கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56 1. வெள்ளநிவாரணம் கொடுக்க போன தலைவருக்கே நிவாரணம் தேவைப்படுதாமே ஏன்? நிவாரணப் பொருள்கள்ல கை வச்சிட்டாருன்னு மக்கள் ”ரணப்” படுத்தி அனுப்பிச்சிட்டாங்க! 2. எங்க தலைவர் பேசினா அப்படியே தெறிக்க விடுவாரு..! என்னது அனலா..! இல்லை எச்சில்…?! 3. தலைவருக்கு கொஞ்சம் கூட விவரமே பத்தலை ஏன்..? பீப் சாங் கேட்டீங்களான்னு கேட்டா நமக்கு எப்பவும் மட்டன் தான் பிடிக்கும்னு சொல்றாரே! 4. உனக்கு அறிவிருக்கா..? அதை விற்கிறதுக்காக உங்ககிட்ட நான் வரலை! 5. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கஜானாவைத் திறக்க சொன்னேனே என்ன ஆயிற்று? உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திறந்து திறந்து இப்போது அது காலியாக இருக்கிறது மன்னா! 6. அரசியல் களத்துல ஒவ்வொரு அடியா எடுத்து வச்சு முன்னேறினவரு எங்க தலைவரு..! அடுத்தவங்களை அடிச்சி அடிச்சியே பின்னுக்கு வந்தவரு எங்க தலைவரு! 7. அதோ போறாரே அவர் பசையான ஆளு! பெரிய பணக்காரரா? இல்லே கம் தயாரிச்சு வி...