Posts

ஆதார் அட்டை வாங்கீட்டீங்களா? அட்டென்ஷன் ப்ளீஸ்!

Image
ஆதார் அட்டை பெறுவது எப்படி? அக்டோபர் மாதத்திலிருந்து படிப்படியாக தமிழகத்தில் சமையல் கியாஸிற்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதற்கு ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வங்கிக் கணக்குத் துவக்க, கியாஸ் இணைப்புப் பெற, பாஸ்போர்ட் பெற, வீடு வாங்க, விற்க போன்றவற்றிற்கு ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? எப்போது கிடைக்கும்? யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற தகவல்கள் உங்களுக்காக இதோ... ஆதார் என்றால் என்ன? ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கை விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும். ஆதார் அட்டை பெறத் தகுதிகள்: இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை பெற எங்கே...

நன்றி இல்லாத மனிதன்! பாப்பா மலர்!

Image
நன்றி இல்லாத மனிதன்! பாப்பா மலர்! அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு சென்றான். பெரும் படைகளுடன் சென்ற போதும் அவன் வழி தவறி தனியாக காட்டிற்குள் சிக்கிக் கொண்டான். பொழுதோ சாய்ந்து கொண்டு இருந்தது. காட்டிற்குள் வெகுதூரம் சென்று விட்ட அவன் வழி தெரியாது தவித்தான்.     காட்டிற்குள் இங்கும் அங்கும் சுற்றி சுற்றி வந்தானே தவிர வழி அகப்பட்ட மாதிரி இல்லை! இதற்குள் இருட்டிப்போய் விட்டது. சரி! இனி பிரயோசனம் இல்லை! இராப் பொழுதை காட்டிற்குள் தான் கழிக்க வேண்டும் போல! என்று அவன் முடிவு செய்து அங்கிருந்த ஒரு பெரிய மரத்தில் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொண்டான். தூங்கி விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்று கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு இருந்தான் அந்த அரசன்.     அப்போது கரடி ஒன்றை சிங்கம் விரட்டிக் கொண்டு வந்தது. அந்த கரடி மன்னன் இருந்த மரத்தில் ஏறியது. கரடியை கண்டு மன்னன் பயந்தான். மன்னன் பயத்தால் நடுங்குவதை கண்ட கரடி நண்பா! பயப்படாதே! என்னால் உனக்கு எந்த துன்பமும் வராது. என் மடியில் படுத்து உறங்கு. பிறகு நான் உன் மடியில் படுத்து தூங்குகிறேன்! இருவருக்கும் சிங...

முன்னோர்கள் நம் இல்லம் வரும் மஹாளய பட்சம்!

Image
முன்னோர்கள் நம் இல்லம் வரும் மஹாளய பட்சம்! புரட்டாசி மாத அமாவாசை தினத்திற்கு முன் வரும் பவுர்ணமி கழித்த பிரதமை முதல் அமாவாசை கழித்த பிரதமை வரை வரும் 15 தினங்கள்( சில சமயம் 16 தினங்கள்) மஹாளய பட்சம் எனப்படும். நம்மை விட்டு பிரிந்த பிதுர்கள், முன்னோர்கள் ஆத்மா இந்த பதினைந்து தினங்களிலும் நமது இல்லம் வந்து தங்கும் என்பது நம்பிக்கை! இந்த தினங்களில் பிதுர்களுக்கு உரிய தர்ப்பணங்கள், தானங்கள் செய்து வழிபடுவதால் நம் பிதுர் தோஷங்கள் நீங்குவதோடு வீட்டில் சுபிட்சமும் நிலவும்.     பொதுவாக மாதம் தோறும் அமாவாசை தினத்திலும் மாதப்பிறப்பிலும், தட்சிணாயினம், உத்தராயினம் புண்ய காலத்திலும் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பிதுர்களுக்கு வருடத்தில் ஷண்ணவதி எனும் 96 வகையான தர்ப்பணங்களை வருடம் முழுவதும் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் இதனால் திருப்தி அடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.      இன்றைய இயந்திர உலகில் உயிரோடு இருக்கும் பெற்றோர்களையே சரிவர கவனிப்பது இல்லை! இறந்த பிறகு எங்கு கவனிக்கிறோம். இறுதிச் சடங்கு செய்வதோடு காரியம் முடிந்து விடுக...

பென் டிரைவுக்கும் ஸ்கூட்டி ஓட்டுற பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்? எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்!

