கூட்டணி சரியில்லைன்னு தலைவர் புலம்புவது எதற்கு? ஜோக்ஸ்!
ஜோக்ஸ்! 1. தலைவர் ப்ளெக்ஸ் பேனரை பார்த்ததும் கடுப்பாயிட்டாரா ஏன்? ஐந்து வருடத்திற்கு அப்புறம் தொகுதி எம்.எல்.ஏவை கண்டுபிடித்து கொடுத்த தேர்தலுக்கு நன்றின்னு யாரோ பேனர் வச்சிருக்காங்க! 2. கூட்டணி சரியில்லைன்னு தலைவர் புலம்பிக்கிட்டிருந்தாரே இப்ப இருக்கிற கூட்டணி பிடிக்கலையா? நீ வேற… சரக்குக்கு சைட் டிஷ் சரியில்லைங்கிறததான் அப்படி சொன்னாரு! 3. நம்ம தலைவரை கட்சியை விட்டு நீக்கினதும் எரிமலையா சீறுவார்னு பார்த்தேன்… அப்புறம்? புஸ்வானமா பொசுங்கிட்டாரு! 4. கேபிள் டீவி கனெக்ஷனை கட் பண்ணிட்டு அப்படி விழுந்து விழுந்து படிக்கிறீங்களே என்ன எக்ஸாம்? பையனுக்கு எல்.கே.ஜி யில சீட் வாங்கறதுக்கு தான்! 5. அந்த தியேட்டர்ல மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்? டிக்கெட் கொடுக்கும் போது ஒரு புதுப்பட திருட்டு விசிடி கொடுக்கிறாங்களாம்! அதான்!