பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 12
பேய்கள் ஓய்வதில்லை!
பகுதி 12
உங்கள் ப்ரிய பிசாசு
முன்கதை சுருக்கம்:
ரவிக்கு பிடித்துள்ள பேயை விரட்ட திருப்பதிக்கு அழைத்து செல்கிறான் முகேஷ். பாதி
வழியில் காணாமல் போகும் ரவி, முகேஷிற்கு போன் செய்து தன்னை தேடாமல் வீட்டுக்கு
செல்லுமாறு கூறுகிறான். திருப்பதியில் இறங்கியதும் பைத்தியக்காரன் போன்ற தோற்றமுள்ள
ஒருவன் முகேஷை கூப்பிடுகிறான். ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்வி
வினோதமாக நடந்து கொள்கிறாள். அவள் ஒரு ஆளில்லா வீட்டில் நுழைந்ததாக வினோத் கூற அது
பூட்டப்பட்டிருக்கிறது வினொத்திற்கு பைத்தியம் பிடித்து விட்டதாக மணி கூறுகிறார்.
முந்தைய பகுதிகளுக்கான
லிங்க்
http://thalirssb.blogspot.in/2012/08/6.html பகுதி 6
http://thalirssb.blogspot.in/2012/09/7.html பகுதி 7
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 9
http://thalirssb.blogspot.in/2012/10/10.html பகுதி 10
http://thalirssb.blogspot.in/2012/09/7.html பகுதி 7
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 9
http://thalirssb.blogspot.in/2012/10/10.html பகுதி 10
இனி!
கண்டிப்பாக பைத்தியம்
முற்றிவிட்டது என்று மணி கூறவும் வினோத், இல்லீங்க ஐயா, நான் பைத்தியம் இல்லே!
செல்வி இதுக்குள்ளாறத்தான் இருக்கா! உள்ளே பாத்திரங்கள் உருளும் ஓசையும் ஏதோ
சமையல் வாசனை கூட என் மூக்குக்கு
உறைக்கிறது கொஞ்சம் நம்புங்க! என்றான்.
சரிப்பா! நம்பறோம்! செல்வி இதுக்குள்ளாற இருந்தாலும்
இருக்கட்டும் இப்ப நாம வீட்டுக்கு போவோம்! இந்த அர்த்த ராத்திரியில இங்க
நின்னுகிட்டிருக்கிறது தப்பு என்றார் மணி.
என்ன சொல்றீங்க நீங்க? செல்விய தனியா
விட்டுட்டு போறதா?
மறுபடியும் முதலில் இருந்தா? ஐயோ! என்று
தலையில் கைவைத்துக் கொண்டார் மணி
இப்போது ராகவன் வினோத்தை தொட்டு அழைத்தான்.
வினோத் நீ ஏதோ கனவு கண்டு மிரண்டு போயிருக்கே! செல்வி எங்காத்துல பத்திரமா
தூங்கிகிட்டு இருக்கா? நீ வேற யாரையோ பாத்திருக்கலாம்
அப்ப பூஜாரி வீட்டுல நடந்தது ஊரே திரண்டு
வந்ததே?
பூஜாரி வீட்டுல என்ன நடந்தது?
நீ கூடத்தானே இருந்தே?
நான் எங்க இருந்தேன்?
இப்பத்தான் உன்னை காணாம தேடிகிட்டு துணைக்கு இவரையும் கூப்பிட்டு கிட்டு வரேன்.
என்னடா சொல்றே? செல்வி ராத்திரியில எழுந்து
போய் பூஜாரியை மிரட்டினா? ஊரெல்லாம் கூடிச்சு! அப்புறமா இல்ல நாம எல்லோரும்
கிளம்பி வந்தோம்! கொஞ்சம் முன்னாலே நடந்த செல்வி இந்த வீட்டுக்குள்ளே
புகுந்துகிட்டா?
இல்லடா வினோத்! உனக்கு ஏதோ குழப்பம்! ராத்திரி
சரியா தூங்காம கனவு கண்டுட்டு இப்படி உளற்ரே!
இது உளறல் இல்லடா! நிஜம்! நான் கண்ணால
பார்த்தது!
எதை கண்ணாலே
பார்த்தே?செல்வி இந்த வீட்டுக்குள்ளாற நுழைஞ்சதை!
பூட்டியிருக்கிற வீட்டுல
யாராவது நுழைய முடியுமாடா? நீயே நல்லா பாரு! டார்ச் லைட்டை கதவில் அடித்து
காண்பித்தான் ராகவன்.
பெரிய பூட்டு ஒன்று
தொங்க வினோத் அமைதியானான்.
அப்ப நான் கண்டதெல்லாம் கனவா? செல்வி வீட்டுலதான்
இருக்காளா?
ஆமாம் அவ நல்லா
தூங்கிகிட்டு இருக்கா! நீதான் தேவையில்லாம குழம்பிக்கிறே!