Image
எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்! 1.       என்னங்க பின்னாடி இருந்து ஒருத்தன் என் கால்ல சுரண்டறான் அப்படியா! திரும்பி உன் முகத்தை காட்டு! சாகட்டும் தறுதலை! 2.       உன் படிப்பின் மேல யாருக்கு அக்கறை அதிகம்?  பஸ் கண்டக்டருக்குத்தான் டீச்சர்!   எப்படி?   அவர்தான் தினமும் நீ பாஸா! பாஸான்னு கேட்கிறாரே! 3.பியுட்டி பார்லரின் வாசலில் காணப்பட்ட வாசகம்!    இங்கிருந்து வெளியே போகும் பெண்களை சைட் அடிக்காதீர்கள். போவது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்! 4.பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? தெரியலையே!  இரண்டையும் திருத்தவே முடியாது! 5.தண்ணியிலே இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க? அப்படி எடுக்கலேன்னா குளிக்கும் போது ஷாக் அடிக்கும்! 6.ஏதாவது ஒருவார்த்தை சொல்லு அதில சந்தோஷமும் இருக்கணும் கஷ்டமும் இருக்கணும்! “ஐ லவ் யூ அண்ணா!” 7.உனக்குப் பார்த்த பொண்ணு லட்டு மாதிரி இருப்பான்னு சொல்றே! ஆனா ஏன் வேண்டாம்னு சொல்லிட்டே? எனக்கு சுகர் கம்ப்ளெயின்ட் இருக்கே! ...

அம்மா வாட்டரும்! பழக்க தோஷமும்! கதம்ப சோறு 5

Image
கதம்ப சோறு மோடி பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளர்:            ஒரு வழியாக அத்வானியின் பிடிவாதத்தையும் மீறி நரேந்திரமோடி பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வற்புறுத்தலால் இந்த அறிவிப்பு என்றாலும் பா.ஜ.கவில் இவரைவிட நட்சத்திர அந்தஸ்து உள்ள தலைவர்கள் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அத்வானிக்கு வயதாகிவிட்டது. இனி பிரதமர் பதவி அவருக்கு கனவுதான். வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே கொஞ்ச நாள் அவரை தாஜா பண்ணி பிரதமராக இருந்து ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கலாம். அப்போது கோட்டைவிட்டுவிட்டு இப்போது அழுது புலம்புகிறார். சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டால் இப்போது பெற்றிருக்கும் சீட்டுகளை கூட பா.ஜ.க கைப்பற்றுமா என்பது கேள்விக் குறிதான். முன்பு தீவிர இந்துத்வா! என்ற காரணத்தால் பிரதமர் பதவி வேட்பாளரில் இருந்து அத்வானி புறந்தள்ளப்பட்டு வாஜ்பாய் பிரதமர் ஆனார். ஆனால் அதே இந்துத்வா காரணமாக இன்று மோடி பிரதமர் வேட்பாளர் ஆகியுள்ளார். இவர் நல்லவரா கெட்டவரா? என்று ஆராய்ச்சிக்கு போனால் இருக...

புகைப்பட ஹைக்கூ 49

Image
புகைப்பட ஹைக்கூ 49 1. குப்பையில் விளைகிறது  கோட்டின் கீழ் மக்களின்  உணவு! 2. விலைபோகா பண்டம்  உலையாகிறது  ஏழைகள்! 3. ஒதுக்கப்பட்டவை  ஒதுக்கப்பட்டவர்களின்  உணவானது!  4.பசி அறியாது  பதார்த்தத்தின்  ருசி! 5. அழுகினாலும்  அடைக்கிறது  ஏழையின் பசி! 6. குப்பையானாலும்  நிறைக்கிறது  ஏழையின் தொப்பை!  7.கடைக்கோடி  மக்களின்  கடைத்தெரு!  8.சத்துணவை  தேடுகிறாள்  சத்தில்லாத தாய்! 9. எறிகின்ற பொருள்  இரையாகிறது  ஏழைகள்!  10.வளமை மீது  வறுமையின் நிழல்  இரைதேடும்தாய்! 11.  சேய்க்கு சோறுட்ட     காய் தேடுகிறாள்     தாய்! 12.  ஆகாரம்   தேடுகையில் மறந்தது   ஏழையின் சுகாதாரம்! 13. விலையில்லா காய்கறி     விளைகின்றது     குப்பைத்தொட்டியில்! 14. குப்பையில் தங்கம்     குழப்பத்தில்  ...

புகைப்பட ஹைக்கூ 48

Image
புகைப்பட ஹைக்கூ 48 1.அழகு பார்க்கிறது அழகு! கிளி! 2.முகம் பார்த்து அகம் மகிழ்ந்தது அழகிய கிளி! 3.கிளி அழகை பார்த்தது கிளி! 4.பிம்பம் பார்த்து ஸ்தம்பித்தது பசுங்கிளி! 5.வாகனத்தில் வழிந்தது அஞ்சுகத்தின் அழகு! 6.நிஜம் ஒன்று நிழலை ரசிக்கிறது 7.களவாடியது கண்ணாடி! கிளியழகு! 8.கொத்திப்பார்த்தது தித்திக்கவில்லை! கண்ணாடியில் கிளி! 9.ஒப்பனையின்றி ஒளிர்ந்தது கண்ணாடியில் கிளி! 10.பைங்கிளி அழகு பார்த்து கொண்டது பைக் ஆடியில்! 11.ஆடியில் அழகு ஆனந்தத்தில்  கிளி! 12. மெய் பார்த்து    மெய் மறந்தது    கிளி! 13.  முகம்பார்க்க     இச்சைப்பட்டது     பச்சைக்கிளி  14.  ஆடியில் சிறைபட்டது        அஞ்சுகத்தின்        அழகு! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!