Posts

உண்மை பேசிய திருடன்! பாப்பா மலர்!

Image
முன்னொரு காலத்தில் ஒரு  நாட்டில் ஒரு பெரிய திருடன் ஒருவன் வசித்து வந்தான். மிக்ச்  சாதாரணமாக யார் வீட்டிலும் புகுந்து திருடி விடுவான். திருடினாலும் அவனிடம் ஒரு உயர்ந்த குணம் இருந்தது அது பொய் பேசாமை! இந்த குணம் அவனது தாயால் அவனுக்கு கிட்டியது.     சிறு வயதில் அவனது தாய் நோய் வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தாள். அப்போது இந்த திருடனை அழைத்தாள். இவனோ அப்போதே பெரிய பெரிய இடங்களில் திருடி கோடீஸ்வரன் ஆகும் எண்ணத்தில் இருந்தான். மகனின் தீய பழக்கம் பிடிக்காத அந்த அன்பு அண்ணை  மகனே பிறர் பொருளை களவாடுவது குற்றம் இல்லையா? அதை விட்டு விடு உழைத்து பிழை களவாணி என்ற பெயர் பெறாதே! என்று அன்போடு அறிவுரை கூறினாள்.      இளமைத்திமிரில் தாயின் அறிவுரை அவனுக்கு கசந்தது. அம்மா! இந்த திருட்டு எனது பிறவிக் குணம். அதை என்னால் விட முடியாது. நான் பல கனவு கண்டு வருகிறேன். அதற்கெல்லாம் திருடாவிட்டால் முடியாது. ஆகவே இதை தவிர்த்து வேறு ஏதாவது கேளேன் என்றான் மகன்.    தன் கடைசி காலத்தில் மகனை திருடனாக விட்டு போகிறோமே என்ற வருத்தத்தில் அந்த தாய், மக...

நான் ரசித்த சிரிப்புகள் 20 மன்னர் ஜோக்ஸ்!

Image
நான் ரசித்த சிரிப்புகள் 20  மன்னர் ஜோக்ஸ்! திறமை எங்கிருந்தாலும் நம் மன்னர் ஓடிச் சென்று பாராட்டுவார்! அதற்காக போர்க்களத்தில் எதிரி மன்னனை ஓடிச் சென்று பாராட்டுவது நன்றாக இல்லை!                             எஸ். கோபாலன் மன்னரை கிரிக்கெட் போட்டி பார்க்க அழைத்து வந்தது தப்பாப் போச்சு! ஏன்? சாமரம் வீச அந்த சியர்ஸ் கேர்ள்களை பேசி முடிக்கச் சொல்கிறாரே!                    சொக்கம்பட்டி தேவதாசன். குளம்புச் சத்தம் கேட்கிறதே... எதிரி நாட்டு மன்னன் குதிரைப் படையோடு வருகிறானோ? மன்னா! உங்கள் பயத்திற்கு ஒரு அளவே இல்லையா?.. அதுமகாராணி வைக்கிற புறாக் குழம்பு சத்தம்!                              ...

பேச்சியம்மனான சரஸ்வதி

Image
பேச்சியம்மனான சரஸ்வதி புராணக்கடவுள்களுக்கும் சிறு தெய்வங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. கிராமப்புறங்களில் புராணக்கடவுளர்கள் அவர்கள் பகுதிக்கேற்றவாறு பெயர் சூட்டி மகிழ்கின்றனர். வழிபடுகின்றனர். துர்கை அம்மனின் வடிவான தெய்வங்கள் பல்வேறு பெயர்களில் கிராம தெய்வங்களாக உள்ளன. அது போல சரஸ்வதியின் வடிவான தெய்வம் பேச்சியம்மன் என்று வழிபாடு செய்யப்படுகிறது. கல்விக் கடவுளாகிய சரஸ்வதிக்கு நாமகள், வாக் தேவி, கலைமகள் என்று பெயர்கள் உள்ளன.. நாமகள் என்பதே நாட்டுப்புறதெய்வங்களில் பேச்சியம்மனாக வணங்கப்படுகின்றன. நல்ல பேச்சாளாராக வர வேண்டுமெனில் பேச்சியம்மனை வணங்குங்கள். ஆகா!  முத்து முத்தா பேசுபவர் என்று புகழ்கிறோம் அல்லவா? அம்மனுக்கு முத்துப் பேச்சி என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது. கல்வி கலையில் சிறக்க பேச்சியம்மன் வழிபாடு நன்மை தரும். ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கரம் என்னுமிடத்தில் ஐந்து முகங்களும் பத்து கைகளும் கொண்டு’காயத்ரி’ என்னும் பெயரில் அம்பாள் காட்சி தருகிறாள். கவுதம முனிவரின் மனைவியான அகலிகையை விரும்பிய பாவத்தால் இந்திரனுக்கு சாபம் ஏற்பட்டது. அதை போக்க பிரம்மனை ந...

