இந்திர ஜாலம்! விக்கிரமாதித்தன் கதை! பாப்பாமலர்!

இந்திர ஜாலம்! விக்கிரமாதித்தன் கதை! பாப்பாமலர்! ஒரு சமயம் விக்கிரமாதித்தன் தன் மந்திரி பிரதானிகளுடன் அரச சபையில் அமர்ந்திருந்தான். அப்போது இந்திரஜாலம் கற்ற ஒருவன் அங்கு வந்தான். அவனை வரவேற்றான் விக்கிரமாதித்தன். அப்போது அந்த ஜாலக்காரன், “அரசே! சகல கலைகளிலும் தாங்கள் தேர்ச்சி உள்ளவர். உங்கள் முன்னே என்னுடைய வித்தைகளை காட்டி என் திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன்! அனுமதி அளிக்க வேண்டும்!” என்றான். “இப்போது எனக்கு நேரமில்லை! அரசவையில் முக்கிய பணிகள் இருக்கிறது! நாளை உன் திறமையை கண்டுகளிக்கிறேன்!” என்றான் விக்கிரமாதித்தன். “தங்கள் சித்தப்படியே!” என்ற மந்திரவாதி விடைபெற்றான். மறுநாள் அரசன் விக்கிரமாதித்தன் சபையில் அமர்ந்திருந்த போது கையில் கத்தியுடன் பருத்த உருவத்துடன் நன்கு வளர்ந்த தாடியுடனும் வீரம் ததும்பும் முகத்துடனும் வீரன் ஒருவன் கம்பீரமாக வந்தான். அவனுடன் அழகிய பெண் ஒருத்தியும் வந்தாள். அந்த வீரன் அரசனை வணங்கி நின்றான். “வீரனே! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று விக்கிரமன் விசாரித்தார். “ மன்னா!...