Posts

Showing posts from January, 2015

குளவி நண்பன்!

Image
குளவி நண்பன்! மானூர் என்னும் அழகியசிற்றூரில்  விக்ரமன் என்னும் சிறுவன் வசித்து வந்தான். தாய் தந்தையரை இழந்த அவனுக்கு வயதான பாட்டி மட்டுமே துணை.  விக்ரமன் சுறுசுறுப்பானவன். புத்திசாலி. நன்றாக உழைப்பவனும் கூட பாட்டிக்கு கூட மாட ஒத்தாசையாக இருந்து வேலைகளில் உதவி செய்வான்.    ஒரு நாள் அவன் தன் குடிசை வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது குளவி ஒன்று அவனை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. அது சுவற்றில் கூடு கட்ட முனைந்து கொண்டிருந்தது. எரிச்சல் அடைந்த  விக்ரமன் அதை விரட்டினான். ஒரு அட்டையை எடுத்து அதை அடிக்க முயன்றான்.     அப்போது அந்த குளவி பேசியது "நண்பா! என்னை அடிக்காதே!" என்றது. விக்ரமன்ஆச்சர்யத்துடன் "யாரது குளவியா பேசுவது?" என்றான். "ஆம் குளவிதான் பேசுகிறேன். நண்பா என்னை அடிக்காதே! என்னுடைய உதவி உனக்கு ஒரு சமயத்தில் தேவைப்படும் என்னை விட்டுவிடு!" என்றது.  விக்ரமனும்குளவிதானே என்று எண்ணாமல் "குளவியாரே உன்னை கொல்வதால் எனக்கும் ஒன்றும் இல்லைதான்! ஆனால் என்னை தொந்தரவு செய்யாமல் போய்விடு!" என்றான்.     குளவிய...

செய்யற வேலையில உங்களுக்கு ஈடுபாடு இருக்கா?

செய்யற வேலையில உங்களுக்கு ஈடுபாடு இருக்கா?  எந்த வேலையாக இருந்தாலும் அதில் ஈடுபடுபவர்கள் ஓர் அர்ப்பணிப்புடன் ஈடுபாட்டுடன் செய்தால் அந்த வேலை கஷ்டமாகவோ செய்ய முடியாததாகவோ தோன்றாது. வேலையும் கஷ்டமாக இருக்காது. ஈடுபாடு இன்றி ஓர் வேலையில் என்னால் ஒட்டிக்கொண்டு இருக்க முடியாது. அதே போல என்னை நம்பி ஓர் வேலையைக் கொடுத்துவிட்டால் அதில் தலையீடு இருப்பதை நான் விரும்ப மாட்டேன். இப்படி செய்! அப்படி மாற்று! இங்கே குறை! அங்கே கூட்டு! என்பதெல்லாம் எனக்கு பிடிக்காது.      இதனாலேயே நான் பிறரிடம் பணிபுரியவில்லை! சொந்தமாகவே தொழில் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டேன்! அந்த சொந்த தொழிலிலும் கூட ஈடுபாடு குறைந்தால் தொழிலை விட்டுவிட்டேன்.       2000 மாவது வருஷத்தில் எங்கள் ஊர் பக்கம் எஸ்.டீ.டீ பூத்கள் கொள்ளையாக வசூலை அள்ளின. அப்போது நானும் ஓர் எஸ்.டீ.டீ பூத் வைத்தேன். எனக்கு போட்டியாக மூன்று பேர் அதே ஊரில் பூத் வைத்தனர். அதுவும் எனக்கு பின் அப்ளிகேஷன் போட்டு எனக்கு முன்னதாகவே லைன் வாங்கிவிட்டனர். விபரம் தெரிந்து தொலைபேசி அலுவலகத்தில் சத்தம் போட்டபின் ஒருவ...

சிரிச்சுக்கிட்டே இருக்கணுமா! சரிதாயணம் படிச்சுகிட்டே இருங்க!

