Posts

வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!

Image
மண்ணு மோகன் சிங்கு  கையில ஆட்சிய கொடுத்திட்டு படாத பாடு பட்டுகிட்டு இருக்கோம் நாம! ஆவுன்னா வெளிநாடுக்கு போயி சுத்தி பாத்துட்டு ஜாலியா இருக்கிற மனுசன் இப்ப நம்ம ஜனங்களுக்கு வெச்சிட்டாருப்பா பெருசா ஆப்பு!   ஒரு வாரமாவே பெட்ரோல் உயருது காஸ் விலை உயருது! டீசல் விலை உயருதுன்னு பேச்சா இருந்தது. நேத்து நம்ம மண்ணு மோகனு  திடீர்னு ஒரு அறிவிப்பை வெளியிட்டு  ஆப்பு வெச்சிட்டாரு! நடுத்தர மக்கள் பாடு இனி அதோ கதிதான்!   பொருளாதார மாமேதையான அவரு கண்டு பிடிச்சு வெளியிட்ட அறிவிப்புல டீசல் விலையை லிட்டருக்கு அஞ்சு ரூபா உயர்த்திட்டாரு! ஏற்கனவே காய்கறி மளிகை பொருட்கள் விலை தாறுமாறா இருக்கு! இப்ப பண்டிகை காலம் வேற ஆரம்பிக்க போற சமயத்திலே இன்னும் தாறுமாறா விலை ஏறப்போகுது இந்த அறிவிப்பால!   அதோடு விட்டிருந்தா பரவாயில்லை! நம்ம சோத்துக்கும் உலை வச்சிட்டாரு மன்னு மோகனு! இனிமே வருசத்துக்கு ஆறு சிலிண்டர் மட்டும் தான் மானிய விலையில தருவாராம்!  ஏழாவது சிலிண்டர்ல இருந்து மானியம் இல்லாமத்தான் தருவாராம்!   மானிய விலையில் அரசு தரும் சிலிண்டரின் விலை 386.50. இது ஏஜென்சிகளை ...

பிள்ளையார் திருத்தினார்! பாப்பா மலர்!

Image
பிள்ளையார் திருத்தினார்! விநாயக சதுர்த்தி தினம்! அதிகாலை! அனைவரும் சிறப்பாக பண்டிகை ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர். கோபு தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து பிள்ளையார் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மண்ணை பிசைந்து கொண்டிருந்தான். அவன் எவ்வளவு முயற்சி செய்தும் பிள்ளையார் உருவாகவில்லை! தன்மீதே கோபம் வந்தது அவனுக்கு!   அந்த நேரத்தில் தான் செய்த அறை குறை பிள்ளையாரை பார்த்து கோபப்பட்டு அதை தூக்கி போட்டு உடைத்தான்.எதிர்வீட்டை நோக்கினான். அங்கு அவனது தோழன் விஜய் அழகான பிள்ளையார் ஒன்றை வடிவமைத்து இருந்தான்.   ச்சே! என்னால முடியலை! அவன் மட்டும் எப்படி அழகா செய்யறான்? நான் செய்யாததை அவன் செஞ்சு பெருமையடிச்சுக்க போறான். என்று விஜய் மீது பொறாமைப்பட்டான் கோபு.     விஜய் என்ன சிற்பியா? நினைத்தவுடன் பிள்ளையாரை உருவாக்க? முயற்சியும் உழைப்பும் அவனை அழகான பிள்ளையார் உருவாக்கச் செய்திருந்தது. சிறுவயது முதலே களி மண்ணில் பொம்மைகள் செய்வதில் ஆர்வம் கொண்டவன் அவன். விடுமுறை நாட்களில் வீணாக பொழுதை கழிக்க விரும்பாது பொம்மைகள் செய்து பழகினான். அந்த பழக்கம் இப்போது அவனுக்கு கை கொட...

சரணடைவோம் சரபரை!

