நாடகமே உலகம்!

 நாடகமே உலகம்!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
(கணேஷ்பாலா கொடுத்த படங்களுக்கான என் இரண்டாவது கதை)

ஈ.சி.ஆர் ரோட்டில் அமைந்திருக்கும் அந்த விடுதியில் வண்ண வண்ண விளக்குகள் ஒளிர்ந்து அணைந்து கொண்டிருக்க இளம் நடிகை சஞ்சனா கண்களில் போதை மின்ன தன் காதலன் இயக்குனர் அம்ரேஷ் வர்த்தனுடன் ஆடிக்கொண்டிருந்தாள்.

உடன் ஆடிக்கொண்டும் இருக்கைகளில் அமர்ந்து உயர்ரக மது பானங்களை சுவைத்துக் கொண்டும் இருந்த முக்கால்வாசி நபர்களின் பார்வை அவர்களையே 24*7 ஆகச் சுற்றி வந்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் வளைந்தும் நெளிந்தும் சுழன்று ஆடிய சஞ்சனா அப்படியே வந்து அம்ரேஷ் கழுத்தில் கை போட்டுஇழுத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
அப்போது எங்கிருந்தோ ஒரு ப்ளாஷ் ஒளி மின்ன அம்ரேஷ் கண்களில் ஆவேசம் பொங்கியது.

”ஹூ ஈஸ் திஸ் நான்சென்ஸ்! எவண்டா எங்களை படம் எடுத்தது?” மரியாதையா மெமரிகார்டை கொடுத்திடு.”.என்று கர்ஜித்தான்.

”அம்ரேஷ்! காம் டவுன்? ஏன் இப்படி நடந்துக்கிறே? எடுத்துட்டு போட்டமே?”
”நீ சும்மா இரு சஞ்சு! இந்த போட்டோவை பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டா கிராம்னு போட்டு அவன் லைக்ஸ் அள்ளுவான்! அவன் யானைப்பசிக்கு நாம சோளப்பொறியா?”

”அட உனக்கு தமிழ்ப் பழமொழி எல்லாம் கூட தெரியுது!” சிரித்தாள் சஞ்சனா.
”எல்லாம் கதை சொல்ற அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்கிட்டே கத்துக்கிட்டதுதான்”!

இதற்குள் படம் எடுத்தவன் நைஸாக நழுவ முயல அவனை அப்படியே தாவிப் பிடித்து ஓர் அறைவிட்டான் அம்ரேஷ்.
”சொல்லிக்கிட்டே இருக்கேன்! நீ பாட்டுக்கு போய்க்கிட்டிருக்கே ராஸ்கல் அந்த போட்டோவை டெலிட் பண்ணு! இல்லேன்னா மெமரி கார்டை கொடு!”

”நான் ஏன் சார் கொடுக்கணும்! இது ப்ப்ளிக் ப்ளேஸ்! இங்கே நீங்க கொட்டம் அடிக்கிறீங்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம? அதை நான் போட்டோ எடுத்தா என்ன தப்பு”?

” தப்புதாண்டா! ப்ப்ளிக் ப்ளேசா இருந்தாலும் எங்களோட ப்ரைவசியிலே நீ தலையிட என்னடா உரிமை இருக்கு?”
”எது? இதுவா உங்க ப்ரைவசி? ஹாஹாஹா!” அவன் சிரிக்க
அம்ரேஷுக்கு கோபம் அதிகமானது. ”டேய்! வேணாம்! முதல்லே டெலிட் பண்ணு”! உரக்கக் கத்தினான்.

இப்போது எல்லோர் பார்வையும் அவர்கள் மேல் பதிய சஞ்சனா சங்கடமாய் உணர்ந்தாள்.
”அம்ரேஷ்! ப்ளீஸ் லீவ்! அவனை விட்டுரு! எல்லோரும் பார்க்கிறாங்க! எனக்கு வொர்ரியா இருக்கு”.. கிசுகிசுப்பாய் சொன்னாள்.
”பார்க்கட்டும்! நம்ம ப்ரைவசியை போட்டோ எடுக்க இவன் யார்? அட்லீஸ்ட் ஒரு சாரி கேட்கட்டும் விட்டுடறேன்”.

”ப்ளீஸ் ஒரு சாரி சொல்லிடுங்க! பிரச்சனையை இத்தோட முடிச்சுப்போம்!” சஞ்சனா அவனை கெஞ்சலாக பார்க்க.

