யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

 

யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

 


கிரிக்கெட் இந்தியாவின் உயிர் நாடிகளில் ஒன்றாக உருவெடுத்துவிட்ட விளையாட்டு. ஐந்துநாள் கிரிக்கெட்டின் புகழ் மங்க ஒருநாள் கிரிக்கெட் ரசிப்புக்குள்ளானது. அப்புறம் டி-20 தொடர்கள் .பி.எல் என கிரிக்கெட்டின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் எத்தனையோ வீர்ர்களை இந்தியா பார்த்துவிட்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பாவான்கள் பலர். குண்டப்பா விஸ்வநாத், சுனில் கவாஸ்கர், ச்ச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வி.வி.எஸ் லக்ஷ்மண் போன்ற மட்டை வீச்சு சாதனையாளர்கள் ஒருபுறம் இருக்க கபில்தேவ், பிரசன்னா, பிஷன்சிங் பேடி, அனில்கும்ப்ளே, ஹர்பஜன் சிங் போன்ற பந்துவீச்சு சாதனையாளர்கள் ஒருபுறம்  இந்திய கிரிக்கெட்டில் தம் பக்கங்களை எழுதிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

 அந்தவகையில் பஞ்சாபின் இட்து கை ஆட்டக்கார்ரான யுவராஜ் சிங் தன் பக்கத்தை கொஞ்சம்  அழுந்தவே பதிந்து இருக்கிறார்.

 

பஞ்சாபில் உள்ள சண்டிகரில் 1981ல் டிசம்பர் மாதம் 12ம் தேதி பிறந்தார் யுவராஜ் சிங். தாய் ஷப்னம் சிங் தந்தை யோக்ராஜ் சிங். யோக்ராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர். யுவராஜ் சிங் வளர்ந்த்தும் தேவ் ப்ப்ளிக் ஸ்கூலில் படித்தார். அப்போதே விளையாட்டில் ஆர்வம் காட்டிய யுவராஜ் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடினார். அதோடு கிரிக்கெட்டும்.

தேசிய அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றியும் பெற்றார் யுவராஜ் சிங் அப்போது அவருக்கு வயது பத்துதான்.. இந்த விளையாட்டு அவருக்கு மிகவும் பிடித்து இருந்த்து. ஆனால் யோக்ராஜ் சிங் மகனை கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு கூறினார். இதற்கிடையில் தந்தையோடு  இரு பஞ்சாப் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து இருந்தார்.

தந்தையின் வழிகாட்டுதல்படி கிரிக்கெட்டில் கவனம் செலுத்த்த்  தொடங்கினார் யுவராஜ் மும்பை சென்று திலிப் வெங்க்சர்கார் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து. முறையான பயிற்சியில் ஈடுபட்டார். சில மாதங்களில் பந்துகளை விளாசத் தொடங்கினார். அதிரடிதான் யுவராஜ் ஸ்பெஷல். அவருடைய கடின உழைப்பு 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணியில் அவரை சேர்த்தது.

 

முதல்தர கிரிக்கெட்டை 1997-98 ரஞ்சி சீஸனில் துவங்கிய யுவராஜ் முதல் ஆட்ட்த்தில் ஓரிஸ்ஸா அணிக்கு எதிராக டக் அவுட் ஆனார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கோச்- பிஹார் டிராபி போட்டியில் ஆட்டமிறங்கிய யுவராஜ் 358 ரன்களை பஞ்சாப் அணிக்காக விளாசினார். பீஹார் அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரே 357 ரன்கள் தான். இந்த ஆட்டம் தேர்வாளர்களை யுவராஜ் பக்கம் திருப்பியது.

2000 மாவது ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த போட்டியில் ப்ளேயர் ஆப் டோர்ணமெண்ட் அவார்ட் யுவராஜ் சிங்கிற்கு கிடைத்தது.

