வணக்கம் இணைய உறவுகளே!

அன்பார்ந்த இணைய நண்பர்களே! கடந்த இருபது நாட்களாக எனது தொல்லையின்றி இருந்திருப்பீர்கள்! அதற்கு முன்பு ஒரு வாரம் மின்வெட்டு பிரச்சனையில் பதிவிடவும் பிறரது பதிவுகளை வாசிக்கவும் முடியவில்லை! மின்வெட்டை சமாளித்து எழுத அமர்ந்தால் எனது கணிணி சதி செய்து விட்டது. திடீரென ஹேங்க் ஆகி முடங்கி விட்டது. பூட் செய்ய ஒரு இடத்தில் கொடுத்ததில் அவர்கள் ஏகமாய் விளையாடி விட்டார்கள். 
     கணிணியே உதவாது புதுக் கணிணி வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் இந்த கணிணியை வாங்கி கொடுத்த நண்பர் மீண்டும் தொடர்புக்கு வந்தார். அவரது செல் எண்ணையும் தொலைத்து விட்டதால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை! பின்னர் வேறொருவர் மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் கணிணியை கொடுத்ததில் சரி செய்து கொடுத்துள்ளார். ரேம் தான் பழுதடைந்து போனது என்று ரூ 950 மட்டும் வாங்கி கொண்டார்.  இதனால் கணிணியில் நான் சி டிரைவில் வைத்திருந்த பல தகவல்களும் சாப்ட் வேர்களும் காலி ஆனதுதான் மிச்சம்.
   தமிழில் தட்டச்சு செய்யும்  இ கலப்பை 2.0 வெர்சனும் தொலைந்து போனது. இப்போது வெர்சன் 3.01 டவுண் லோடு செய்துள்ளேன். இதில் பழக நாளாகும் என்று நினைக்கிறேன்.  கடும் மின்வெட்டு மற்றும் வேளைப்பளு, கணிணியில் ஏற்பட்ட பிரச்சனை போன்றவற்றால் உங்களை இத்தனை நாள் சந்திக்காமல் இருந்து விட்டேன். இன்னும் மின்வெட்டு தீர வில்லை! இருந்த போதும் அடிக்கடி உங்களுடன் அளவளாவ ஆவலுடன் உள்ளேன். விரைவில் எனது வழக்கமான படைப்புகள் உங்களை மகிழ்விக்கும். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்! ஆதரவளித்து வரும் அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றி!
                                                                                            அன்புடன்
                                                                 சா.சுரேஷ்பாபு.
                                                                   (தளிர் அண்ணா)


Comments

 1. மீண்டு(ம்) வாருங்கள்.. நன்றி அண்ணா..

  ReplyDelete
 2. எல்லா இடமும் இதே பிரச்னை தான் போலும்... மீண்டும் தொடர்ந்து கலக்குங்கள்

  ReplyDelete
 3. வாங்க தளிர் அண்ணா ...வந்து கலக்குங்க ....

  ReplyDelete
 4. வெளிநாடு சென்றிருப்பீர்கள் என்றல்லவா நினைத்தோம்!

  ReplyDelete
 5. சோகமான செய்தியுடன் வந்திருக்கிறீங்க..
  நிலைமை சரியா வரும் வந்து சேருங்கள் காத்திருக்கிறோம்

  ReplyDelete
 6. Take care. Hope you will come back soon

  ReplyDelete


 7. அனைவருக்கும் வருகின்ற தொல்லைகள் தான் இது!
  மீண்டு(ம்) வந்ததுக்கு நன்றி!

  ReplyDelete
 8. வாருங்கள்... தொடருங்கள்...

  ReplyDelete
 9. வாங்க வாங்க! சீக்கிறமே படைப்புகளை அள்ளி வழங்குங்கள்!

  ---
  www.sudarvizhi.com

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2