Image
சிரிச்சுக்கிட்டே இருக்கணுமா! சரிதாயணம் படிச்சுகிட்டே இருங்க! வலைப்பூ தொடங்கி ஒரு வருடம் கடந்த பின் தான் பாலகணேஷ் அவர்களின் மின்னல் வரிகள் தளத்தினை படிக்க ஆரம்பித்தேன். அதில் அவர் எழுத்தாளர்களுடனான தனது அனுபவத்தினை சுவைபட சொன்னவிதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நகைச்சுவையாக எழுதவும் செய்வார் என்பது அவர் முதல் புத்தகமான சரிதாயணம் வெளியிட்ட போதுதான் தெரிந்தது. அப்போது அந்த புத்தகத்தை வாங்கி படித்து மகிழ்ந்தேன்! இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பில் அவரை சந்தித்தாலும் என்னை அவர் அறிந்திருக்கவில்லை! அவரிடமே அன்று வெளியான பதிவர்களின் நூல்களை வாங்கினேன். தளிர் சுரேஷ் என்று அறிமுகம் செய்து கொண்டு! ஆனால் அவரின் பரபரப்பான பணிகள் காரணமாக அதை மறந்திருக்கலாம். பின்னர் எனது வலைப்பூவில் சிறுகதை ஒன்றை எழுதி அவர் மதிப்பீடு செய்தால் நன்றாக இருக்கும் என்று கருத்திட்டேன்! அவரும் வந்து சில திருத்தங்களை தந்தார். அவ்வப்போது வலைப்பக்கம் வந்தாலும் சில கதைகளுக்கு அவரது பின்னூட்டம் இல்லையே என்று வருந்தி இருக்கிறேன்!      இதற்கிடையில் அவரது இந்த இரண்டாவது நூல் வெளியீடு நடந்தபோது ...

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! 9 தூக்கில்   தொங்கவிட்டு வேடிக்கை ! குளிர்பான   பாட்டில்கள் ! எழுதிவிட்டு   அழிக்க   முடியாது ! வாழ்க்கை ! வண்ணப்   பூக்கள் வண்டுகள் மொய்க்கவில்லை ! வாசலில்   கோலம் ! மிதிக்க   மிதிக்க உருண்டு   ஓடியது ! மிதிவண்டி ! விரட்ட   விரட்ட   துரத்துகிறது தூக்கம் ! ஆட்டம்   நின்றது விடைபெற்றது காற்று ! காத்து   நிற்கையில் பொறுமை   இழக்கிறது மனசு ! கன்று   ஈன்றது பாலூட்டவில்லை ! வாழை ! விரியாத   இதழ்களில் குடிகொண்டது மவுனம் ! கீறல்   விழுந்ததும்   கீச்சிட்ட   வானம் ! இடி   மின்னல் ! ஆடை   விலக்கியதும் ருசிக்கவில்லை ! பால் ! சிறகு   விரித்தன வெண்   தாமரைகள் வயலில்   கொக்குகள் ! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! (மீள்பதிவு)

நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!

Image
நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்! வழிபாடு எத்தனையோ விதம்! நம்மை படைத்து ஆட்டுவிக்கும் இறைவனுக்கு விதவிதமாய் அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து நிவேதனங்கள் படைத்து ஆராதித்து மகிழ்வது தமிழர் பண்பாடு.     விதவிதமான மலர்கள், பட்டாடைகள், காய் கனிகள் என்று வகைவகையாக அலங்காரங்கள் செய்வதுண்டு. அதே போல படையலும் விதவிதமான அன்னங்களுடனும் பட்சணங்கள் பழங்களுடன் படைப்பது உண்டு.      அதில் வித்தியாசமான ஒன்றுதான்! படைக்கும் படையலில் ஆண்டவன் பிம்பத்தை காண்பது. சர்க்கரை பொங்கலை குளமாக்கி அதனுள் நெய்யை உருக்கி விட்டு அதில் சுவாமியின் பிம்பத்தை கண்டு வழிபடுவது ஓர் மரபு.     இதை அன்னப்பாவாடை, மஹா நைவேத்தியம், பள்ளயம், என்று பலவாறாக சொல்லுவர். பெயர் வேறு வேறாக இருந்தாலும் செயல் ஒன்றுதான். ஆண்டவன் தரிசனமும் அவனது கருணையும் பெறுவதுதான் நோக்கம்.         அன்னம் விஷேசமான ஒன்று. எத்தனைதான் பொருளும் பணமும் கொடுத்தாலும் மனம் நிறையாது. அன்னத்தை தானம் அளிக்கும் போது மனசு மட்டுமல்ல வயிறும் நிறைகிறது. அரிசி லிங்க வடிவ...

