அலட்சியத்தால் பலியான இளம் பிஞ்சுகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!
பள்ளிகளின் அலட்சியமும் பரிதாப மரணங்களும்! வருடா வருடம் பள்ளிகளின் அலட்சியத்தால் பிஞ்சுகள் இறப்பது தொடர்கதையாகிவிட்டது. ஆயிரக்கணக்கில் வேன் ஃபீச் வாங்கும் பள்ளிகள் முடிந்த வரை பெற்றோரின் பர்ஸை காலியாக்குவதில் செலுத்தும் கவனத்தில் சிறிதுகூட அந்த வேன்களின் பராமரிப்பில் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் பரிதாபமான உண்மை! வேன்களில் அளவுக்குமீறி பிள்ளைகளை திணித்துக்கொண்டு புளிமூட்டைகளாய் செல்லும் வேன்களின் டிரைவர்களுக்கு பெரும்பாலும் ஓட்டுனர் உரிமம் கூட இருப்பதில்லை!ஆனால் இதெல்லாம் பள்ளிகளின் தாளாளர்களுக்கோ முதல்வர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ அவசியம் இல்லை! அவர்களுக்கு வேண்டியது பணம்! பணம்! இவர்களின் அலட்சியத்தால் நேற்று மேலும் ஒரு பிஞ்சு தன் இன்னுயிரை ஈந்து இருக்கிறது! பஸ்ஸில் இருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்து பின் சக்கரத்தில் அடிபட்டு பலியான அச்சிறுமியின் வயது நான்கு.சென்னை தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் பகுதியில் இயங்கி வரும் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி. மாணவியின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். ஏழையாக இருந்தாலும் தன் மகளை நன்கு படிக்க வைத்துபெரிய...