நம்ப மாட்டாதவனாக வினோத்
மீண்டும் கதவில் காது வைத்து பார்த்தான். ஒன்றும் கேட்க வில்லை! நிசப்தம்.
தூரத்தில் ஜாமக் கோழி கூவியது. சில்வண்டுகள்
ரீங்காரம் தவிர ஏதும் இல்லை!
வினோத் மனசுல எதையும்
போட்டு குழப்பிக்காம என்னோட ஆத்துக்கு வா! நாளைக்கு காலையில முதல் வேளையா பாயை
பார்த்து மந்திரிச்சிக்கிட்டு வந்திடலாம்.எல்லாம் சரியா போயிடும்.
வினோத் அரை மனதாய் அங்கிருந்து கிளம்பினான்.
இன்னிக்கு யாரு முகத்தில
முழிச்சேனே என்னோட பாதி தூக்கம் போச்சு! ஏஞ்சாமி! எல்லாமே விவகாரமா இருக்கே? என
மணி கேட்க
உங்க பேத்திக்கு பேயி பிடிச்சிகிச்சுன்னு
சொன்னீங்களே அதை பாதியில விட்டுட்டீங்களே மீதியை சொல்லுங்களேன். விடியற வேளை
வந்தாச்சு! இனி தூக்கம் ஏது? அதையாவது கேப்போம் என்றான் ராகவன்.
அது ஒரு பெரிய கதைப்பா! அது என்னாதுக்கு இந்த
வேளையிலே!
பாதி கதை சொல்லீட்டீங்க?
மீதிய சொல்லக் கூடாதா?
மீதி என்னா இருக்கு சொல்ல?
பாயிகிட்டே போயி
மந்திரிச்சோம்! தாயத்து கொடுத்து மந்திரிச்சாரு பேயி ஓடிப்போயிடுச்சு!
அதான் அது எந்த பேயி? எப்படி ஓடிச்சு?
கேட்டுக்கொண்டே நடக்க இதற்குள் ராகவனின் வீடு வந்திருந்தது. வாசலில் விளக்கு
எரிந்து கொண்டிருக்க செல்வி அங்கு நின்று கொண்டிருந்தாள். இந்த நேரம் கெட்ட
நேரத்துல இப்படி மூணு பேரும் எங்க போயி சுத்திட்டு வர்றீங்க? என்றாள்.
வினோத்தால் தன் கண்களாலேயே நம்ப முடியவில்லை!
ஏய் செல்வி நீ எப்படி இங்க? நீ நடு ராத்திரியில எழுந்து வெளியே போகலை?
இன்ன விளையாடுறியா வினோத்? நான் எங்க வெளிய
போனேன்? நீதான் அர்த்த ஜாமத்துல வெளியே போயிட்டு சாவகாசமா வந்துகிட்டிருக்கே!
உன்னை காணாம நான் தவிச்சிகிட்டு இருந்தா என்னை வெளிய போனதா கதை அளக்கிற?
இல்ல செல்வி! நீ வெளியே போனே! வினோத்
ஆரம்பிக்கவும் ராகவன் அவன் கையை பிடித்து அழுத்தினான். மெதுவாக அவன் காதில்
கிசுகிசுத்தான். வீணா பிரச்சனை பண்ணாதே நாளைக்கு பாய் கிட்ட பாத்துக்கலாம் பேசாம
உள்ளே போ என்றான்.
வினோத் அமைதியானான். ஆமாம் செல்வி
எனக்குத்தான் ஏதோ ஆயிடுச்சி உளறிகிட்டு இருக்கேன். தூக்கத்துல எழுந்து வெளியே
போயிட்டேனாம்! இவங்கதான் வந்து அழைச்சிகிட்டு வந்தாங்க்க! என்று சொல்லிவிட்டு
உள்ளே நுழைந்தான் வினொத்
பின்னாலேயே நுழைந்தனர் மணியும் ராகவனும்
மூவரும் சோபாவில் அமர செல்வியும் வந்து
அமர்ந்தாள். என்ன உக்கார்ந்திட்டீங்க? தூங்க போகலியா?
இனிமே எங்கேம்மா தூக்கம்
அதான் விடியற பொழுதாயிட்டுதே என்றார் மணி.
மணி அங்கிள்! நீங்க அன்னிக்கு உங்க பேத்திக்கு
பேய் பிடிச்சதா இவங்க கிட்டே சொன்னீங்க தானே! அதை திரும்பவும் சொல்லுங்களேன்
என்றாள் செல்வி.
நான் சொன்னது உனக்கு எப்படிம்மா தெரியும்?
வினோத் உங்கிட்ட சொன்னானா?
இல்லேயே?
அப்ப எப்படி உனக்கு
தெரிஞ்சதும்மா?
