தளிர் ஹைக்கூ கவிதைகள் 12

தளிர் ஹைக்கூ கவிதைகள்

நீண்டு வளர்ந்தும்
நிற்க நிழலில்லை!
நெடுஞ்சாலை கம்பங்கள்!

காதை திருகியதும்
கண்ணீர் விட்டது
குழாய்!

நான்கு காலிருந்தும்
நடக்க மறுத்தது
நாற்காலி!

விழுந்தும் 
அடிபடவில்லை!
அருவி

தூக்கிலிட்டும்
கதற வில்லை!
திண்பண்டங்கள்!

இசை பாடியதும்
விரட்டப்பட்டது
குளவி!

களித்ததுமனசு
இளைத்தது கைப்பை!
உறவினர் வருகை!

 பச்சை சேலையில்
வெள்ளை ரோஜாக்கள்
வயலில் கொக்குகள்!

வானவெளியில் 
நகரும்  ஓவியம்
மேகம்!

அழுதாலும் 
கரிக்கவில்லை கண்ணீர்
மழை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கருத்திட்டு மெருகேற்ற உதவுகங்கள்! நன்றி!Comments

 1. மிகவும் நல்ல வரிகள்....இன்னும் நிறைய எழுதுங்க....பகிர்வுக்கு மிக்க நன்றி.......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 2. ஹைக்கூ எல்லாமே நச் நச்... அருமை...

  தொடர்க...

  நன்றி...

  ReplyDelete
 3. அருமையான ஹைக்கூக்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
 4. ரொம்ப நல்லாருக்குங்க. Continue பண்ணுங்க.

  ReplyDelete
 5. ஹைகூக்கள் உங்களுடன் நன்றாக உறவாடுகிறது தெரிகிறது உங்கள் வரிகளில்
  வாழ்த்துகள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!