 அந்த தொடரில் மொத்தம் 8 ஆட்டங்களில் 203 ரன்களை குவித்த யுவராஜ் ஸ்ட்ரைக் ரேட் 103.57 ஆக வைத்திருந்தார். பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 ரன்கள் குவித்த்தும் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக 27 ரன்கள்  எடுத்த்தும் இந்திய வெற்றிக்கு பெரிதும் உதவின. அந்த தொடரில் பந்துவீச்சிலும் அசத்திய யுவராஜ் 5 போட்டிகளில் 12 விக்கெட்களை 3.39 என்ற எக்கனாமியில் எடுக்க இந்திய தேர்வாளர்கள் பார்வையில் அழுத்தமாக பதிந்தார் யுவராஜ் சிங்.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி  இருந்தது அப்போது இந்திய அணி. அசாரூதின், ஜடேஜா போன்ற முக்கிய வீர்ர்கள் வெளியேறிய நிலையில் இந்திய அணியில் மிடில் ஆர்டருக்கு நல்லதொரு பேட்ஸ்மேன் தேவை என்ற நிலை ஏற்பட்டது.


அப்போது ஐசிசி மினி உலக கோப்பை போட்டி நைரோபியில் 2000 ஆண்டில் நடந்தது. இப்போட்டியில் இந்தியாவுக்காக  களம் இறங்கினார் இளம் யுவராஜ். அப்போது அவருக்கு வயது 19 தான்.  முதல் போட்டியில்  கென்யாவுக்கு எதிராக களம் இறங்கியும் பந்துவீசத்தான் முடிந்த்து. 4 ஓவர்களில் 16 ரன்களை விட்டுக்கொடுத்தார். கென்யா நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை இரண்டு விக்கெட் இழந்து இந்தியா எடுத்து வெற்றிபெற்றுவிட்டது.

அடுத்தப் போட்டியில்தான் ஆரம்பித்தது யுவராஜ் சிங்கின் அதிரடி. இந்த போட்டியை கண்டவர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட்டிருக்க மாட்டார்கள்! இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது.

இந்த போட்டியில் பேட்டிங்கை துவக்கிய இந்தியா ச்ச்சினின் அதிரடி ஆட்டத்தில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தது.ஆனால் 37 பந்தில் 38 ரன்களை எடுத்த டெண்டுல்கர் அவுட்டானதும்  நிலைமை தலைகீழானது. அடுத்தடுத்து கங்குலி டிராவிட் விக்கெட்களை இழந்தது.

அப்போது களம் புகுந்த யுவராஜ் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கினார். வினோத் காம்ப்ளி, ராபின் சிங் இருவரும் ஓரளவு இவருக்கு கம்பெனி கொடுக்க ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, கில்லஸ்பி,மெக்ராத் பந்துவீச்சுக்களை வெளுத்து வாங்கினார். 80 பந்துகளில் 84 ரன்களை விளாசி இந்தியா 265 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக அமைந்தார். இந்தப் போட்டியில் ப்ரெட்லீ தான் மிகவும் அடிவாங்கினார் யுவராஜிடம்.

 

அடுத்து பீல்டிங்கிலும் அசத்திய யுவராஜ் இயான் ஹார்வியை கேட்ச் செய்தும் முக்கியமான நேரத்தில் மைக்கேல் பேவனை ரன் அவுட்டும் செய்ய இந்திய அணி இருபது ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் பீல்டிங் தூண்களில் ஒருவரானார் யுவராஜ். கங்குலி கண்டெடுத்த யுவராஜ்  அடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 35 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த்துடன் பவுலிங்கில் ஒரு விக்கெட்டும் எடுக்க இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார் யுவராஜ்.

ஆனால் அடுத்த தொடரில் அப்படியே சொதப்பினார் யுவராஜ். விளைவு இந்திய அணி தேர்வுக்குழுவினர் நம்பிக்கை இழந்தனர். ஆனால் யுவராஜ் நம்பிக்கை இழக்கவில்லை! மீண்டு வந்தார். எப்படி?

அடுத்த பகுதியில் பார்ப்போம்!

Comments

  1. வெற்றி வீரர்களில் ஒருவர். தகவல்கள் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2