வளர்ச்சி தரும் அட்சய திருதியை வழிபாடு!
வளர்ச்சி தரும் அட்சய திருதியை வழிபாடு! ஒவ்வொரு மாதத்திற்கு இரண்டு பட்சங்கள். சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சம் என்று அவை சொல்லப்படுகின்றது. அமாவாசை முதல் பவுர்ணமி வரையிலான நாள் சுக்லபட்சம். பவுர்ணமி கழித்து அமாவாசை வரை கிருஷ்ணபட்சம். வைகாச மாத சுக்லபட்ச திருதியை திதி அட்சய திருதியை என்று வழங்கப்படுகின்றது. இந்த நாளில் செய்யப்படும் செயல்கள், தானங்கள் குறையாது வளரும் என்பது புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. குசேலர் இந்த நாளில் பகவான் கிருஷ்ணரை தரிசித்து வளம் பெற்றார் என்பது புராணம். க்ஷயம் என்றால் குறைவு என்று பொருள். புற்றுநோயைக் கூட க்ஷய ரோகம் என்று சொல்வார்கள். புற்றானது நமது செல்களை அழித்து ஆயுளை அழிக்கிறது குறைக்கிறது. அக்ஷயம் என்றால் குறைவில்லாத என்று பொருள். அக்ஷய திருதியை அன்று நகைகளை வாங்கி குவிக்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை. அக்ஷய திருதியை அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், தானங்கள், ஹோமங்கள், ஜபங்கள் குறைவில்லாது இருந்து நம்மை காக்கும் என்று பொருள். நம்முடைய முன்னோர்களுக்கு அன்றைய தினம் தர்ப்பணம் செய்...