Image
சரணடைவோம் சரபரை! நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் தடைகள், துயரங்கள், வருத்தங்கள், சிரமங்களை போக்கிக் கொள்ள ஒரு ஆறுதலுக்காகவும், துயரங்களை மனம் விட்டு கதறி தீர்க்குமாறு இறைவனை துதித்து வழிபடுகிறோம். அதற்கு பரிகாரங்களாக பூஜைகளும், பிரார்த்தனைகளும் செய்து வழிபடுகிறோம். இவை நமது துன்பங்களை ஓரேடியாக நீக்கவில்லை என்றாலும் நமக்கு ஒரு வடிகாலாக இருந்து வருகின்றன. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பது போல அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை அனுபவித்தே தீர வேண்டும். இதனால்தான் சிவபெருமானே கூட பிச்சாடனாராக மாற நேர்ந்தது.    பிரார்த்தனைகளில் பல்வேறு கடவுள்களை வணங்குகிறோம். சிவபெருமான் எண்ணிலடங்கா வடிவங்களில் அருள்பாலிக்கிறார். அவற்றுள் 64   திருமேனிகள் சிறப்பாக சொல்லப்படுகின்றன. அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் அவற்றுள் சந்திர சேகரர், ரிஷபாரூடர், நடராசர், பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், கிராதர், கங்காளர், நீலகண்டர், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், காலபைரவர், கங்காதரர், சரபேஸ்வரர், லகுளீஸ்வரர், ஜ்வரஹரேஸ்வரர், முதலானவை வெகு சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. ...

ஓல்டு ஜோக்ஸ் 2

Image
ஓல்டு ஜோக்ஸ் 2 நீங்க கல்யாணத்தை ரொம்ப சிக்கனமா நடத்துங்க.. வேணாங்கலை! அதுக்காக ஜானவாசத்துல காருக்குப் பதிலா நீங்க என்னை உப்பு மூட்டை தூக்கிண்டு போறது கொஞ்சம் கூட நல்லாயில்லே!                              எம்.பூங்கோதை. டாக்டர்! ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா பல்லு கூசுது டாக்டர்! என்னசெய்யலாம் டாக்டர்?   சுடவெச்சு சாப்பிடுங்க!                        நாணி. இங்கபார்! நீ பணக்காரியா இருக்கலாம்!அதுக்காக நாம லவ் பண்ற இடத்துக்கெல்லாம் கூடவே ஒரு வேலைக்காரியை கூட்டிகிட்டு வர்றது நல்லா இல்லே!                          கடலூர் சார்லி. எங்க தாத்தா சாமியாரா போயிட்டாருடா! இந்த வயசில சாமியாரா போயி என்...

ரேசன் கார்டில் பெயர் சேர்த்த கதை!

Image
ரேசன் கார்டில் பெயர் சேர்த்த கதை! திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்கள் ரேசன்கார்டில் மனைவி பெயரும் குழந்தை பெயரும் சேர்க்காமல் இருந்தேன். ரேசன்கார்டில் பெயர் சேர்ப்பதில் இருந்த நடைமுறைச் சிக்கல்கள் என்னை அந்த பணியை செய்ய விடாமல் செய்தன. முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு ஆசிரியர்கள் ரேசன் கணக்கெடுக்க வருவார்கள் நாம் சொல்வதை குறித்துக் கொள்வார்கள்.   அவர்கள் நமக்குத் தெரிந்தவர்கள் எனில் கூடுதலாக ஒரு நபரை சேர்த்தும் பதிவிட்டுக் கொள்வார்கள். அப்புறம் பார்ம் பில்லப் பண்ணி போட்டோ ஒட்டி ரேசன் கார்டு கொடுத்தார்கள். ஆனால் இந்த பணியையும் அப்போது ஆசிரியர்களே செய்தார்கள்.என்னுடைய சிறிய வயதில் நான் பாட்டி வீட்டில் தங்கி படித்தேன். என் பெயர் அங்குள்ள ரேசன் கார்டிலும் இருந்தது. இங்குள்ள (அப்பா ஊரில்) ரேசன் கார்டிலும் இருந்தது.     எல்லாவற்றிலும் ஊழல் செய்யும் இந்த அரசாங்கம் இப்போது என்னமோ பெரிதாக ரேசன் ஊழலை ஒழிப்பதாக சொல்லி ரேசன் பதிய பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்றுதான் நீக்கல் சான்றிதழ். என் மனைவியை இங்குள்ள ரேசன் கார்டில் சேர்க்க அங்கு நீ...

