நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 10
நொடிக்கதைகள் பகுதி 10 காற்றுப்போன பலூன்! அப்பா! எனக்கும் ஒரு பலூன் தர்றியா? கேட்ட மகனிடம் இன்னும் வியாபாரமே ஆரம்பிக்கலே போயிட்டு அப்புறம் வா! என்றான் பலூன் வியாபாரி. காற்றுப் போன பலூனாக மாறியது மகனின் முகம். ஹாஸ்டல்! நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சா மாதிரிதான் நீங்க இங்க தங்க போறதும் வருத்தப் படாதீங்க! என்றான் முதியோர் இல்லத்தில் தந்தையை சேர்த்த அந்த மகன். ஸ்கூல்! இந்த மாதிரி பெரிய ஸ்கூல்ல எல்லாம் நுழைய முடியுமான்னு நினைச்சேன்! எப்படியோ கடவுள் என் ஆசையை பூர்த்தி செய்துட்டான் என்று அந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் நுழைந்த விமலா ஸ்விப்பராய் தன் பணியைத் தொடங்கினாள். வேர்! மாமியாரோடு ஒர் நாள் சீரியல் பார்த்த மருமகளிடம் வேர் பிடித்தது அந்த எண்ணம். “ இதை பார்த்துதான் எல்லாரும் டார்ச்சர் பண்றாங்களா? அப்ப நாமும் ட்ரெயில் பார்த்துட வேண்டியதுதான்! ஷேர்! பேஸ் புக்கில் தனக்கு வந்த பல தகவல்களை நண்பர்கள் பலருக்கும் ஷேர் செய்து கொண்டிருந்தார் தம்பிக்கு சொத்தில் சல்லிக் காசு கூட தரமுடியாது என்று துரத்தி அடித...