நான் ரசித்த சிரிப்புகள் 20 மன்னர் ஜோக்ஸ்!நான் ரசித்த சிரிப்புகள் 20  மன்னர் ஜோக்ஸ்!

திறமை எங்கிருந்தாலும் நம் மன்னர் ஓடிச் சென்று பாராட்டுவார்!
அதற்காக போர்க்களத்தில் எதிரி மன்னனை ஓடிச் சென்று பாராட்டுவது நன்றாக இல்லை!
                            எஸ். கோபாலன்

மன்னரை கிரிக்கெட் போட்டி பார்க்க அழைத்து வந்தது தப்பாப் போச்சு!
ஏன்?
சாமரம் வீச அந்த சியர்ஸ் கேர்ள்களை பேசி முடிக்கச் சொல்கிறாரே!
                   சொக்கம்பட்டி தேவதாசன்.

குளம்புச் சத்தம் கேட்கிறதே... எதிரி நாட்டு மன்னன் குதிரைப் படையோடு வருகிறானோ?
மன்னா! உங்கள் பயத்திற்கு ஒரு அளவே இல்லையா?.. அதுமகாராணி வைக்கிற புறாக் குழம்பு சத்தம்!
                               பர்வீன் யூனுஸ்.

நம் அரசரை தேடி மாலையும் கழுத்துமாக பொண்ணு மாப்பிள்ளை வந்திருக்காங்களே, வாழ்த்து வாங்கவா?
கல்யாண விருந்துல மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு மொய் வைக்காமல் வந்து விட்டாராம் மன்னர்.
                                     அப்துல்

அரசியாரே! ஒரு துயரச்செய்தி!
போருக்கு சென்ற மன்னருக்கு ஆபத்தா?
ஆமாம் புறமுதுகிட்டு ஓடிவரும் போது கழிவு நீர் கால்வாயில் விழுந்து விட்டார்!
                          குட்டி மு வெங்கடேசன்.
யாரங்கே?
நான் தான் மகாராணி!
அப்ப சரி யாருமில்லை இங்கே!!
                         எஸ் கோபாலன்!

சேடிப்பெண்களுக்கு பதில் இரண்டு கேடிப்பசங்கள் மன்னருக்கு சாமரம் வீசுகிறார்களே!
சேடிப்பெண்களிடம் மன்னர் சேட்டை செய்ததால் மகாராணி செய்த ஏற்பாடாம் அது!
                     சீர்காழி வி. ரேவதி

போருக்கு போற மன்னர் சுத்த அல்பம்னு எப்படி சொல்றே?
லஞ்ச் ப்ரேக் எத்தனை மணிக்குண்ணு கேக்கறாரே!
                       சி. சாமிநாதன், கொயம்பத்தூர்.

எதிரி மன்னர் உங்களுடன் கிரிக்கெட் விளையாட வரமாட்டேன் என்று கூறிவிட்டார் மன்னா!
ஹா! ஹா! நான் தான் அதிக ரன் எடுப்பேன் என்று பயந்து விட்டான்!
                      சிக்ஸ் முகம்

தங்களை துரத்தி வந்த எதிரி மன்னனை கைது செய்து விட்டனர் மன்னா!
சபாஷ்! யார் கைது செய்தது?
மிருகவதை தடுப்பு அதிகாரிகள்!
                அ. சுந்தரராமன்.

எதிரி நாட்டு மன்னன் நம்மை மிகவும் கேவலப்படுத்தி விட்டான் மன்னா!
என்ன செய்தான் தளபதியாரே!
போர்க்கள பாதையில் கண்ணி வெடிகளுக்கு பதிலாக கிழவி வெடிகளை புதைத்து வைத்துள்ளானாம்!
                             பர்வின் யூனூஸ்

அண்டை நாட்டு மன்னன் தன்னிடம் டாங்கிப் படையெல்லாம் இருப்பதாக சொல்றது உண்மையா அமைச்சரே?
கழுதைப்படையைத்தான் அப்படி சொல்லி இருக்கிறான் மன்னா!
                               அ. காவியன்.

இந்த பாட்டை எப்படி யோசித்து எழுதினீர்கள் புலவரே!
ஒரு லாட்ஜும் நான்கு லார்ஜும் போட்டு மன்னா!
                              வீ. விஷ்ணுகுமார்.

மன்னா! எட்டு திசைகளிலும் நமக்கு எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள்!
அடக் கடவுளே! திக்கெட்டும் இக்கட்டா!
                           வீ. விஷ்ணு குமார்.
 
மன்னரின் திறமையை ஒரே வார்த்தையில் புகழ்ந்ததற்காக மன்னர் புலவரை சவுக்கால் அடிக்கிறாரே? புலவர் அப்படி என்ன வார்த்தைச் சொல்லி புகழ்ந்தாராம்?
ஓடுகாலி!
                     சொக்கம் பட்டி தேவதாசன்.

உங்களை எனது போர் வாள் என்று தானே நமது மன்னர் சொன்னார் இதற்கு ஏன் டென்ஷன் ஆகிறீர்கள் தளபதி?
அவர் வாளின் லட்சணம் தெரியாதே அமைச்சரே! மழுங்கிப்போய் துருப்பிடித்து மொண்ணையாக இருக்குமே!
                              கே. ஆனந்தன்.

போர்க்களத்தில் எதிரி மன்னன் வெற்றியை மட்டுமே ருசிக்கிறான்... நம் மன்னர்?
ஒரு மண்ணையும் விட்டு வைப்பதில்லை!
                                   சிக்ஸ் முகம்.

மன்னா! எதிரி மன்னன் போர்க்களத்தில் உங்களை அடித்த போது நீங்கள் ஏன் அவரை திருப்பி அடிக்கவில்லை?
வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது அமைச்சரே!
                          வீ. விஷ்ணு குமார்.

நன்றி:  குமுதம் , ஆனந்தவிகடன், தினமலர்- வாரமலர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து படைப்புக்களை மெருகேற்ற உதவுங்கள்! நன்றி!

Comments

 1. ரசித்தேன் எல்லாம் நல்லா சிரிப்பூட்டுகிறது

  ReplyDelete
 2. மன்னர் நகைச்சுவைகள் ரசித்துச் சிரிக்க வைத்தது மாமன்னரே... தேனீயாய் திரட்டித் தந்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 3. ரசித்தேன்... சிரித்தேன்...

  உங்கள் உழைப்பிற்கு நன்றி.. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

  தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

  மேலும் அறிய: http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_26.html

  ReplyDelete
 5. வாழ்த்தியவர்களுக்கும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பருக்கும் எனது வந்தனங்களும் ந்ன்றியும்!

  ReplyDelete
 6. ஹா...ஹா....வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்....
  அருமை! அருமை!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2