இளைய தலைமுறை!
இளைய தலைமுறை ! அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் கல்லூரி மாணவ மாணவியரின் கூட்டம் நிரம்பிவழிந்தது.பக்கத்து பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரியும் எனக்கு அந்த மாணவ கும்பலின் நடத்தை அறுவெறுப்பை உண்டாக்கியது. கும்பலாக நின்று ஆண் பெண் வித்தியாசம் பாராமல் அரட்டை அடிப்பதும் சிரிப்பதும் தொட்டு பேசுவதும் அந்த பஸ் ஸ்டாண்டே அவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது. சக மாணவர்களை வாடா போடா என்று விளித்து பேசி அவர்களை கிண்டலடிப்பதும் அவர்கள் சொன்ன பதிலுக்கு சிரிப்பதுமான அவர்களின் விளையாட்டு எனக்கு எரிச்சலாக இருந்தது. " ச்சே என்ன பெண்கள் இவர்கள்? இது இருபதாம் நூற்றாண்டுதான். புதுமைபெண்களாக இருக்க வேண்டியதுதான் ஆனால் இப்படியா நடு ரோட்டில் நாலைந்து ஆண்களுடன் கும்மாளம் அடிப்பது இவர்களெல்லாம் படித்து நாட்டை திருத்தப் போகிறார்களா என்ன? " மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டேன். நல்ல வேளையாக பஸ் வரவே முண்டி அடித்து ஏறினோம் நல்ல கூட்டம் பஸ் நிரம்பி வழிந்தது. இதை பயன்படுத்தி ரோமியோ ஒருவன...