Posts

வளர்ச்சி தரும் அட்சய திருதியை வழிபாடு!

Image
வளர்ச்சி தரும் அட்சய திருதியை வழிபாடு! ஒவ்வொரு மாதத்திற்கு இரண்டு பட்சங்கள். சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சம் என்று அவை சொல்லப்படுகின்றது. அமாவாசை முதல் பவுர்ணமி வரையிலான நாள் சுக்லபட்சம். பவுர்ணமி கழித்து அமாவாசை வரை கிருஷ்ணபட்சம்.     வைகாச மாத சுக்லபட்ச திருதியை திதி அட்சய திருதியை என்று வழங்கப்படுகின்றது. இந்த நாளில் செய்யப்படும் செயல்கள், தானங்கள் குறையாது வளரும் என்பது புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. குசேலர் இந்த நாளில் பகவான் கிருஷ்ணரை தரிசித்து வளம் பெற்றார் என்பது புராணம்.   க்ஷயம் என்றால் குறைவு என்று பொருள். புற்றுநோயைக் கூட க்ஷய ரோகம் என்று சொல்வார்கள். புற்றானது நமது செல்களை அழித்து ஆயுளை அழிக்கிறது குறைக்கிறது. அக்ஷயம் என்றால் குறைவில்லாத என்று பொருள்.  அக்ஷய திருதியை அன்று நகைகளை வாங்கி குவிக்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.  அக்ஷய திருதியை அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், தானங்கள், ஹோமங்கள், ஜபங்கள் குறைவில்லாது இருந்து நம்மை காக்கும் என்று பொருள்.    நம்முடைய முன்னோர்களுக்கு அன்றைய தினம் தர்ப்பணம் செய்...

அம்மா எனை வாழ்த்திடு! அன்னையர் தின கவிதை!

Image
அன்னையர் தின கவிதை!   அம்மா எனை வாழ்த்திடு! எண் சாண் வயிறினிலே எட்டிஉதைத்த என்னை பத்துமாதம் சுமந்தாய்! நான் உருவாகும் வேளையிலே உன் உடல்வலிகள் பொறுத்தாய்! உண்டிட்ட உணவை எல்லாம் எனக்காக நீ எடுத்தாய் வாந்தி! ஒருக்களித்துபடுத்து என் சுவாசம் காத்தாய்! புள்ளைக்கு ஆகாதென புதுத் துணி நீ தவிர்த்தாய்! மேடிற்ற வயிறை தடவியே மகிழ்ந்தாய்! மூடிவைத்த சிப்பிக்குள் முத்தாய் எனை நீ காத்தாய்! பிரசவ வலி எடுத்து நீ துடித்த வேளையிலும் பிஞ்சு நான் உதித்ததும் உன் வேதனைகள் மறந்தாய்! பாலூட்டி சீராட்டி பாசமுடன் வளர்த்தாய்! பிள்ளைக்கு பிடிக்குமென பிரமாதமாய் நீ சமைப்பாய்! அன்றைக்கு பிடிவாதமாய் நண்பண்வீட்டில் சாப்பிட  உன் முகம் வாடும்! தந்தையின் கோபத்திற்கு தடுப்பணை நீ போட்டாய்! இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் நீ எனை காப்பாய்! பிள்ளைக்கு தாய்தானே கடவுள்! உன் பசியை மறைத்து என் பசி தீர்த்திடுவாய்! என் மனதை நீ படம் போல படித்திடுவாய்! உன் ஆசை என்னவென்று நானறியும் முன்னே என்  தேவை நீ பூர்த்தி செய்தாய்! உலகத்தில் ஓர் ஆயிரம் உறவிருந்தாலு...

நல்ல சொல் பேசு! பாப்பா மலர்!

Image
நல்ல சொல் பேசு! பாப்பா மலர்!   முன்னொரு காலத்தில் ஒரு ஊருல ஒரு புருஷனும் பொஞ்சாதியும் இருந்தாங்க! அவங்க ரொம்ப பொறாமை புடிச்சவங்க! அடுத்தவங்க வாழ்ந்தா பிடிக்கவே பிடிக்காது. அப்படியே வெம்பி சாவாங்க. அவங்க வீட்டுக்கு பக்கத்துல இன்னொரு புருஷனும் பொஞ்சாதியும் இருந்தாங்க. இவங்க ரொம்பவும் நல்லவங்க. மத்தவங்களுக்கு ஒன்னுன்னா உடனே ஓடிப்போய் உதவி செய்வாங்க. கஷ்டமான நிலையிலும் அடுத்தவங்க கஷ்டத்தை போக்கடிக்க முயற்சி பண்ணுவாங்க.   ஒரு நாள் அந்த நல்ல புருஷன் காட்டுக்கு விறகு வெட்ட கிளம்பினான். ரொம்ப நேரம் காட்டுக்குள் அலைஞ்சு பட்டுப் போன காய்ந்து போன மரங்களை வெட்டி எடுத்துட்டு கிளம்பறப்போ “ஐயோ என்னை காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்”னு ஒரு பொண்ணோட குரலு வந்துச்சு.   இவன் ஓடிப் போய் பார்த்தப்ப ஒரு சிறுத்தை ஒரு பெண்ணை துரத்திக்கிட்டு  இருந்துச்சு. இவன் துணிச்சலா தன் கிட்டே இருந்த கோடரியாலே சிறுத்தை மேல ஒரு போடு போட்டான். அவ்வளவுதான் சிறுத்தை ஒரு அலறலோட  செத்து விழுந்தது. அப்போ அந்த பொண்ணு ஒரு அழகிய தேவதையா உருமாறிச்சு.      நண்பா! நான் வேண்டு...

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 65

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 65 1.    மந்திரியாரே! ஆராய்ச்சி மணியின் நாவை அறுத்துவிட்டதாக புகார் வந்துள்ளதே…! நீங்கள் தான் மன்னா! ஆராய்ச்சி மணியின் ஓசை நம் நாட்டில் ஒலிக்காமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளச் சொன்னீர்கள்! அதான் நாவை அறுத்துவிட்டேன்! 2.    அவரை ஏன் அமலாக்க பிரிவினர் அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டு போறாங்க! தினமும் ஓட்டல்ல இட்லியும் வடையும் சாப்பிட்டு வந்தாராம்! அதான் அளவுக்கு அதிகமா சொத்து சேர்த்து இருக்கிறதா கைது பண்ணிட்டு போறாங்க! 3.    தலைவர் பேச்சை கேக்க வர மக்கள் ஆர்வமா துண்டு சீட்டில் எதையோ எழுதி கேக்கறாங்களே என்ன அது? தினமும் ஒரு ரெசிபி தலைவர் சொல்றார் இல்லையா அதான் புது புது ரெசிபியை நேயர் விருப்பமா கேக்கறாங்க! 4.    தலைவர் தொகுதியிலே நுழைஞ்சதும் மக்கள் அப்படியே சூழ்ந்து நின்னு இத்தனை நாளா தொகுதிக்கு என்னபண்ணீங்க இப்ப வந்து நிக்கறீங்களேன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க! அப்புறம்? இதுவரைக்கும் தொகுதிபக்கம் எட்டி பார்க்காம இருந்ததே நான் உங்களுக்கு செஞ்ச நல்ல காரியம்தானேன்னு தலைவர் கேக்கவும் ஷாக் ஆயிட்டாங்...