தளிர் லிமரைக்கூக்கள்!
தமிழ் தோட்டம் என்னும் தளத்தில் ஹைக்கூ சென்ரியு, லிமரைக்கூ என்று பல கவிஞர்கள் தமது படைப்புக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் இணைந்துள்ள நான் நண்பர் கவியருவி ரமேஷ் மூலம் லிமரிக் எழுத பயின்றேன் சில லிமரிக்குக்களை எழுதியும் வந்தேன்.
லிமரிக் பற்றி கவிஞரின் விளக்கம் கீழே அதன் பின்னர் எனது லிமரிக்குகள்! படித்து கருத்திட்டால் அகமகிழ்வேன்! மிக்க நன்றி!
லிமரைக்கூ
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது.
தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது.

வார்த்தை தடுமாறினால் பிழை!
வான் மேகம் தடம் மாறினால்
வராது மழை!
வான் மேகம் தடம் மாறினால்
வராது மழை!
மழையிலிருந்து காப்பது குடை!
மற்றோருக்கு அதை கொடுத்து
மனிதம் காப்பது கொடை
மற்றோருக்கு அதை கொடுத்து
மனிதம் காப்பது கொடை
அதிகாலையில் விழிப்பு
அதிக கவனமுடன் படிப்பு
அளித்துவிடும் வெற்றிவாய்ப்பு
அதிக கவனமுடன் படிப்பு
அளித்துவிடும் வெற்றிவாய்ப்பு
வியர்வை சிந்தினால் உழைப்பு
உயர்வை எண்ணினால்
வராது களைப்பு
உயர்வை எண்ணினால்
வராது களைப்பு
உருவத்தில் சிறியது சித்தெறும்பு
உணர்த்தும் நீதி எது?
சிறுசேமிப்பு
உணர்த்தும் நீதி எது?
சிறுசேமிப்பு
யானைக்கு ஒருகை அது தும்பிக்கை!
மனிதனுக்கு இருகையுடன்இருக்கவேண்டும்
தளராத நம்பிக்கை!
மனிதனுக்கு இருகையுடன்இருக்கவேண்டும்
தளராத நம்பிக்கை!
உழைத்தவன் உறங்கினால் களைப்பு
படித்தவன் சோர்ந்துதூங்கினால்
கிடையாது பிழைப்பு
படித்தவன் சோர்ந்துதூங்கினால்
கிடையாது பிழைப்பு
பூமியில் இருக்கலாம் மேடுபள்ளம்
புவி ஆள்வோரிடம் இருக்க வேண்டும்
உயர்ந்த உள்ளம்
புவி ஆள்வோரிடம் இருக்க வேண்டும்
உயர்ந்த உள்ளம்
மறதி மாணவனின் கெடுதி!
விரைந்து அதனை உதறிவிடின்
உயர்வு உறுதி!
விரைந்து அதனை உதறிவிடின்
உயர்வு உறுதி!
இயற்கையின் சொத்து இந்த பூமி!
இடையூறு செய்து ஆக்கிரமித்தால்
ஏன் வராது சுனாமி!
இடையூறு செய்து ஆக்கிரமித்தால்
ஏன் வராது சுனாமி!
வெள்ளம் வந்தால் பள்ளம் நிரம்பும்
உள்ளம் வெந்தால் வெடிக்கும் இதயத்தில்
வேதனை நிரம்பும்!
உள்ளம் வெந்தால் வெடிக்கும் இதயத்தில்
வேதனை நிரம்பும்!
விளக்கின் அடியில் இருக்கலாம் இருட்டு!
விலக்க வேண்டுமே பொய்யும் புரட்டு!
மறைய வேண்டுமே அறியாமை இருட்டு
விலக்க வேண்டுமே பொய்யும் புரட்டு!
மறைய வேண்டுமே அறியாமை இருட்டு
ஞாயிறு விடுமுறை
போதவில்லை பொழுது, காத்திரு
வரும் வாரம்வரை
போதவில்லை பொழுது, காத்திரு
வரும் வாரம்வரை
இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!
கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
அரசியலில் புகுந்தாச்சி
காழ்ப்புணர்ச்சி!
அதனாலே எல்லாமே தலைகீழா மாறிப்போச்சி!
மக்களின் வரிப்பணம் தானே வீணாச்சி!
அதனாலே எல்லாமே தலைகீழா மாறிப்போச்சி!
மக்களின் வரிப்பணம் தானே வீணாச்சி!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்க்கள்! மிக்க நன்றி!
அருமை அருமை
ReplyDeleteபடிக்கச் சுவையாகவும் சுகமாகவும் இருந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
அருமையான பகிர்வு
ReplyDeleteஇந்தக் கவிதை எனக்குப் புதியது படிப்பதற்கு இலகுவான வார்த்தைப் பிரயோகங்கள்...
தொடருங்கள்
nice! different! thanks for sharing!
ReplyDelete