எனக்கு இதுவும்
தெரியும்? நாளைக்கு நீங்க பாய்கிட்ட மந்திரிக்க போவதும் தெரியும்! ஆனா
இதுக்கெல்லாம் பயப்படமாட்டாள் இந்த வீணா! என்றாள் செல்வி.
என்ன என்ன சொன்னே?
அங்கிள் என்னாச்சு கதையை
சொல்லுங்களேன் என்று சிரித்தாள் செல்வி
மணி அவளையே மிரட்சியாக
பார்த்தார்.
திருப்பதி பஸ் நிலையத்தில் முகேஷ் தம்புடு!
முகேஷ் தம்புடு! நில்லண்டி! என்று தன்னை
துரத்தி வரும் அந்த பைத்தியக்காரனை பார்த்து சற்று மிரண்டுதான் போய்விட்டான். இருந்தாலும் ஓடக்கூடாது! என்னதான் நடக்கிறது
என்று பார்த்து விடலாம் என்று நின்று நான் தான் முகேஷ்! உங்களுக்கு என்ன வேணும்
எனக்கு தெலுங்கு தெரியாது தமிழில் செப்பண்டி! என்றான்.
ஏன் தம்பி! தெலுங்க்கு தெலேதுன்னு சொல்லிட்டு
செப்பண்டின்னு தெலுகுல மாட்லாட்தாறே என்றான் அவன்.
ஓ! சாரி! எனக்கு ஒண்ணு ரெண்டு தெலுங்கு
வார்த்தைகள் தெரியும் உங்களுக்கு புரிய வைக்கறதுக்காக சொன்னேன். நீங்க நல்லா தமிழ்
பேசறீங்க?
நான் தமிழ் நாடுதான் தம்பி! பிழைப்புக்காக
இங்க வந்து கத்துகிட்டதுதான் தெலுங்கு!
சரி உங்களுக்கு என்ன வேணும்? ஏன் என்னை
கூப்பிட்டீங்க? என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்? என்று கேள்விகளை அடுக்கினான்
முகேஷ்.
நீங்கதான் வேணும் தம்பி! உங்க சித்தப்பாருதான்
அழைச்சிட்டு வரச் சொன்னாரு! அவர்தான் உங்க அடையாளத்தையும் பேரையும் சொன்னாரு.
என்றான் அவன்.
என்னது எங்க சித்தப்பா அழைத்து வரச் சொன்னாரா?
அவருக்கு நான் வருவதை இன்பர்மேஷன் பண்ணவே இல்லையே? அவர் எப்படி கூப்பிட்டு
வரச்சொல்லியிருப்பார்? முகேஷ் யோசித்துக் கொண்டிருக்க
தம்புடு! சுவாமிஜி அந்துரு தெலுசு! அவருக்கு
எல்லாம் தெரியும்! அவர்தான் எங்க தெய்வம்! அவருக்கு தெரியாதது எதுவும் இல்லை!
அவருதான் என்கிட்டே உன்னை அழைத்து வரச் சொன்னது என்று அவன் கூறவும். முகேஷ் தயங்கினான்.
உங்க பேரு என்ன?
சந்திரன்! நான்
அவராலத்தான் உயிரோட இருக்கேன்! சாக கிடந்த என்னை காப்பாத்தினவரு அவரு! நீ என்னை
நம்பி தாரளமா வரலாம் என்றான்.
இல்லே! நான் கிளம்பினதுல இருந்தே பிரச்சனை!
அதான் யோசிக்கிறேன்
எல்லாம் சுவாமிஜி
பார்த்துப்பாரு! நீ வா! வந்து என் ஆட்டோவில் உக்காரு! பத்தே நிமிசத்துல
சுவாமிஜியோட குடிலுக்கு போயிடலாம் என்றான்.
அப்போது முகேஷின் செல்போன் ஒலித்தது! எடுத்தான்
சித்தப்பா காலிங் என்று எழுத்துக்கள் மின்ன ஆன் செய்து காதில் வைத்தான்.
முகேஷ்! உன்னை தேடி சந்திரன்னு ஒருத்தன்
வந்திருக்கானா?
ஆமாம் சித்தப்பா! நீங்க
அனுப்பிச்சதா சொல்றார்!
நான் தான் அனுப்பினேன் அவன் கூட கிளம்பி நம்ம
வீட்டுக்கு வந்திரு உனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியும்! எல்லாம் நான்
பார்த்துக்கறேன் என்றார்.
முகேஷ் ஆச்சர்யத்துடன் செல்லை ஆப் செய்து வாங்க
போகலாம் என்று சந்திரனின் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.
ஆட்டோ திருச்சானூர் சாலையில் சீறிப் பாய்ந்தது!
மிரட்டும்(12)
தங்கள் வருகைக்கு மிக்க
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
தொடருங்கள் அருமையாக உள்ளது..
ReplyDeleteதினபதிவு திரட்டி
இந்த முறை படங்களும் மிரட்டின... தொடர்கிறேன்...
ReplyDelete