தாக்க வருகிறது நிலம் புயல்! தப்பிக்க சில டிப்ஸ்! தட்ஸ் தமிழ் தகவல்!
சென்னை: சென்னைக்கு அருகே மகாபலிபுரம் அல்லது கல்பாக்கத்தில் நிலம் புயல் நாளை கரையைக் கடக்கப் போகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளளது. அண்மையில் தானே புயலை தமிழகம் எதிர்கொண்டது.மணிக்கு நூறுகிலோ மீட்டருக்கும் மேலாக வீசிய கொடுங்காற்றினால் கடலூர் மாவட்டமே நிர்மூலமானது. இந்தப் புயலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் புயலாக நிலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வுநிலை மையம் கொண்டபோது அதாவது கடந்த வாரமே தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. புயல் சென்னை நோக்கி வருவதும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர மக்களே கவனம் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீனவர்களே கடலுக்குள் போகாதீர்கள் கடல் சீற்றமாக இ...