நல்லதை பேசச்செய் நாமகளே! சரஸ்வதி பூஜை ஸ்பெஷல்!

Image
நல்லதை பேசச்செய் நாமகளே!சரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் இதைப் பாராயணம் செய்தால் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் *கலைமகளே! வெண்பளிங்கு நிறத்தவளே! ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அருள்பவளே! தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவளே! நல்லறிவினை வழங்க என் உள்ளத் தாமரையிலும் எழுந்தருள்வாயாக. * வேதம் நான்கிற்கும் வித்தகியே! பூரணநிலவாக பிரகாசிப்பவளே! குளிர்ச்சி மிக்க முத்துமாலைகளை அணிந்திருப்பவளே! அறிவுடைய சான்றோர்களால் துதிக்கப்படுபவளே! உன்னையல்லால் எனக்கு வேறு கதி யாருமில்லை. * பூமி, சுவர்க்கம், பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் ஆள்பவளே! கலைகளின் நாயகியே! நான்கு திருமுகங்களால் வேதம் ஓதும் பிரம்மதேவனின் துணைவியே! மயில் போன்ற சாயலைக் கொண்டவளே! எப்போதும் உன் பொன் போன்ற திருவடிகளை வணங்கும் பாக்கியத்தை அருள்வாயாக. * அறியாமை என்னும் இருளைப் போக்குபவளே! ஒப்பற்ற வீணையை கையில் ஏந்தி இசைப்பவளே! வேதங்களின் முடிவுப்பொருளாகத் திகழ்பவளே! மலர்க்கொடி போன்ற மென்மை மிக்கவளே! எப்போதும் என் நாவில் அமர்ந்து நல்லவற்றைப் பேச வைப்பாயாக. * குயில்போல இனிய மொழியாளே! அன்னம் போல நடை பயில்பவளே! இளம் பெண்மானாக இருப்ப...

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 11

Image
பேய்கள் ஓய்வதில்லை!        பகுதி 11 உங்கள் ப்ரிய “பிசாசு” முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதாக ஊரே பேச அவள் நடந்து கொள்ளும் விதமும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. பூஜாரியை மிரட்டிய அவள் ஒரு பூட்டிய வீட்டின் முன் நின்று சாப்பாடு போடும்மா என்று கேட்க உள்ளிருந்தும் பதில் வருகிறது. பஞ்செட்டியில் வசிக்கும் முகேஷின் நண்பன் ரவி பேய் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் அவன் செயல்களும் வித்தியாசமாக இருக்க பயந்து போன முகேஷ் திருப்பதிக்கு அழைத்துச் செல்கிறான். ஆனால் பாதி வழியில் காணாமல் போகிறான் ரவி. பயந்து போனமுகேஷ் அவனை தேட காணாமல் வீட்டுக்கு போன் செய்கிறான். அங்கும் அவன் இல்லை என்று தகவல் வர பயணத்தை தொடர்கிறான். அப்போது ரவியிடம் இருந்து போன் வருகிறது. இரண்டு வார இடைவெளியில் கதையை மறந்தவர்கள் மற்றும் புதியவர்கள் கீழே சென்று லிங்கை பயன்படுத்தி படித்து வரவும். முந்தைய பகுதிகளை படிக்க லிங்க் இதோ! http://thalirssb.blogspot.in/2012/06/blog-post_3637.html பகுதி 1 http://thalirssb.blogspot.in/2012/07/2.htm...