Posts

Showing posts from June, 2021

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

 வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2 வணக்கம் அன்பர்களே! சென்ற பகுதியில் வார மாத இதழ்களில் சிறுகதை எழுதுவது குறித்து பார்த்தோம். சிறுகதை இலக்கியத்திற்கு இப்போது பத்திரிகைகளில் பெரிய வரவேற்பு இல்லை. நாவல் என்பது கூட 80 முதல் 100 பக்கங்களுக்குள் குறைந்து போய்விட்டது. அப்படிப்பட்ட சூழலில் சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாகத்தான் இருக்கும். சரி அப்புறம் எப்படி பத்திரிகையில் உங்கள் பெயர் வருவது? நீங்கள் எப்படி சந்தோஷம் அடைவது? அதற்கு நீங்கள் வாசக எழுத்தாளராக துணுக்கு எழுத்தாளராக மாற வேண்டும். இன்று வரும் பிரபல வார மாத இதழ்களில் நகைச்சுவை துணுக்குத்தவிர வீட்டுக் குறிப்புகள், வாசகர் கடிதங்கள், ஆன்மீகக் குறிப்புகள்,கேள்வி பதில், இணையத் துணுக்குகள் என்று ஏராளமான வாய்ப்புகள் வாசக எழுத்தாளர்களுக்குக் கொட்டிக் கிடக்கின்றன.  பத்திரிகையில் எழுத விரும்பும் ஆரம்ப கால எழுத்தாளர்கள் வாசகர் கடிதம், கேள்விபதில் துணுக்கு, ஜோக்ஸ் என்று படிப்படியாக தன்னை வளர்த்துக் கொள்வது வழக்கம். சில வாசகர்கள் வாசகர் கடிதம், கேள்விபதிலோடு தங்கள்  ஆசையை பூர்த்தி செய்து கொள்வதும் உண்டு

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?

 வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? சங்கப்பலகையில் நண்பர் சுந்தரராசன் வார மாத இதழ்களில் படைப்புகள் எழுத சக எழுத்தாளர்கள் வழிகாட்டலாமே என்று கேட்டிருந்தார். அவருக்காகவும் இங்கு எழுதும் புதிய படைப்பாளர்களுக்காகவும் இந்தப் பதிவு. முதலில் இப்படி ஒரு பதிவு எழுத எனக்குத் தகுதி இருக்கிறதா என்று ஒரு சுய பரிசோதனையும் செய்து கொண்டேன். முடிவில் ஓரளவுக்கு அனுபவமும் தகுதியும் இருக்கிறது என்று முடிவுக்கு வந்து இந்த பதிவை எழுதுகின்றேன். முதலில் என்னைப் பற்றி ஓர் அறிமுகம். நான் நத்தம் எஸ்.சுரேஷ்பாபு. 1988ல் சிறுவர்களுக்கான கையெழுத்து பத்திரிக்கை முதலில் நட்த்தினேன். அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்புறம் தேன்சிட்டு என்ற இளைஞர்களுக்கான கையெழுத்து பத்திரிகையை என் கல்லூரிக் காலத்தில் நடத்தினேன்.  தளிர் என்ற வலைப்பூவில் 2011 முதல் படைப்புகள் எழுதி வருகின்றேன். என் கதைகள் துணுக்குகள், பாக்யா, குமுதம், தங்கமங்கை ,கோகுலம், கல்கி, ஆன்ந்தவிகடன்,  தமிழ் இந்து, மாயாபஜார், பொம்மி, பொதிகைச்சாரல் வாரமலரில் வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு வாரமலர் டி.வி.ஆர்.சிறுகதைப் போட்டி (திருச்சி

ராங் நம்பர்!

 #சிந்திக்காதசெயலும்கெடும்! ராங் நம்பர்!                           நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. இரவு மணி பத்தைக் கடந்துகொண்டிருந்தது. தாழ் போடாமல் இருந்த வாசல் கதவை மெல்ல பூனை போல திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பசுபதியை “பிலுபிலு”வென பிடித்துக் கொண்டாள் வளர்மதி. “ஊரே கொரானான்னு ஒரே பீதியிலே கிடக்குது. எப்படி தொத்துது எப்படி பரவுதுன்னு சொல்லவே முடியலை! எல்லோரும் வீட்டுலே அடங்கிக் கிடக்கச் சொன்னா நி என்னடான்னு ராத்திரி பத்து மணி வரைக்கும் கட்சி, தேர்தலு, பொதுக்கூட்டம்னு சுத்திக் கிட்டு வரே..! ஊட்டுலே ரெண்டு புள்ளைங்க அதுவும் பொட்டை புள்ளைங்க இருக்குது! இன்னும் ரெண்டு வருசம் போனா குத்த வைச்சிடும். அப்புறம் சடங்கு சீர்னு ஏகப்பட்ட்து கிடக்கு! கொஞ்சம் கூட பொறுப்பில்லாம கட்சிக்காரன் பின்னாடி சுத்திக்கிட்டு திரியறியே நீயெல்லாம் ஒரு மனுசனாய்யா?”   “சும்மா நிறுத்தும்மே! நான் சும்மா ஒண்ணும் கட்சிக்காரன் கூட சுத்தலை! ஒரு நாளைக்கு ஐநூறு ரூவாவும் குவாட்டரும் பிரியாணியும் தராங்க! உடம்பு நோவாத வேலை! அவங்க போடற கூட்டம் எல்லாத்துக்கும் கொடி பிடிச்சுட்டு போகனும் ஊர் ஊரா ஊட்டுங்களுக்கு போய் ஓட்டு கேக்கணும். பெட்ர

யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

Image
  யுவராஜ் சிங் ! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன் !   கிரிக்கெட் இந்தியாவின் உயிர் நாடிகளில் ஒன்றாக உருவெடுத்துவிட்ட விளையாட்டு . ஐந்துநாள் கிரிக்கெட்டின் புகழ் மங்க ஒருநாள் கிரிக்கெட் ரசிப்புக்குள்ளானது . அப்புறம் டி -20 தொடர்கள் ஐ . பி . எல் என கிரிக்கெட்டின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கிறது . கிரிக்கெட் விளையாட்டில் எத்தனையோ வீர்ர்களை இந்தியா பார்த்துவிட்டிருக்கிறது . இந்திய கிரிக்கெட் ஜாம்பாவான்கள் பலர் . குண்டப்பா விஸ்வநாத் , சுனில் கவாஸ்கர் , ச்ச்சின் டெண்டுல்கர் , சவுரவ் கங்குலி , ராகுல் டிராவிட் , வி . வி . எஸ் லக் ‌ ஷ்மண் போன்ற மட்டை வீச்சு சாதனையாளர்கள் ஒருபுறம் இருக்க கபில்தேவ் , பிரசன்னா , பிஷன்சிங் பேடி , அனில்கும்ப்ளே , ஹர்பஜன் சிங் போன்ற பந்துவீச்சு சாதனையாளர்கள் ஒருபுறம்   இந்திய கிரிக்கெட்டில் தம் பக்கங்களை எழுதிவிட்டு சென்றிருக்கிறார்கள் .   அந்தவகையில் பஞ்சாபின் இட்து கை ஆட்டக்கார்ரான யுவராஜ் சிங் தன் பக்கத்தை கொஞ்சம்   அழுந்தவே பதிந்து இருக்கிறார் .   பஞ்சாபில் உள்ள சண்டிகரில் 1981 ல் டிசம்ப