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8 உங்கள் ப்ரிய பிசாசு முன்கதை சுருக்கம்} ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்வியின் செய்கைகள் வினோதமாக இருக்கிறது. அவளுக்கு பேய் பிடித்திருப்பதாக ஊரில் பேசிக் கொள்கிறார்கள். அது உண்மையென்றும் அதனால் தான் இங்கு கூட்டி வந்தேன் என்று சொல்கிறான் வினோத். பஞ்செட்டியில் முகேஷின் நண்பன் ரவி முகம் கழுவ பாத்ரூமிற்கு செல்கிறான். அங்கு கண்ணாடியில் அவன் முகம் தெரியாமல் வேறு முகம் தெரிகிறது! கண்ணாடியில் தெரிந்த புகை படிந்த உருவத்தை கண்டதும் வீல் என அலறினான் முகேஷ்! அதே சமயம் ரத்தக்கறை படிந்த அந்த துணியை சுவைத்துக் கொண்டிருந்த ரவி திரும்பினான். அவன் கண்களில் ஒரு கனல்! ஏய்! ஏன் இங்க வந்தே போ! போயிரு! என்று கத்தினான்.   முதன் முதலாக நண்பனை கண்டு பயந்தான் முகேஷ்! பின் சுதாரித்துக் கொண்டு டேய்! நான் உன் ப்ரெண்டுடா நல்லா பாரு! என்றான்.   யாரு! நீயா? நீ இல்லே என் ப்ரெண்டு! என்று மீண்டும் ரத்தத்தை ருசிக்க ஆரம்பித்தான் ரவி. முகேஷ் அவசரமாக பூஜையறைக்குச் சென்றான். ஒரு சொம்பில் சிறிதளவு மஞ்சள் போட்டு கலந்து எடுத்துவந்து   வேகமாக ரவியின் ...

பாதைகள் மாறாது! சிறுகதை!

Image
பாதைகள் மாறாது! சினிமா ஒன்று பார்த்துவிட்டு வீதியில் இறங்கி பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தபோதுதான் அவளை கவனித்தேன். இடுப்பில் கைக் குழந்தையோடு ஒரு கையில் கறிகாய் கூடையுமாக வந்து கொண்டிருந்தாள் அவள். இவள்.. எங்கோ பார்த்தமாதிரி அல்லவா தோன்றுகிறது.   திடீரென்று மூளையில் ஒரு மின்னல் அடித்தது! அது.. அது காயத்ரி அல்லவா? எப்படி இருந்தவள் ஆளே மாறி விட்டாளே!   என்று யோசனையுடன் பின்னோக்கிச் சென்றேன்.   மூன்றாண்டுகள் காலேஜில் ஒன்றாக படித்தது. ஆண்களுக்கு நிகராக அரட்டையடித்து அவர்களை மடக்கி வெற்றி காண்பவள். பெண்ணுரிமை பேசுபவள்.புதிய தலைமுறை பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருந்தவள்தான் காயத்ரி. கடைசியாய் கல்லூரி கடைசி நாளன்று பார்த்தது, என்ன ப்ரணவ்? காலேஜ் லைப் முடிஞ்சவுடனே மேரேஜ் லைஃபாமே? உனக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! பொண்ணு தேடறாங்களாமே! கண்ணு கலங்காம காப்பாத்துப்பா! இல்லே நான் சண்டைக்கு வருவேன்! என்று கிண்டலடித்தவள் ஆட்டோகிராப் நோட்டில் கையெழுத்து வாங்கிச் சென்றாள் முகவரியும் போன் நெம்பரும் தந்தாள். பின்னர் சில மாதங்களில் அவளது திருமண அழைப்பிதழ் வந்தது. அப்போது ஆபிஸி...