” என்ன மேடம்? நீங்க டைரக்டருக்கு ஆதரவா பேசறீங்க? அவரு பெரிய டைரக்டரா இருக்கலாம்! ஆனா என்னை கைநீட்டி அடிச்சிருக்காரு! இதை விடமாட்டேன். ஆயிரம் கண்ணுங்க நீங்க டேன்ஸ் பண்ணதை பார்த்த்து. ஆயிரத்தோராவது கண்ணா என் கேமிரா பார்த்த்து அதிலே என்ன தப்பிருக்கு! வேணும்னா சார் மன்னிப்பு கேட்கட்டும் பதிலுக்கு நானும் மன்னிப்பு கேட்கறேன்.”

”டேய்! என் கோபத்தை கிளறாதே! மரியாதையா சாரி கேட்டு அந்த போட்டோவை டெலிட் பண்ணு! இல்லே நடக்கிறதே வேற..”
”சார்! மரியாதை…குறையுது! அப்புறம் நானும் இஷ்டத்துக்கு பேசுவேன்.”
”என்னடா இஷ்டத்துக்கு பேசுவே! கொஞ்சம் கூட சென்ஸ் இருக்கா உனக்கு! நடிகையை படம் பிடிச்சுப் போட்டு லைக்ஸ் வாங்கற பயல்..”
”டைரக்டர் சார் நீங்களும் வார்த்தையை அளந்து பேசுங்க! எனக்கும் பேசத்தெரியும்!”

” என்னடா பேசுவே?” எகிறி மீண்டும் ஒரு அறைவிட்டான் அம்ரேஷ்.
”பொறுக்கி ராஸ்கல்! பிழைக்க வந்த பய நீ என்னை அடிச்சிட்டியா? உன்னை விட மாட்டேன்.. இப்ப பாருடா”! என்று ஒரே செகண்டில் பேஸ்புக்கில் தான் எடுத்த பட்த்தை அப்லோட் செய்தான் போட்டோ எடுத்தவன்.
சஞ்சனா ”ஒ மை காட்! வேண்டாம்.. வேண்டாம்” எனக் கெஞ்சிக்கொண்டிருக்க
அதற்குள் அங்கே போலீஸ் வந்த்து

”சார் என்ன கலாட்டா இங்கே?”
அம்ரேஷ் நடந்த்தை சொல்லி முடிக்க போட்டோ எடுத்தவனை மிரட்டிய போலிஸ் அவனை ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்றது.
மறுநாள் இணையதளங்கள் செய்தித்தாள்கள் செய்திச்சேனல்கள் எங்கும் பஃப்பில் கலாட்டா! இயக்குனர் அம்ரேஷுக்கும் நடிகை சஞ்சனாவுக்கும் காதலா! என்று பரபரப்பாக செய்தி வெளியிட

பார்த்துக் கொண்டிருந்த சஞ்சனா அம்ரேஷுக்கு கால் செய்தாள்.
”டிவிசேனல், பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டா கிராம் எல்லாம் நம்ம மேட்டர்தான் இப்போ வைரலா போய்க் கிட்டிருக்கு பார்த்தியா அம்ரேஷ்.?”
”நம்ம ப்ளான் ஒர்க் அவுட் ஆயிருச்சு!”

”ஆமாம்! தொடர்ந்து மூணு படம் உன்னுது ப்ளாப்! என் மார்க்கெட்டும் டல் அடிக்குது! இப்ப எடுத்திட்டு இருக்கிற படம் எப்படிப் போகுமோன்னு பயந்துட்டிருந்தேன். நல்ல வேளை நீ ஒரு ப்ளான் பண்ணி நம்மளை பத்தி பேச வைச்சிட்டே.. இனிமே நம்ம படம் பிழைச்சிக்கும். நாமும் பிழைச்சிக்கலாம்!” என்றாள் சஞ்சனா.

”ரெண்டே நாள்ல நம்ம படம் ரிலிஸ் பண்ணிடலாம். நம்ம மேட்டர் வைரலா பரவிக்கிட்டிருக்கிறதாலே மக்கள் ஆர்வமா தியேட்டருக்கு வருவாங்க! வசூல் அள்ளும். எப்படியோ அந்த போட்டோகிராபர் நல்லா கோ ஆப்ரேட் பண்ணான்.”

”அவனை வெளியே எடுத்திட்டியா?”

”எடுத்தாச்சு! பேசினபடி பேமெண்டும் கொடுத்தாச்சு! இனிமே நம்ம காட்டுல மழைதான்!” என்றான் அம்ரேஷ் சிரித்தபடி!

”ஆமா! பணமழைதான்!” என்று பதிலுக்கு சிரித்தபடி போனை கட் செய்தாள் சஞ்சனா.
May be a cartoon of 1 person
  

Comments

  1. படத்திற்கான கதை நன்று. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2