கிளிப்!

கரி பூசி
விளையாடியது நிலா!
அமாவாசை!

கண்சிமிட்டி சிரித்ததும்
கவர்ந்தோடினர்
குழாய்விளக்கு!

தடுத்துப் பார்த்தும்
இடுக்கினில் ஊடுருவியது!
பனி!

இரவெல்லாம் விடியல்!
விடியலெல்லாம் உறக்கம்!
நகரம்!

சிரித்தது மேகம்!
கூந்தலில்
மல்லிகை!


சேற்றில் பதியும்
தடங்கள்!
நினைவுகள்!

வெட்கிச் சிவந்தது சூரியன்
விலகிப்போனது
பகல்!

ஒலித்ததும்
உயிர்த்தது காகங்கள்!
கோயில் மணி!

தலை குனிவு!
வெட்டப்பட்டது!
நெற்கதிர்!


ஒளி வெள்ளம்
இருளாக்கியது!
மின்னல் மழை!

ஆமையை
வென்றது முயல்!
மின்னல்!

புதைந்து கிடப்பதை
கிளர்ந்துவருகின்றது!
காற்று!

உருவம் இல்லை!
உயிர் கொடுக்கின்றது!
காற்று!

நெருங்கி வருகையில்
குளிர்ந்துபோனது
சூரியன்!
 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமையான ஹைக்கூக்கள்! நன்றி

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை. ஆமையை வென்ற மயிலை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  3. தலைக்குனிவு வெட்டப்பட்டது நெற்கதிர்,,,,,,,,,,,
    இந்தப்பாடல் தான் நினைவில் வந்தது
    சொல்லரும் சூர்பசு பாம்பின் தோற்றம் போலவே,,,,
    அருமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உருவம் இல்லை!
    உயிர் கொடுக்கின்றது!
    காற்று
    மிகவும் ரசித்தேன் நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அருமை... பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  6. ஹைக்கூ அழகுடனம் மிளிர்கிறது.

    ReplyDelete
  7. ஹக்கூக்கள் அனைத்துமே "கூ" க்கள்....அருமை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!