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 30

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 30 குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சிட் பண்டுல பணம் சேர்க்கறதா சொன்னியே என்ன ஆச்சு?     மொத்தமா கொத்திக்கிட்டு போயிட்டான்! தலைவர் ஏன் இடைத்தேர்தல்ல நிக்க மாட்டேன்னு சொல்றாரு? இத்தனை வயசுக்கு மேல ‘இடை”த் தேர்தல்ல போட்டியிடறது அசிங்கம்னு சொல்றாரு! ஏ.டி. எம். ல நுழைஞ்ச தலைவர் எதுக்கு பின்னால திரும்பி பார்த்து நம்பரை சொல்ல சொல்றார்? மிசின் பின் நம்பர் கேட்டுச்சாம்! யோவ்! எதுக்குயா ஸ்பேனர் கொண்டுவந்து பஸ் சீட்டை கழட்டுற? நீங்கதானே சீட்டு வாங்கிக்கன்னு சொன்னீங்க! வாங்கின சீட்டை எடுத்துட்டு போக வேண்டாமா? டாக்டர் எனக்கு தூக்கத்துல நடக்கிற வியாதி இருக்கு! தூக்கத்திலேயே நடந்து வெளியே வந்துடறேன்! அது ஒண்ணும் பிரச்சனை இல்லை! உங்க கட்டில்ல காலை கட்டிட்டு தூங்குங்க!  ஆபிஸ்ல கட்டில் எல்லாம் கொண்டுபோக அனுமதிக்கமாட்டாங்க டாக்டர்! கடையில என்ன கலாட்டா? சுகர் பிரி பிஸ்கெட்ட வாங்கிட்டு ஃபிரியா சுகர் வேணும்னு இவர் அடம்பிடிக்கிறாரு சார்! உன் மனைவிக்கு கோவம் வந்தா உன்னோட பர்ஸ் லேசா ...

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? அதிர்ச்சித் தகவல்!

Image
ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொஞ்சம் முன்னதாகவே சென்றுவிட்டேன். வழக்கமாய் பொங்கல் கழித்து செல்வேன். இந்த முறையும் தந்தை உடன் வர 13ம் தேதியே சென்றேன். போன முறை போல் அல்லாது புத்தகம் வாங்குவதற்கென்றே  ஒரு சிறு தொகை தனியாக சேமித்து வைத்திருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிவிட்டேன். சிறுவர் இலக்கியங்களும், நாவல்களும்தான் அதிகம் வாங்கினேன்.     இலக்கிய பதிப்பகங்களான காலச்சுவடு, உயிர்மை போன்ற இன்னபிற ஸ்டால்களை கவனித்ததோடு சரி! இலக்கியம் படிக்கிறேன் என்று சொல்லி அப்புறம் வேதனைப்பட நான் தயாராக இல்லை!    சரி தலைப்புக்கு வருவோம்! பொன்னியின் செல்வன் படித்த எல்லோருக்குமே அதில் ஆதித்த கரிகாலன் மர்மமாக  கொல்லப்பட்டது தெரியும். அந்த கொலையை யார் செய்தார்கள் என்று இறுதி வரை சொல்லாமலேயே கதையை முடித்து இருப்பார் கல்கி. ஆனாலும் யார் கொன்றிருப்பார்கள்? என்ற கேள்வி நாவலைப்படித்த எல்லோருக்கும் ஓர் மூலையில் உட்கார்ந்து அரித்துக் கொண்டிருக்கும்.    சோழர்களின் இணையற்ற வீரனாக கருதப்பட்ட ஆதித்த கரிகாலன் ஓர் முரடனாகவ...

தளிர் சென்ரியு கவிதைகள் 12

Image
தளிர் சென்ரியு கவிதைகள் 12 வேட்பாளர்கள் போட்டி வெற்றிபெற்றது துட்டு!  இடைத்தேர்தல்! வேலைகொடுத்தார்கள் ஓய்வு எடுக்கிறார்கள் நூறுநாள் வேலை! கதைவிட்டதும் உதைபட்டார்கள்! மாதொருபாகன்! கண் பார்க்கையில் வலி! திருநங்கையர்! முடங்கிய அரசு இயந்திரம்! தொடங்கியது    கொசு உற்பத்தி! கொடிகட்டிப்பறந்தன வயல்கள்! கொட்டப்பட்டன வயிற்றில் மண்! வீட்டுமனைகள்! உத்தரவின்றி உள்ளே வந்தன மெத்தனமில்லாது அழிந்தது பொருளாதாரம்! அந்நிய ஏற்றுமதி! காப்பதற்குபதில் எடுக்கின்றன உயிர்காக்கும் மருந்துகள்!  விலை! அடங்காப்பசியில் மருத்துவம்! விழுங்குகின்றன பணத்தோடு பல உயிர்கள்! புகையில்லா போகி! கொசுவர்த்தியோடு கழிந்தது இரவு! கடையான பாதைகள்! வியாபாரம் செழித்தது! காவல்துறை! திருடி எடுக்கிறார்கள்! திருட்டு போகிறது! தமிழ் சினிமா! விலைபோகும் அறிவு! பெருமிதத்தில் படைப்பாளி! புத்தகச் சந்தை! அள்ளிக்குவித்தார்கள்! வறண்டுபோனது    விவசாயம்! மலையை முழுங்கினார்கள்! ...