உண்மை பேசிய திருடன்! பாப்பா மலர்!
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் ஒரு பெரிய திருடன் ஒருவன் வசித்து வந்தான். மிக்ச் சாதாரணமாக யார் வீட்டிலும் புகுந்து திருடி விடுவான். திருடினாலும் அவனிடம் ஒரு உயர்ந்த குணம் இருந்தது அது பொய் பேசாமை! இந்த குணம் அவனது தாயால் அவனுக்கு கிட்டியது. சிறு வயதில் அவனது தாய் நோய் வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தாள். அப்போது இந்த திருடனை அழைத்தாள். இவனோ அப்போதே பெரிய பெரிய இடங்களில் திருடி கோடீஸ்வரன் ஆகும் எண்ணத்தில் இருந்தான். மகனின் தீய பழக்கம் பிடிக்காத அந்த அன்பு அண்ணை மகனே பிறர் பொருளை களவாடுவது குற்றம் இல்லையா? அதை விட்டு விடு உழைத்து பிழை களவாணி என்ற பெயர் பெறாதே! என்று அன்போடு அறிவுரை கூறினாள். இளமைத்திமிரில் தாயின் அறிவுரை அவனுக்கு கசந்தது. அம்மா! இந்த திருட்டு எனது பிறவிக் குணம். அதை என்னால் விட முடியாது. நான் பல கனவு கண்டு வருகிறேன். அதற்கெல்லாம் திருடாவிட்டால் முடியாது. ஆகவே இதை தவிர்த்து வேறு ஏதாவது கேளேன் என்றான் மகன். தன் கடைசி காலத்தில் மகனை திருடனாக விட்டு போகிறோமே என்ற வருத்தத்தில் அந்த தாய், மக...