Posts

தளிர் ஹைக்கூ கவிதைகள்! 14

Image
வலி! இன்பமானது சுக பிரசவம் சுமையை இறக்குகையில் சொல்லொனா வேதனை! பிரசவம்! பதற்ற நொடிகள்! மணியாகின பொழுதுகள்! பிரசவம்!   அழுகை சத்தம்! மகிழ்ந்தார்கள்! பிரசவம்! வலிக்க வைத்தாலும் மகிழ்ச்சிதான்! குழந்தை! வேதனை விலகியது வேகமாய் ஜனித்தது குழந்தை! முட்டி மோதியதும் முனகல் கூடியது பிரசவம்!   வெளிச்சம் பார்க்க இத்தனை வேதனை! பிரசவம்! டிஸ்கி} நேற்று காலை 9.20 மணிக்கு  என் மனைவிக்கு பெண்குழந்தை சுகப்பிரசவமாக பிறந்துள்ளது. இருவரும் நலம்! அதனால் இணையம் பக்கம் வர முடியவில்லை! அதன் காரணமாக இன்றைய ஹைக்கூக்கள் பிரசவம் பற்றியது. தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

பால் தாக்கரே மரணம்! மும்பையில் பதற்றம்!

Image
சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே இன்று மும்பையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.அவரது மறைவால் சிவசேனைத் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது. மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வந்தனர். நேற்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இன்று காலையிலு...

விவேகன் பெற்ற வாழ்வு! பாப்பா மலர்

Image
விவேகன் பெற்ற வாழ்வு! பாப்பா மலர் சோமநாதபுரம் என்ற நாட்டில் விவேகன் என்ற வாலிபன் வசித்து வந்தான், விவேகன் புத்திசாலி. கருணை உள்ளமும் வீரநெஞ்சினையும் உடையவன். எதையும் ஆலோசனை செய்து முடிப்பவன். முடியாது என்று நினைக்காது முயற்சி செய்பவன்.     ஒரு சமயம் சோமநாத புரத்தில் அரக்கன் ஒருவன் புகுந்தான். அவன் ஆடு மாடுகளை கொன்று தின்றதோடு அல்லாமல் மனிதர்களையும் கொல்ல ஆரம்பித்தான். நாளுக்கு நாள் அரக்கனின் அட்டகாசம் அதிகரித்தது. இரவில் தினமும் மக்கள் அந்த அரக்கனால் விழுங்கப்பட்டார்கள். அவனை கொல்ல மன்னர் பூபேந்திர வர்மன் எவ்வளவோ படைகளை அனுப்பியும் எதுவும் செய்ய முடியவில்லை! அனைத்து படைகளையும் முறியடித்து அவர்களை அரக்கன் கொன்று தின்றுவிட்டான்.     இறுதியாக அரசர் ஒரு முடிவினை எடுத்தார். அதன் படி அவர் அரசவையை கூட்டினார். அரசவையில் மன்னர் பூபேந்திர வர்மன் அவையோரே அந்த அரக்கனை பல படைகள் அனுப்பியும் கொல்லவோ பிடிக்கவோ முடியவில்லை! நாளுக்கு நாள் மக்கள் படும் துன்பம் வேதனை தருகிறது. எனவே நானே அந்த அரக்கனுடன் நேருக்கு நேர் மோத உள்ளேன் இதைப்பற்றி தங்கள் கருத்துக்கள் யா...

மாற்றான் தோட்டத்து மல்லிகை!

Image
    முகநூலில் மேய்ந்து கொண்டிருந்தேன்! அப்போது கண்ணில் பட்ட சில சுவாரஸ்யமான படங்களும் செய்திகளும் கீழே! உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!( நன்றி! சொர்கமே என்றாலும் நம்மூரைபோல வருமா முகநூல் பக்கம்)  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலி இராமநாத புரம் சேதுபதி மகாராஜா  கீழ்வாலை கிராமத்தில்(விழுப்புரம்) கண்டறியப்பட்ட அரிய குகை ஓவியங்கள்!  கல்லில் பின்னப்பட்ட சிற்பம் ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடைய பையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள் . பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர் . " இவன் காசை முழுங்கிட்டான் . என்ன செய்றதுன்னு தெரியலை '' ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள் . "" நாலு வாழைப் பழத்தை ஊட்டிவிடு . தானா வெளியே வந்துடும் '' " ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார் ... '' கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத் தூக்கிக் குனிய வைத்து   முதுகில் தட்டிக் கொடுத்தார் . பையன் விழுங்கிய காசு வெளியே வரவில்லை . அப்போது டிப்டாப்பாக...

பிள்ளை வரம் அருளும் ஸ்கந்த சஷ்டி விரதம்

Image
பிள்ளை வரம் அருளும் ஸ்கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறுதினங்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுதல் ஸ்கந்த சஷ்டி விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விரதம் முருகனை குறித்து இருந்து பக்தியுடன் பூஜித்து வழிபட்டு வர முருகனைப் போல அழகான பிள்ளை பிறக்கும் என்பது நம்பிக்கை. ஸ்கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படும் தலம் திருச்செந்தூர். அங்கு முதல் நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி ஆறு நாட்கள் உற்சவத்தில் இறுதி நாள் சூர சம்ஹாரம் நடைபெறும்.    காஷ்யப முனிவரின் புத்திரர்களான சிங்கமுகன், சூரபத்மன், தாரகா சூரன்  மூவரும் சிவனிடம் சாகவரம் பெற்று அகந்தையால் பல அட்டூழியங்களை செய்து வந்தனர். அவர்களை அழிக்கவே ஸ்கந்தன் அவதரித்தார். சிவனின் அம்சமான சிவகுமாரன் முருகன் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர்.    சூரபத்மன் கடலின் நடுவில் வீர மகேந்திரபுரி என்ற பட்டினத்தில் வசித்தான். முருகன் அங்கு வந்து சூரனை போருக்கு அழைத்தபோது சிறு குழந்தையிடம் போர் செய்வதா என்று சூரன் தயங்கினான்.பின்னர் முருகர் தனது விஸ்வ ர...

அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!

Image
அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்! அலட்சியம்! இது நம் வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது. நாம் எதையுமே லட்சியப்படுத்துவது இல்லை! எல்லாம் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினோமானால் அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி இருக்க மாட்டார்கள். அலட்சியம் எதனால் வருகிறது? சோம்பல்! ஆர்வமின்மைதான் முதல் காரணம்.      அலட்சியத்தால் வாழ்க்கை இழந்தவர்கள் வாய்ப்பு இழந்தவர்கள் ஏராளம்! ஆனாலும் நாம் இன்னும் அலட்சியத்தை கைவிடுவதாக காணோம். எதுவென்றாலும் நமக்கு அலட்சியம்தான். குண்டுசீ குத்தினாலும் அலட்சியம் கூடங்குளம் அணு உலையானாலும் அலட்சியம். பத்து ரூபாய் லஞ்சம் என்றாலும் அலட்சியம் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் என்றாலும் அலட்சியம்! ஒரு நான்கு நாளைக்கு அதைப்பற்றி பேசிவிட்டு அப்புறம் மறந்து விடுகிறோம்! அதாவது அலட்சியமாக விட்டு விடுகிறோம். மறுபடியும் அதே ஊழல் வாதிகளை கொண்டாடி நாட்டை அவர்களிடம் கொடுக்கிறோம். இதில் ஒரு நொண்டி சாக்கு வேறு! தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காம இருப்பானா? என்று நமக்கு நாமே சமாதானம் தேடிக் கொள்கிறோம். காலையில் எழுவதிலிருந்த...